தலைவலியை போக்க உதவும் இந்திய பாரம்பரிய எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!!

Posted By:
Subscribe to Boldsky

கணினியின் முன் அமர்ந்து பணிபுரியும் அனைவருக்கும் ஊதியத்தோடு சேர்த்து அன்பளிப்பாக வழங்கப்படும் பரிசு தான் இந்த தலைவலி. தலைவலி மட்டுமின்றி நன்கு உயிரைக் கொடுத்து உழைப்பவர்களுக்கு கண் வலி, கண் பார்வை குறைபாடும் அப்ரைசலாக தரப்படுகிறது. இதில், வேலை செய்து அலுப்பாக இருக்கிறது, அழுத்தமாக இருக்கிறது என்று வீடு திரும்பும் போது ஹெட்செட்டில் பாடல்கள் கேட்டுக் கொண்டே செல்கிறோம்.

உணவுப் பழக்கத்தினால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி!!!

இவை அனைத்துமே தலைவலியை அதிகப்படுத்தும் என்பதை தெரிந்தும் பலர் தொடர்ச்சியாக செய்வது தான் கொடுமையே. இப்போதையே காலகட்டத்தில் அவசர உதவிக்கு என்பது போல அவரவர் தலைவலி மாத்திரைகளை தங்கள் பைகளில் வைத்தே திரிகிறார்கள். தலைவலிக்கு உடனடி தீர்வாக மருந்து மாத்திரைகள் பயன்படுத்துவது தவறான அணுகுமுறை.

ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் 7 ஆச்சரியமான விஷயங்கள்!!!

எளிதாக தலைவலிக்கு தீர்வுக் காண நமது இந்திய பாரம்பரிய வீட்டு மருத்துவ முறைகளை பயன்படுத்துங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிரீன் டீ

கிரீன் டீ

தலைவலியில் இருந்து நிவாரணம் பெற கிரீன் டீ ஒரு சிறந்த பானமாக இருக்கிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் விரைவாக வலியைப்போக்க உதவுகிறது. இதில் சர்க்கரை பயன்படுத்துவதை தவிர்த்து, தேனை பயன்படுத்துவது நல்லது.

மசாலா டீ

மசாலா டீ

ஒரு கப் டீயில் கொஞ்சம் இலவங்கப் பட்டை தூள், தேன், இஞ்சி போன்றவற்றை சேர்ந்து பருக வேண்டும். இது தலைவலியில் இருந்து வேகமாக விடுபட உதவுகிறது. இஞ்சி மற்றும் இலவங்கப் பட்டை சிறந்த வலி நிவாரணியாக திகழ்கிறது.

தண்ணீர்

தண்ணீர்

மிதமான சூட்டில் நீரை பருகுவது. தலைவலிக்கான மிகவும் எளிதான வீட்டு நிவாரணம் இது தான் .கொஞ்சம், கொஞ்சமாக நீரை பருக வேண்டும். இது செரிமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. தலைவலியில் இருக்கும் போது குளிர்ந்த நீரை பருக வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறது.

நீரில் கால்களை ஊற வைப்பது

நீரில் கால்களை ஊற வைப்பது

நீரில் கால்களை ஊற வைப்பதால் தலைவலிக்கு சிறந்த முறையில் தீர்வுக் காண முடியும் என்று கூறப்படுகிறது. இதில் கொஞ்சம் கடுகு தூள் சேர்க்க வேண்டும். 10 - 15 நிமிடங்கள் ஊற வைப்பது போதுமானது. இதனால் இரத்தநாளங்களில் ஏற்படும் அழுத்தம் குறைத்து, தலைவலிக்கு தீர்வுக் காண முடியும்.

காபி

காபி

தலைவலி ஏற்பட்டால் பலரும் செய்யும் ஓர் செயல் தான் இது, காபி பருகுவது. இது ஓர் நல்ல தீர்வு தான் ஆயினும் அதிகளவு காபி குடிப்பது உங்கள் உடல் நலத்தை பாதிப்படைய வைக்கிறது. எனவே, அதிகம் காபி பருக வேண்டாம்.

யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் எண்ணெய், தலைவலிக்கு தீர்வுக் காண ஓர் தலைசிறந்த பொருளாக விளங்குகிறது. யூகலிப்டஸ் தைலம் காலம், காலமாக தலைவலிக்கு நல்ல தீர்வளித்து வருகிறது. ஆனால், இன்று நாம் பெரும்பாலும் மாத்திரைகள் உட்கொண்டு வருகிறோம்.

ஆப்பிள் சாறு வினிகர்

ஆப்பிள் சாறு வினிகர்

தலைவலிக்கு மற்றுமொரு சிறந்த வீட்டு நிவாரணமாக திகழ்கிறது ஆப்பிள் சாறு வினிகர். ஒரே டேபிள்ஸ்பூன் வினிகரை நீரில் கலந்து பருகினால் தலைவலி உடனே குறையும் என்று கூறப்படுகிறது. இதை குடித்த 15 நிமிடங்கள் வரை வேறு எந்த உணவும் உட்கொள்ள வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Home Remedies For Headaches

Everyone should must try these Indian home remedies to get rid off from headaches, Read here in tamil.
Story first published: Tuesday, October 20, 2015, 14:55 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter