Latest Updates
-
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம்
உங்களுக்கு குத பிளவு பிரச்சனை இருக்கா? உடனடி நிவாரணம் பெற இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க..
Constipation Awareness Month: உலகில் மலச்சிக்கல், குத பிளவு போன்ற பிரச்சனையால் மில்லியன் கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். நிறைய பேர் தங்களுக்கு இருக்கும் மலச்சிக்கல், குத பிளவு போன்ற பிரச்சனைகள் குறித்து மருத்துவரிடம் பேச தயங்குகிறார்கள்.
இந்த மலச்சிக்கல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தம் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் மலச்சிக்கல் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செரிமான பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது.

மலச்சிக்கல் என்பது வாரத்திற்கு 3-க்கும் குறைவாக மலம் கழிப்பது அல்லது மலம் கழிப்பதில் உள்ள சிரமத்தைக் குறிக்கிறது. பெரும்பாலும் யார் ஒருவர் மிகவும் குறைவான அளவில் நீரைக் குடிக்கிறார்களோ, நார்ச்சத்துள்ள உணவுகளை குறைவாக சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இது தவிர ஒருசில மருந்துகளை உட்கொள்ளும் போதும் மலச்சிக்கலை சந்திக்கலாம்.
மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமானால், அது மூல நோயை ஏற்படுத்துவதைத் தவிர, குத பிளவையும் உண்டாக்கும். இந்த குத பிளவு கடுமையான வலியையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். இம்மாதிரியான வலி சில சமயங்களில் தாங்க முடியாத அளவில் இருக்கும். மலச்சிக்கல் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, குத பிளவுகளில் இருந்து விடுபட உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுக்கவும்
மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணம் நார்ச்சத்துள்ள உணவுகளை குறைவாக உட்கொள்வது தான். ஏனெனில் நார்ச்சத்து தான் உடலில் சேரும் கழிவுகளை சுமூகமாக செரிமான பாதைகளில் நகர்த்தி வெளியேற்ற உதவுகிறது. இந்த நார்ச்சத்துள்ள உணவுகளை குறைவாக உட்கொள்ளும் போது, கழிவுகள் செரிமான பாதையில் நகர்ந்து செல்வது கடினமாகி, மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
இந்த மலச்சிக்கலைத் தடுக்க, நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டியது அவசியம். அதுவும் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
நீரேற்றத்துடன் இருக்கவும்
உடலில் போதுமான அளவில் நீர்ச்சத்து இல்லாவிட்டால், அது மலச்சிக்கல் மற்றும் குத பிளவிற்கு வழிவகுக்கும். எப்படியெனில் உடலில் நீர்ச்சத்து போதுமான அளவில் இல்லாத போது, கழிவுகளை வெளியேற்ற முடியாத அளவில் மலம் இறுக்கமடைகிறது. எனவே மலமான சிரமமின்றி, மலக்குடலில் பயணிக்க நீரை அதிகம் பருக வேண்டியது அவசியம்.
சுடுநீரில் சிறிது நேரம் அமரவும்
குத பிளவால் கடுமையான வலியை சந்திப்பவர்கள், அந்த வலியில் இருந்து நிவாரணம் பெற வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இப்படி வெதுவெதுப்பான நீரில் 10-15 நிமிடம் உட்காரும் போது, ஆசன வாயில் உள்ள காயங்கள் விரைவில் குணமாகும்.
மேலும் வெதுவெதுப்பான நீரானது ஆசன வாயில் உள்ள தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, எளிதில் மலம் வெளியேற வழிவகை செய்கிறது. இன்னும் சிறப்பான பலனைப் பெற, அந்த வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பு அல்லது லாவெண்டர், சீமைச்சாமந்தி போன்ற நறுமண எண்ணெய்களை சேர்த்து கலந்து கொள்ளலாம்.
மலமிளக்கிகளை பயன்படுத்தவும்
மலச்சிக்கல் மற்றும் குத பிளவுகளுக்கு மற்றொரு பயனுள்ள வீட்டு வைத்தியம் என்றால், அது மலமிளக்கிகளைப் பயன்படுத்துவது தான். இந்த மருத்துவர் பரிந்துரைக்கும் மலமிளக்கிகளைப் பயன்படுத்துவதன் மூலம், எளிதில் மலம் வெளியேறும்.
மேலும் இவை பாதுகாப்பானவை மற்றும் குறுகிய கால பயன்பாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் எந்த ஒரு மருந்தையும் பயன்படுத்துவதற்கும் முன்பும், மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
க்ரீம்களைப் பயன்படுத்தவும்
குத பிளவுகளால் சந்திக்கும் கடுமையான வலிகிளில் இருந்து நிவாரணம் அளிக்கும் பல க்ரீம்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அந்த க்ரீம்களில் பெரும்பாலும் ஹைட்ரோகார்டிசோன் போன்ற பொருட்கள் உள்ளன. இது குத பகுதியில் உள்ள வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும்.
அதோடு இந்த க்ரீம்களில் விட்ச் ஹாசல் அல்லது கற்றாழை போன்ற சருமத்தில் உள்ள காயங்களை ஆற்றும் பிற பொருட்களும் இருக்கும். இந்த வகை க்ரீம்களை மருத்துவரின் பரிந்துரையின் படி பயன்படுத்தி வந்தால், விரைவில் நல்ல நிவாரணத்தைப் பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications