உங்களுக்கு பற்சொத்தையா!! இதோ ஒரு உடனடி நிவாரணம் !!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

நீங்கள் ஆரோக்கியமான இனிமையான பற்களை பெற்று இருந்தால் இனிப்பான உணவுகளை சாப்பிட ஐயம் கொள்ள மாட்டீர்கள் அல்லவா? ஆனால் தீராத பற்சொத்தையால் உங்களுக்கு தொடர்ந்து வலி ஏற்பட்டால் இனிப்பான உணவுகளை சாப்பிட தயக்கம் தான் ஏற்படும். பற்சொத்தையால் ஏற்படும் பல்வலி மிகவும் வலி மிகுந்தது.

Ayurvedic Remedy That Can Help Reduce Teeth Cavities Quickly!

உங்கள் பற்களின் வெண்மை, பளபளப்பு பெறுவது என்பது உடனடியாக கிடைக்காது. அதற்கு உங்கள் முயற்சியும் தேவை. ஆரோக்கியமான பற்கள் கிடைக்க நீங்கள் தினமும் சிறந்த வாய் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். தினமும் பல் துலக்குதல், ஈறுகளை மசாஜ் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

தாங்க முடியாத பல்வலியா? இந்த ஒரு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!!

இதை செய்வதால் உங்கள் பற்களில் உள்ள அழுக்கு, உணவுகள், தகடுகள் போன்றவை நீக்கப்பட்டு விடும். தகடுகள் போன்றவை நீண்ட காலமாக பற்களில் தங்குவதால் பாக்டீரியாவை உருவாக்கி அது உங்கள் எனாமலை அரித்து விடும். இதனால் தான் உங்களுக்கு பற்களில் தொற்று மற்றும் பற்சொத்தை வருகிறது.

இந்த எல்லா செயல்களையும் நீங்கள் செய்தாலும் கெட்ட உணவுப் பழக்கமும் பற்சொத்தையை ஏற்படுத்தும். நீங்கள் உண்ணும் உணவில் போதுமான அளவு விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாவிட்டால் நீங்கள் ஆரோக்கியமான பற்கள் பெற இயலாது. மேலும் சர்க்கரை அதிகமான உணவை சாப்பிட்டால் அதிலுள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் பைடேட்ஸ் போன்றவை பற்களில் உள்ள கால்சியம் அளவை குறைத்து பற்சொத்தை ஏற்பட வைத்து விடும்.

Ayurvedic Remedy That Can Help Reduce Teeth Cavities Quickly!

பற்சொத்தை ஒரு சாதாரணமான விஷயம் கிடையாது. இதனால் ஏற்படும் வலி உங்கள் நாள்களை மிகவும் கஷ்டமாக்கி விடும். நீங்கள் பல் மருத்துவரிடம் சென்றாலும் உங்கள் நேரமமும் பணமும் தான் விரயமாகும். அதற்கான ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காது.

எனவே உங்கள் பற்சொத்தையை சரியாக்குவதற்கும் வராமல் தடுப்பதற்கும் ஒரு அற்புதமான இயற்கை முறை பற்றி இங்கே பார்க்க போறோம்.

தேவையான பொருட்கள்

கிராம்பு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்

Ayurvedic Remedy That Can Help Reduce Teeth Cavities Quickly!

செய்முறை :

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு பெளலில் கலந்து கொள்ள வேண்டும்.

அதை பேஸ்ட் மாதிரி கலக்க வேண்டும்

இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பற்களில் கைகளால் அல்லது காட்டன் பஞ்சை கொண்டு வைக்க வேண்டும்.

இந்த முறையை ஒவ்வொரு நாள் இரவிலும் 2 மாதங்களுக்கு செய்ய வேண்டும்

கண்டிப்பாக இந்த முறை உங்களை பற்சொத்தையிலிருந்து விடு பட வைக்கும்.

Ayurvedic Remedy That Can Help Reduce Teeth Cavities Quickly!

குறிப்பு :

இந்த முறை உங்கள் பற்சொத்தையை குணப்படுத்தும். ஆனால் இதை தொடர்ந்து எடுத்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும். ஒரு தடவை பயன்படுத்தினால் எந்த ஒரு மாற்றமும் தெரியாது. இதனுடன் சேர்த்து அதிகமான சர்க்கரை பொருட்கள், சாக்லேட், ஐஸ் க்ரீம், கார்பனேற்ற பானங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

நீங்கள் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக ஒவ்வொரு தடவையும் பல்துலக்குதல் மற்றும் வாயை கொப்பளித்தல் போன்றவற்றை வாரத்திற்கு 4 நாட்களாவது மேற்கொள்ள வேண்டும். மேலும் கால்சியம் நிறைந்த உணவுகளான கீரைகள் மற்றும் பால் பொருட்கள் சாப்பிட வேண்டும். இது உங்கள் பற்சொத்தையை எதிர்த்து போராடும்.

பூண்டு, கிராம்பு எண்ணெய் மற்றும் உப்பு இவைகளில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பற்களில் உள்ள கிருமிகளை அழித்து அதன் எண்ணிக்கையை குறைக்கிறது. மேலும் பற்களை சுத்தம் படுத்தி பற்சொத்தை வராமல் தடுக்கிறது.

English summary

Ayurvedic Remedy That Can Help Reduce Teeth Cavities Quickly!

Ayurvedic Remedy That Can Help Reduce Teeth Cavities Quickly!
Story first published: Monday, July 3, 2017, 7:00 [IST]