பெண்கள் வளையல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

வளையல்கள் திருமணமான பெண்கள், திருமண ஆகாத பெண்கள் என்று அனைவரும் அணிந்து கொள்வது பழங்காலத்தில் இருந்து நடை முறையிலிருந்து வரும் பழக்கமாகும்.

பூர்வ காலங்களில் இருந்து, பல்வேறு உலோகங்களிலிருந்து அதாவது காப்பர், வெள்ளி,தங்கம் மற்றும் பிளாஸ்டிக், கண்ணாடி, சங்கு, சீல்-மெழுகு மற்றும் யானைகளின் தந்தத்தில் கூட வளையல்கள் தயாரிப்பதற்கான ஒரு பாரம்பரியம் இருக்கிறது.

பொதுவாக தெற்கு ஆசியா பெண்கள் தான் இதனை முதன் முதலில் அணிய தொடங்கினர். பல எண்ணிக்கை கொண்ட வளையல்களை பெண்கள் மட்டும் அணிவர். ஒரே ஒரு வளையல் அதாவது அதை "கடையம் " அல்லது "கடா " என்று கூறுவார், இதனை ஆண்கள் மற்றும் பெண்களும் அணியலாம். வளையல்கள் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஒரு மதிப்புமிக்க பொருளாகும்.

benefits of wearing bangles

திருமணமான பெண்கள் கைகளில் வளையலில்லாமல் இருக்க கூடாது என்பது இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்குமுறையாகும். வளர்ந்து வரும் நாகரீக மாற்றத்தால், திருமணத்தின் போதாவது பெண்கள் கைநிறைய வளையல் அணிய வேண்டும் என்று பெரியவர்கள் எதிர்பார்க்கின்றனர் .

பலவிதமான வளையல்கள் இருந்தாலும், கண்ணாடி வளையல்கள் அணிவது சிறந்ததாக பார்க்கப்படுகிறது. கண்ணாடி என்பது மணல் மாற்று சிலிகானால் செய்யப்படுவதாகும்.இவை பூமியின் மேல் தட்டுகளில் இருப்பதால், இவற்றை பயன்படுத்துவதில் பூமிக்கு எந்த கெடுதலும் வரப்போவதில்லை. இது ஈகோ-பிரெண்ட்லி ஆக இருக்கின்றது.

வளையல்கள் ஒரு அணிகலன் மட்டும் அல்ல. அவை நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். அவைகளை அணிவதின் மூலம் பெண்கள் அழகாக இருப்பது மட்டும் இல்லை .அதையும் தாண்டி பல நன்மைகள் உள்ளன. வளையல் அணிவதில் இருக்கும் நன்மைகள் அறிவியல் பூர்வமாக விளக்கவும் படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 1. இரத்த ஓட்டம் அதிகரிக்கும்:

1. இரத்த ஓட்டம் அதிகரிக்கும்:

பொதுவாக கையின் மணிக்கட்டு பகுதியை மனிதர்கள் அதிகமாக பயன்படுத்துவர். நாடித்துடிப்பை பார்ப்பதற்கும் இந்த இடத்தியே பிடித்து பார்ப்பார்கள் .

ஆகவே வளையல்களை இந்த மணிக்கட்டு பகுதியில் அணியும் போது அவைகளின் தொடர்ந்த உராய்வினால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உடலிலிருந்து வெளியேறும் மின்சாரம், இந்த வளையங்களின் வட்ட வடிவத்தால் வெளியில் போக முடியாமல் மீதும் உடலுக்குள்ளயே செல்கிறது.

2. ஒலிகளுக்கு ஏங்கும் கருவில் உள்ள குழந்தைகள்:

2. ஒலிகளுக்கு ஏங்கும் கருவில் உள்ள குழந்தைகள்:

பெண்கள் கருவுற்றிருக்கும் போது அவர்களுக்கு வளையல் அணிவிக்கும் விழாவை வளைகாப்பு விழா என்று கூறுவோம். இந்த விழாவின் சிறப்பாய் கர்ப்பிணி பெண்களின் கைகள் இரண்டிலும் பல வண்ண வளையல்களை அணிவித்து பார்ப்பது ஆகும்.

