For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும்?

|

இதய மாரடைப்பு என்பது தற்போது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. இந்த மாரடைப்பு பிரச்சனை தற்போது இளம் வயதினரை கூட தாக்க ஆரம்பித்து விட்டது . தரமற்ற உடல் பராமரிப்பு, அறியாமை, வறுமை மற்றும் புகைபிடித்தல் போன்றவற்றின் காரணமாக கிராமப்புற இந்தியர்களிடையே இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிக விகிதத்தில் உயர்ந்து வருகிறது.

First Aid Treatment For Heart Attack Victims

இது குறித்து செய்யப்பட்ட ஆய்வில், இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் மட்டும் இதய நோய்கள் காரணமாக 2.1 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்ச்சி தகவல்கள்

ஆராய்ச்சி தகவல்கள்

ஆராய்ச்சிகளின் படி, 30-69 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 1.3 மில்லியன் பேர்கள் இதய இறப்புகளாலும் , 0.9 மில்லியன் பேர்கள் கரோனரி இதய நோய் இறப்புகளாலும் மற்றும் 0.4 மில்லியன் பேர்கள் பக்கவாதம் இறப்புகளாலும் இறந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

முதலுதவியால் இறப்பை தடுக்கலாம்

முதலுதவியால் இறப்பை தடுக்கலாம்

சில நேரங்களில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை கிடைப்பதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் . குறிப்பாக மாரடைப்பு வழக்குகளில் மாரடைப்பு சிகிச்சையின் தாமதம் தான் முக்கால்வாசி இறப்பிற்கு காரணமாக அமைகிறது. இந்த மாரடைப்பு அறிகுறிகளைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இதன் காரணமாக பலர் மருத்துவமனையை அடைவதற்குள் இறக்கின்றனர். இதே அந்த நபருக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை செய்து விட்டாலே போதும் உடனடியாக அவரால் உயிர்வாழ்வு தர முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதய மாரடைப்பின் அறிகுறிகள்

இதய மாரடைப்பின் அறிகுறிகள்

* லேசான தலைவலி

* தலைச்சுற்றல்

* மயக்கம்

* வியர்த்தல்

* குமட்டல்

* மூச்சுத்திணறல்

* தோள்கள், கழுத்து, முதுகு, தாடை, கைகள் மற்றும் அடிவயிற்றில் அசெகரியம் ஏற்படுதல்

* மார்பு வலி

மாரடைப்பு பொதுவாக 15 நிமிடங்களுக்கு மேல் மார்பு வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் சில நேரங்களில் எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை. எனவே ஒரு நபர் மாரடைப்பால் பாதிக்கப்படும் போது பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது

மாரடைப்புக்கான முதலுதவி சிகிச்சை

மாரடைப்புக்கான முதலுதவி சிகிச்சை

ஆஸ்பிரின்

ஒருவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டால் உடனே அவருக்கு இந்த முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டும். குழந்தை என்றால் அவருக்கு 324 மி.கி அளவு அஸ்பிரின் மருந்தையும் அல்லது பெரியவர்கள் என்றால் 325 மி.கி அளவு அஸ்பிரின் மருந்தையும் கொடுங்கள்.

மற்றவை...

மற்றவை...

* மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு எக்காரணம் கொண்டும் உணவோ, நீரோ அந்த நேரத்தில் கொடுக்காதீர்கள்.

* அவரை செளகரியமான நிலையில் வைத்திருங்கள். அவருக்கு தேவையான மருந்துகளின் பட்டியலை அறிந்து கொள்ளுங்கள்.

* உங்கள் மருத்துவரால் நைட்ரோகிளிசரின் மருந்து பரிந்துரைக்கப்பட்டால், மார்பு வலியை அனுபவிக்கும் போது மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

* அந்த நபர் மயக்கமடைந்து, சாதாரணமாக சுவாசித்தால், அந்த நபரை தரையில் தாழ்த்தி, தலையை நிமிர்த்தி நிற்க வைக்கவும். இப்படி செய்வது வாயில் இருந்து உமிழ்நீரை வெளியேற்ற அனுமதிப்பதன் மூலம் மூச்சுத் திணறலைத் தடுக்கிறது.

* அந்த நபர் மயக்கமடைந்து சுவாசிக்கவில்லை என்றால், சிபிஆர் (கார்டியோபல்மோனரி ) செய்வது அவருக்கு புத்துயிர் தர உதவும். நீங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு இந்த சிகிச்சை அவருக்கு உதவியாக இருக்கும். பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு சிபிஆர் செய்வது 12% உயிர்வாழும் வீதத்தைக் மீட்டுத் தருவதாக ஆய்வு காட்டுகிறது.

சிபிஆர் செய்ய நீங்கள் பின்வருவனவற்றை செய்ய வேண்டும்:

சிபிஆர் செய்ய நீங்கள் பின்வருவனவற்றை செய்ய வேண்டும்:

* முலைக்காம்பு பகுதிக்கு அருகில் மார்பின் மையத்தில் ஒரு கையை வைத்து அதன் மேல் மற்றொரு கையை வைத்து கடினமாகவும் வேகமாகவும் புஷ் (அமுக்க) பண்ண வேண்டும் .

* ஒரு நிமிடத்திற்கு 100-120 புஷ்களை செய்ய முயற்சிக்கவும் (அவரின் இதயத் துடிப்பைப் பின்பற்றுங்கள்)

* தயவு செய்து நீங்கள் சிபிஆர் செய்யும் போது பயப்பட வேண்டாம்.

டிஃபிபிரிலேஷன்

டிஃபிபிரிலேஷன்

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு முதலுதவி சிகிச்சை முறை டிஃபிபிரிலேஷன் ஆகும். பல பொது இடங்களில் தானியங்கி வெளிப்புற டிஃபிப்ரிலேட்டர்கள் (AED) உள்ளன. இது ஒரு சிறிய மின்னணு சாதனம், இது இதயத்திற்கு அதன் சாதாரண இதய துடிப்பை மீட்டெடுக்க மின்சார அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த இயந்திரங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்ற இது உதவுகிறது .

மேற்கண்ட முதலுதவி சிகிச்சைகளை மருத்துவரின் ஒத்துழைப்போடு நீங்கள் செய்யும் போது ஒருவரின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியும். எனவே இந்த மாதிரியான முதலுதவி சிகிச்சைகளை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றும் கூட.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

First Aid Treatment For Heart Attack Victims

If the heart attack victim is awake and responding, give an aspirin tablet, avoid giving food, etc. If the person is unconsciousness doing CPR (cardiopulmonary resuscitation) and defibrillation would help.
Story first published: Friday, November 29, 2019, 18:15 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more