Latest Updates
-
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
புத்தாண்டு பார்ட்டிக்கு பிறகு ஹாங்கோவர் குணமாக உங்க கிச்சனில் இருக்கும் இந்த 4 பொருட்களே போதுமாம்...!
2024- ஆம் ஆண்டு வந்து விட்டது, புத்தாண்டு என்பது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடுவதற்கான தருணமாகும். மக்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்துகொண்டு, கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக கொண்டாட்டங்கள் என்றாலே மது இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது, விசேஷ சமயங்களில் மது அருந்துவது வேடிக்கையாக இருந்தாலும் அதன் பின்விளைவுகள் தான் மோசமானது.

ஒவ்வொரு முறையம் மது அருந்தும் போது மக்கள் துடிக்கும் தலைவலி மற்றும் ஒரு பெரிய ஹேங்கொவருடன் எழுந்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் 2024 ஆம் ஆண்டை படுக்கையில் கழிக்க விரும்பவில்லை என்றால், புத்தாண்டை உங்கள் முகத்தில் புன்னகையுடன் கொண்டாட உதவும் எளிய மற்றும் பயனுள்ள தீர்வுகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மோசமான ஹேங்கோவரை சரிசெய்ய வீட்டு வைத்தியம் உதவும். பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்கள் ஹாங்கோவரை குணப்படுத்தும் சமையலறைப் பொருட்களைப் பற்றி கூறியுள்ளார்கள். அவை என்னவென்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.
இஞ்சி
இஞ்சி பல நூற்றாண்டுகளாக நமது உணவிலும், மருத்துவத்திலும் தவிர்க்க முடியாத பங்கைக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அதன் சுவையும், அதிலுள்ள மருத்துவ குணங்களும்தான். இதிலுள்ள மருத்துவ பண்புகள் செரிமான உதவி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். அதன் தெர்மோஜெனிக் பண்புகள் கொழுப்பை திறம்பட எரிக்க உதவுகிறது.
புதினா
புதினா அதன் தனித்துவமான வாசனைக்கு பெயர் பெற்றது. வெறும் புத்துணர்ச்சியை விட, புதினாவில் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும் கூறுகள் உள்ளன. இது ஆல்கஹால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பை குறைக்கும்.
எலுமிச்சை
இது மிகவும் பிரபலமான ஒன்றாகும். மது அருந்திய பிறகு மறுநாள் காலை எலுமிச்சை சாறு குடிப்பதை பெரும்பாலான மக்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எலுமிச்சை வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்தது, எலுமிச்சையை தண்ணீரில் சேர்ப்பது சிறந்த நீரேற்றத்தை அதிகரிக்கிறது.
வெள்ளரிக்காய்
அதிக நீர் மற்றும் நார்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காய், நச்சுகளை வெளியேற்றவும், உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும், உங்கள் கல்லீரலை ஆதரிக்கவும் இது சரியான மூலப்பொருளாகும்.
தயாரிப்பது எப்படி?
இந்த பானத்தை தயாரிப்பது மிகவும் எளிதானது. எலுமிச்சை சாறில் இஞ்சி, புதினா, வெள்ளரிக்காய் ஆகியவற்றை சிறிது தண்ணீரில் நன்கு கலக்கவும். உங்கள் நாளைத் தொடங்குவதற்கு முன் இந்த பானத்தைக் குடிப்பது உங்களை நீரேற்றத்துடன் வைப்பதுடன், மதுவால் ஏற்படும் ஹெங்கோவரைக் குணப்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