இது நம்முடைய கலாச்சாரத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றி வருவதாகும்.பின்னாட்களில் இதனை ஆய்வு செய்து பார்க்கும் போது கர்ப்பமாக இருக்கும்போது பெண்களுக்கு இந்த வளையல்களின் அழகான ஒலி சந்தோஷத்தை கொடுக்கிறது என்றும் இதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் குறைகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அவர்கள் வளையல்கள் ஓசை எழுப்புவது கருவில் இருக்கும் குழந்தைகளின் கேட்கும் திறனை அதிகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

3. உணர்ச்சிகளின் சமநிலை :

3. உணர்ச்சிகளின் சமநிலை :

பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணிந்தும் மற்ற பிற செயற்கை பொருட்களால் ஆன வளையல்கள் அணிந்தும் ஆய்வுகள் செய்யப்பட்டன.

கண்ணாடி வளையல்கள் அணிபவர்கள் வலுவான உணர்ச்சிகளின் உந்துதலில், சமாதானத்தை விரும்புகிறவர்களாகவும் சூழ்நிலைகளை நல்ல விதத்தில் மதிப்பீடு செய்பவர்களாகவும் இருந்தனர்.

மற்ற பிற செயற்கை பொருட்களால் ஆன வளையல்களை அணிபவர்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருப்பதாக அறியப்பட்டது.

 4. நன்மைகள்:

4. நன்மைகள்:

கண்ணாடி வளையல்கள் வளிமண்டலத்தில் இருந்து நன்மை மற்றும் தூய்மைகளை உறிஞ்சி, இயற்கையான சூழல்களில் நிலவும் சக்திகளை அதை அணிபவருக்கு கொடுக்கிறது.

கண்ணாடி வளையல்கள் ஒலிகள் மென்மையானதாக இருப்பதால் அது அணிபவர்களுக்கு மட்டும் அல்லாமல் உடனிருப்பவர்களின் மனநிலையையும் மேம்படுத்துகிறது. ஆகையால் அந்த இடமே சண்டை சச்சரவின்றி அமைதியாக மாறுகிறது.

அது மட்டும் இல்லாமல் கண்ணாடி வளையல்கள் எதிர்மறை சக்திகளை புறக்கணித்து வளி மண்டலத்தில் இருக்கும் தீவினைகளில் இருந்து அணிபவரின் உடலை பாதுகாக்கிறது

 5. நிறங்களின் தேர்வு:

5. நிறங்களின் தேர்வு:

கண்ணாடி வளையல்களில் இரண்டு நிறங்கள் அதிகமாக பரிந்துரைக்கப்படுகின்றன. அவை சிவப்பு மற்றும் பச்சை. தென்னிந்தியாவில் கர்நாடகா , மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பொதுவாக பச்சை நிறத்தை அதிகம் அணிவர்.

வடக்கில் பஞ்சாப் , உ.பி , போன்ற மாநிலங்களில் சிவப்பு நிறத்தை அதிகமாக பயன் படுத்துவர். பச்சை நிறம் பொதுவாக இறைத்தன்மை மற்றும் சமாதானத்தை பறை சாற்றும் . சிவப்பு நிறம் தீயவற்றை அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும்.

இந்த நிற வளையல்கள் மீது தங்க நிற வேலைப்பாடு அமைந்திருக்கும் போது மேற்கூறிய ஆற்றல்கள் வெளிப்படாமல் போவதாக கூறப்படுகிறது. ஆகையால் வேறு எந்த நிறமும் கலக்காமல் சிவப்பு மற்றும் பச்சை நிற வளையல்களை அணிவது சிறந்த பலனை கொடுக்கும்.

வளையல்கள் அணிவோம் வளங்கள் பெறுவோம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

benefits of wearing bangles

Benefits of wearing bangles
Story first published: Thursday, August 24, 2017, 15:21 [IST]
Subscribe Newsletter