பூண்டை காதில் வைப்பதால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பழங்காலம் முதல் நாம் உணவில் ஒரு மருத்துவ பொருளாக பயன்படுத்தி வரும் பொருள் பூண்டு. பூண்டை சாப்பிட்டால் வாயுத்தொல்லை ஏற்படும் என சிலர் அதை ஒதுக்குவார்கள். ஆனால், பூண்டில் இருக்கும் சிறந்த ஊட்டச்சத்துக்கள், உடல் ஆரோக்கியத்தை வெகுவாக வலுப்படுத்த பயனளிக்கிறது.

This Is What Happens When You Put Garlic In Your Ear

Image Courtesy

அந்த வகையில் பூண்டை காதில் வைத்துக் கொள்வதால் நமது உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்னென்ன என்று இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை #1

நன்மை #1

சிறு துண்டு பூண்டை காதில் வைத்துக் கொள்வது. உடல் வலி போக்கவும், நீங்கள் உலகுவாக உணரவும் பயனளிக்கிறது. இதனால் காதில் சற்று துர்நாற்றம் வரலாம். ஆயினும் அதை நீர் ஊற்றி கழுவினால் போய்விடும்.

நன்மை #2

நன்மை #2

நோய் நீக்கும் காவலன் பூண்டு. காதில் பூண்டை வைப்பதால், இது உடலில் சற்று சூட்டை அதிகரித்து, உடலில் வீக்கம் உண்டாவது, தலைவலி, காய்ச்சல், காது வலி போன்றவற்றை குணப்படுத்துகிறது என கூறப்படுகிறது.

நன்மை #3

நன்மை #3

இரவு உறங்கும் போது காதில் சிறியளவிலான பூண்டை (காதுக்குள் போய்விடும் அளவு சிறிய பூண்டு பயன்படுத்த வேண்டாம்) வைத்துக் கொள்வதால் காது வலி குணமாகும். காலையில் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.

நன்மை #4

நன்மை #4

இருமல் தொல்லையாக இருந்தால், பூண்டு, தேன் கலந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை உட்கொண்டால், இருமல் தொல்லை நீங்கிவிடும்.

நன்மை #5

நன்மை #5

பூண்டு இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும். இரத்த சுழற்சியை சீராக்கும். முக்கியமாக கொலஸ்ட்ரால் அளவை குறைக்க குறைக்க உதவும். தினமும் காலை இரண்டு பூண்டு பல் உட்கொள்வது இதய கோளாறுகள் ஏற்படாமல் காக்கும்.

நன்மை #6

நன்மை #6

இதயம் மட்டுமல்ல, உயர் இரத்த அழுத்தத்தை சரி செய்யவும் பூண்டு சிறந்தது. பூண்டு இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியுமாம்.

நன்மை #7

நன்மை #7

பூண்டு ஃபங்கஸ் இன்பெக்ஷன்களை சரி செய்யவும் சிறந்த உணவு பொருளாகும். பூண்டு எண்ணெய்யை சருமத்தில் தடவி வந்தால் நீங்கள் நல்ல மாற்றத்தை காண முடியும்.

நன்மை #8

நன்மை #8

ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-இன்ஃப்ளமேட்ரி (anti-inflammatory) பயன்கள் கொண்டுள்ள பூண்டு, மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றை குறைக்க உதவுகிறது. தினந்தோறும் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது சிறந்த பலனை அளிக்கும்.

நன்மை #9

நன்மை #9

தினமும் அலர்ஜியால் அவதிப்படும் நபர்கள் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது நல்ல பயனளிக்கும்.

நன்மை #10

நன்மை #10

பூண்டில் இருக்கும் ஆன்டி- பாக்டீரியா பயன், பல் வலியை சரி செய்ய உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Is What Happens When You Put Garlic In Your Ear

This Is What Happens When You Put Garlic In Your Ear
Subscribe Newsletter