For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்மையை பெருக்கும் ஒட்டகப் பால் !! அதன் பிற நன்மைகள் பற்றி தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

ஒட்டகப் பால் பல அற்புத குணங்களை கொண்டுள்ளன. அதன் நன்மைகளை தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள்.

By Ambika Saravanan
|

நமக்கு தெரிந்ததெல்லாம் ஆவின் பால், பசும் பால் , எருமை பால் அவ்வளவுதான். கிராமங்களில் சிலருக்கு ஆட்டு பாலின் சுவை தெரியும். எத்தனை பேர் ஒட்டகப் பாலை குடித்திருக்கிறீர்கள்?

அரபு நாடுகளில் ஒட்டகம் அதிகம் இருப்பதால் அங்கு இருப்பவர்கள் அதனை பற்றி அறிந்திருக்கலாம் . ஒட்டக பாலில் டீ போட சொல்லி வைகை புயல் வடிவேலு "வெற்றி கொடி கட்டு" படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் நடித்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த ஒட்டக பாலை பற்றிய பதிவு தான் இது.

Camel Milk helps to cure impotence and its other health benefits

ஒட்டகத்தின் பாலில் தனித்தன்மை வாய்ந்த இன்சுலின் உள்ளது இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. பசும்பாலை விட குணமளிக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது ஒட்டக பாலில் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

ஆம்! பசும்பால் மற்றும் எருமை பாலை விட அதிக நன்மைகள் அடங்கியது ஒட்டக பால். பலவித ஆய்வுகளும் பசும்பாலைவிட ஆரோக்கியமானது ஒட்டக பால் என்று கூறியிருக்கின்றன. தாய்ப்பாலுக்கு நிகரான தன்மை ஒட்டக பாலில் உள்ளதாகவும் , குடிப்பதற்கும் , செரிமானம் ஆவதற்கும் எளிமையானது என்று கூறப்படுகிறது.

விட்டமின் பீ, சி சத்துக்களை நிறையக் கொண்ட ஒட்டகப் பாலில், பசுப் பாலில் இருப்பதைவிட பத்து மடங்கு அதிகமான இரும்புச் சத்து இருப்பதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. பசும்பாலை விட இனிப்புக் குறைவான ஒட்டகப் பால், வளைகுடா நாடுகளெங்கும் அபரிதமாக அருந்தி வருகின்றார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Camel Milk helps to cure impotence and its other health benefits

Amazing health benefits of drinking camel milk
Story first published: Monday, October 16, 2017, 16:03 [IST]
Desktop Bottom Promotion