For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'ஹை பிபி' இருக்கா? அது எகிறாம இருக்கணுமா? அப்ப இந்த விதையை எலுமிச்சை ஜூஸோடு சேர்த்து சாப்பிடுங்க...

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும் ஒன்று தான் சியா விதைகளை எலுமிச்சை ஜூஸில் சேர்த்து குடிப்பது.

|

ஹைப்பர் டென்சன் என்று அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தம், உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் பொதுவான வாழ்க்கை முறை நோயாகும். இன்று ஏராளமான மக்கள் இந்த பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர். ஒருவரது சாதாரண இரத்த அழுத்த வரம்பு 120/80 mmHg ஆகும். ஆனால் ஒருவரது இரத்த அழுத்த அளவு 140/90 mmHg-க்கு அதிகமாகும் போது, அது உயர் இரத்த அழுத்த பிரச்சனையின் கீழ் வரும் என்று கூறப்படுகிறது.

How To Use Chia Seeds And Lemon To Control High Blood Pressure

மற்ற வாழ்க்கை முறை நோயைப் போலவே, சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சீரான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம், இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சிக்காவிட்டால், அது மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களுக்கு வழிவகுத்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயற்கை வழிகள்

இயற்கை வழிகள்

இரத்த அழுத்த பிரச்சனையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு பல்வேறு உணவுகளும், பானங்களும் உள்ளன. நம் முன்னோர்களுக்கு இரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்சனை வராமல் இருந்ததற்கு காரணம், அவர்களின் உணவுப் பழக்கங்களைக் கூறலாம். அதோடு அவர்களின் சில கை வைத்திய முறைகள், பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்கக்கூடியவையாகவும் உள்ளன. அதில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும் ஒன்று தான் சியா விதைகளை எலுமிச்சை ஜூஸில் சேர்த்து குடிப்பது. இப்போது இந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்றும், அதைக் குடிப்பதால் பெறும் நன்மைகளையும் காண்போம்.

சியா விதைகள்

சியா விதைகள்

சியா விதைகளை பலரும் ஃபளூடா வகை ஐஸ் க்ரீமில் காணலாம். இந்த விதைகள் கருப்பு நிறத்தில் காணப்படும். இந்த சிறிய விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியுள்ளன. நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் பல நுண் ஊட்டச்சத்துக்களைக் கொண்ட சியா விதைகளை அன்றாட உணவில் பலவாறு சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால், இது இரத்தத்தை மெலிதாக்கி, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி புரியும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையானது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு விரைவான ஊக்கத்தை அளிக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை மன அழுத்தத்தைக் குறைக்கவும், தொண்டைப் புண்ணை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

இத்தகைய எலுமிச்சை ஜூஸில் சியா விதைகளை சேர்த்து பருகும் போது, அது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும். இப்போது இந்த பானத்தைத் தயாரிப்பது எப்படி, எப்போது குடிக்க வேண்டும் என்பது குறித்து காண்போம்.

பானம் தயாரிக்கும் முறை

பானம் தயாரிக்கும் முறை

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இந்த பானத்தைத் தயாரிப்பது மிகவும் எளிது. அதற்கு

* சியா விதைகளை ஒரு கப் நீரில் போட்டு 1 மணிநேரத்திற்கும் குறைவாக ஊற வைக்க வேண்டும்.

* பின் அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து கொள்ள வேண்டும்.

* அதன் பின் வேண்டுமானால் சுவைக்காக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

* இந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

நினைவில் கொள்ள வேண்டியவை:

நினைவில் கொள்ள வேண்டியவை:

உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு இந்த பானத்தைக் குடிக்கும் போது, நீங்கள் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவராயின், இந்த பானத்தைக் குடிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில் சியா விதைகளும் இரத்தத்தை மெலிதாக்கும் திறன் கொண்டவை. எனவே இதில் கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Chia Seeds And Lemon To Control High Blood Pressure

How to use chia seeds and lemon to control high blood pressure? Read on to know more...
Desktop Bottom Promotion