ஆபிஸ்ல உக்காந்தாலே தூக்கம் தூக்கமா வருதா?

Posted By:
Subscribe to Boldsky

இப்போது ஒரு நாளை சுறுசுறுப்பாக கடப்பது என்பது அவ்வளவு எளிமையானதாக இல்லை. ஒரு பக்கம் டார்கெட் வொர்க் பிரசர் என்றால் இன்னொரு பக்கம் போதுமான ஊட்டச்சத்து இல்லாத உணவு, ஸ்ட்ரஸ்,வீட்டுப் பிரச்சனை, நண்பர்கள், சோசியல் மீடியா என நம்மைச் சுற்றி எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்க விரும்புகிறோம்.

எந்த தொல்லையும் இல்லாமல் இருந்தால், நமக்கே நாம் சரியாக வாழவில்லையோ என்ற சந்தேகம் எழும் அளவிற்கு நிலை மாறிவிட்டிருக்கிறது.

வேலைக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை தங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு, உணவிற்கு கொடுப்பதில்லை, கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு அல்லது அது கூட சாப்பிடாமல் நேரமில்லை என்று சொல்லி ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு பக்கம் ஸ்ட்ரஸ் போட்டுத் தாக்க அதை எதிர்த்து போராட வேண்டிய உடலோ சோர்ந்து கிடக்கும். இதன் பலனாக அலுவலகங்களில், பள்ளி,கல்லூரிகளில் சோர்வாக எதையும் சிரத்தையோடு செய்ய மனமின்றி உட்கார்ந்திருப்போம். அதிகமாக தூக்கம் வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன செய்யலாம் ? :

என்ன செய்யலாம் ? :

நீண்ட நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்றால் தூக்கம் வரத்தான் செய்யும். பரபரப்பாக அல்லது உங்களது முழு கவனத்தையும் செலுத்தி பணியாற்ற வேண்டிய நேரத்தில் தூங்கி வழிகிறீர்களா?

இதனால் உயர் அதிகாரிகள் உடன் பணியாற்றுவோர் மத்தியில் கிண்டலுக்கும் அவப்பெயருக்கும் ஆளாகிறீர்களா? இந்த நிலைமை கண்டிப்பாக நம்மில் பல பேர் சந்தித்திருப்போம், ஆனால் இந்த காரணங்களைச் சொல்லி எப்படி விளக்கம் கேட்பது யாரிடம் கேட்பது என்ற தவிப்புடன் இருப்பவர்களுக்குத் தான் இந்த கட்டுரை.

 காபி/டிரிங்ஸ் :

காபி/டிரிங்ஸ் :

நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த எண்ணம் இருக்கிறது. சோர்வாக உணர்ந்தால் பசியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு எதாவது சாப்பிட ஆரம்பித்து விடுவோம். தூக்கம் வந்தால் சூடாக குடித்தால் தூக்கம் கலைந்து விடும் என்று சொல்லி இரண்டு மூன்று முறை கூட காபியை குடிக்க ஆரம்பித்து விடுவோம்.

இது மிக தவறான பழக்கம்.

குடிக்க கூடாது :

குடிக்க கூடாது :

அப்படி நீங்கள் தொடர்ந்து தின்பண்டங்கள் காபி,டீ,டிரிங்கஸ் ஆகியவை குடிப்பதால் அந்த நேரத்திற்கு மட்டும் குடிக்கும் சில நிமிடங்களுக்கு மட்டும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள் ஆனால் அது நீண்ட நேரம் தொடராது.

வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து சோர்வு நீடிக்கும்.

முகம் கழுவலாம் :

முகம் கழுவலாம் :

இது சிறந்த பலனைக் கொடுக்கும், குளிர்ந்த நீரோ அல்லது சற்று வெதுவெதுப்பான நீரோ, அந்த நீரைக் கொண்டு நீங்கள் முகம் கழுவினால் உங்கள் முகங்களில் உள்ள நரம்புகள், தசைகள் புத்துணர்ச்சியடையும் அதனால் சோர்விலிருந்து மீள்வீர்கள்.

ஆக்ஸிஜன் :

ஆக்ஸிஜன் :

ஆக்ஸிஜன் பற்றாகுறையினால் தான் மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் பற்றாகுறை ஏற்பட்டு சரியாக செயல்பட முடியாமல் தூக்கம் வருகிறது. இதனை தவிர்க்க மூளைக்கு ஆக்ஸிஜன் செலுத்துமாறு மூச்சுப் பயிற்றி யோகா தியானம் ஆகியவை செய்யலாம்.

ஐஸ் க்ரீம் :

ஐஸ் க்ரீம் :

மூளைக்கு புத்துணர்ச்சி கொடுப்பதில் ஐஸ்க்ரீம் முக்கிய பங்கு வகிக்கிறது, காலை உணவாக ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால் அல்லாமல் அதன் குளிர்ந்த டெம்ப்பரேச்சரால் உற்சாகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது

என்றைக்காவது ஒரு நாள் என்றால் சரி ஆனால் தினமும் இதனையே தொடரவேண்டாம். அது பல் பிரச்சனை உட்பட பல்வேறு உபாதைகளை ஏற்படுத்திடும்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

காலை நேரத்தில் எழுந்து உடற்பயிற்சி செய்வது என்பது ஏதோ உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் செய்ய வேண்டிய விஷயமாக நினைக்கிறோம் ஆனால் உண்மையில் நாம் அனைவரும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. அன்றைய நாள் முழுமைக்கும் சுறுசுறுப்பாக இருக்க காலை நேர உடற்பயிற்சி உதவிகரமாய் இருந்திடும்.

