Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உங்கள் வீட்டில் பல்லிகளின் தொல்லை அதிகமாக உள்ளதா? இனி கவலையே வேண்டாம்... இதோ விரட்ட எளிய வழிகள்..!
பல்லிகள் எல்லா வீட்டிலும் சகஜம். உலகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட பல்லிகள் உள்ளன. இவை மனிதர்களுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது. மேலும், வீட்டில் உள்ள பூச்சிகளை உண்பதால் அவை நமக்கு நல்லது. இருப்பினும், நம்மில் பெரும்பாலோர் பல்லிகளை விரும்புவதில்லை. அவர்களுக்கு பல்லிகளை பார்த்தாலே பயமாக இருக்கும். இரவு நேரங்களில் நம் வீட்டுச் சுவர்களில் பல்லிகள் தோன்றுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். வீட்டில் ஒரு பல்லி இருந்தால் போதும்.. அவை முட்டையிட்டு பெருகி வீடு முழுவதும் ஆங்காங்கே பல்லிகளால் நிறைந்து காணப்படும்.
அதுமட்டுமல்லாமல் இரவில் பல்லியின் சத்தம் நம்மை தூங்க முடியாமல் செய்கிறது. சில பேருக்கு அதன் சத்தம் எரிச்சலாகவும் இருக்கும். பல முயற்சிகள் செய்தும் உங்கள் வீட்டிலிருக்கும் பல்லிகளை விரட்ட முடியவில்லை என கவலையாக இருக்கா? அப்படிப்பட்டவர்களுக்காக இப்போது பல்லிகளை விரட்டுவது எப்படி? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

1. பொதுவாக பூச்சிகளுக்கு அஞ்சும் நபர்கள் நம்மிடையே பலரும் உண்டு. குறிப்பாக பல்லியைக் கண்டால் பலரும் பதறியடித்து அலறுவார்கள். ஆனால் அந்த பல்லிகளோ எல்லா வீட்டிலும் எங்காவது சுவரில் தென்பட்டு பயத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தும்.
2. அதனால் இதை வீட்டை விட்டு விரட்ட, வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். வீட்டின் உட்புற சுவர்கள் மற்றும் தரையை பாக்டீரியா எதிர்ப்பு கரைசல் மூலம் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். ஜன்னல்கள் மற்றும் மூலைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
3. காபி மற்றும் புகையிலை தூள் தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்யவும். அந்த கட்டிகளை சுவர்களில் ஒட்டவும். மயில் இறகுகள் பல்லிகளை பயமுறுத்துகின்றன. அவற்றை வீட்டைச் சுற்றி வைக்கவும்.
4. பல்லிகள் ஒளியால் ஈர்க்கப்படுகின்றன. அதனால் முடிந்தவரை பல்புகளை அணைத்தால் பல்லிகள் அதிகளவில் வராது. அதனால் தேவையற்ற நேரங்களில் லைட்டை நிறுத்திவிட்டு இருந்தால் பல்லிகள் வெளிச்சம் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிவிடும்...
5. வெங்காயத்தின் கடுமையான வாசனையை பல்லிகள் விரும்புவதில்லை. வெங்காயத்தை வெட்டியோ வைத்தாலோ அல்லது சாற்றை சுவர்களில் தெளித்தால் பல்லிகள் போய்விடும்.
6. வெங்காய தோல்களையும் வெட்டி ஜன்னல்கள் மற்றும் மூலைகளில் வைத்தால் போதும். நாப்தலீன் பந்துகளின் வாசனையிலிருந்தும் பல்லிகள் ஓடுகின்றன. அவற்றை வீட்டில் அங்காங்கே வைப்பது நன்மை பயக்கும்.
7. பிரியாணி இலையை எரித்து அந்த புகை வீடு முழுவதும் பரவுமாறு செய்ய வேண்டும். பல்லிகளுக்கு அந்த வாசனை பிடிக்காது. வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் இடுக்குகளிலும் பல்லிகள் இருக்கும். சுவர்களுக்கு எதிராக மரச்சாமான்களை வைக்கக்கூடாது. 6 அங்குல இடைவெளியை விட்டு வைத்திருங்கள்.
8. மயில் இறகுகள் பல்லிகளை பயமுறுத்துகின்றன. எனவே மயில் இறகுகளை வீட்டில் வைத்திருந்தால் அந்த பகுதிகளை பல்லிகள் அணுகாது. அதேபோல, காபி மற்றும் தக்காளி பொடியை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து அவற்றை வைத்தாலும் பல்லிகள் அங்கு வராது.
9. நாம் சாப்பிட்டு வீசும் முட்டை ஓடுகளை வைத்தால் அங்கெல்லாம் பல்லி வராது. அந்த வாசனைக்கு பல்லிகள் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துவிடும்.
10. கற்பூரவல்லி இலை வாசனைக்கு பல்லி வராது. எனவே, இந்த தழைகளை எரித்து அதன் புகைகளை வீட்டில் பரவ விட்டால் பல்லி தொல்லை இருக்காது.



Click it and Unblock the Notifications