ஒரு நாளைக்கு குறைந்தது 20 நிமிடங்களாவது அதற்காக ஒதுக்குங்கள்.

யூக்கலிப்டஸ் எண்ணெய் :

யூக்கலிப்டஸ் எண்ணெய் :

காலை சூடான நீரில் குளிக்கும் போது நான்கைந்து சொட்டு யூக்கலிப்டஸ் எண்ணெயையை கலந்து குளித்திடுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும். நாள் முழுமைக்கும் நீங்கள் ஃபிரஷ்ஷாகவே இருப்பீர்கள்.

 பத்து நிமிடம் :

பத்து நிமிடம் :

தொடர்ந்து ஒரே வேலையை நீண்ட நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்து செய்வதினால் கூட அழுப்பு ஏற்பட்டு தூக்கம் வரும் அதனால் நடுவில் அவ்வப்போது ப்ரேக் எடுத்துக் கொள்ளுங்கள்.

சின்னதாக ஒரு வாக் சென்று விட்டு வருவது, மனதுக்கு இதமான பாடல்களை கேட்பது என்று மனதை மாற்றிக் கொள்ளுங்கள். அந்த டெம்ப்பரேச்சரிலிருந்து மாறி வெளியே சென்று வருவதால் உங்களுக்கு உற்சாகம் பிறக்கும்.

டெய்லி டாஸ்க் :

டெய்லி டாஸ்க் :

முந்தைய நாளே நாளை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திட்டமிடுங்கள். அந்த திட்டங்களை மொத்தமாக வரிசையாக எழுதி வைக்காமல், முதலில் செய்ய வேண்டியது, எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எளிமையான காரியங்கள்,அதிக கவனம் செலுத்த வேண்டியவை எல்லாம் தனித்தனியாக பிரித்து குறித்து வைத்திடுங்கள்.

நண்பர்கள் உறவுகள் யாருக்காவது வாழ்த்து சொல்ல வேண்டும், பேச வேண்டும் என்றாலும் அதையும் குறித்து வைத்திடுங்கள். ஆரம்பித்தவுடனேயே அத்தனையையும் முடிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்,முதலில் நாம் என்னென்ன வேலைகளை செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள், ஒவ்வொன்றாய் முடிக்க அதனை அழித்துக் கொண்டே வந்தால் நிறைவான திருப்தி உங்களுக்கு கிடைக்கும்.

வெள்ளைச் சர்க்கரை :

வெள்ளைச் சர்க்கரை :

இனிப்பு பொருட்கள் சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்ளாதீர்கள். சிலர் தூக்கம் வருவதை தவிர்க்க ஸ்வீட் சாக்லெட்டுகளை எடுத்துச் சாப்பிடுவார்கள். இது தவறான பழக்கம்.

நாளடைவில் இது பற்சொத்தையில் கொண்டு போய் விடியும். எதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் பழங்களை சாப்பிடுங்கள்.

வெளிச்சம் :

வெளிச்சம் :

வெளிச்சம் குறைவான இடத்தில் உட்கார்ந்திருப்பதும் தூக்கம் வருவதற்கு ஒர் காரணமாக அமைந்திடும். அதனால் நீங்கள் இருக்கும் அறையில் அதிக வெளிச்சமாக்கிடுங்கள்.

உங்களது கவனத்தை திசை திருப்புங்கள்.

 20 நிமிடங்கள் :

20 நிமிடங்கள் :

எல்லாருக்கும் வேலைக்கு நடுவே 20 நிமிடங்கள் வரை தூங்குவதற்கு வாய்ப்பு கிடைக்காது, கிடைக்கும் பட்சத்தில் 20 நிமிடங்கள் எதைப்பற்றியும் யோசிக்காமல் அமைதியாக தூங்கலாம்.

அப்படி இல்லாத பட்சத்தில் அந்த இருபது நிமிடங்களுக்கு தொடர்ந்து நீங்கள் செய்கிற வேலையை மாற்றி வேறொரு வேலையை செய்திடலாம்.

 சிரிப்பு :

சிரிப்பு :

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பதெல்லாம் பழைய ஸ்டைல் இப்போது வாய்விட்டு சிரித்தால் தூக்கம் போகும். உங்களை மறந்து நீங்கள் சிரிப்பதினால் மூளை சுறுசுறுப்படையும், இதனால் தூக்கம் குறையும்.

வாசனையுள்ள செண்ட் பயன்படுத்துங்கள் பிறருக்கு எரிச்சலைத் தரக்கூடிய வாசமாக இல்லாமல் மைல்ட்டான ஸ்மெல்லாக இருந்தால் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Tips To Get Rid of Sleepy in a Day

Amazing Tips To Get Rid of Sleepy in a Day
Story first published: Friday, March 30, 2018, 13:00 [IST]