உங்களுக்கு இதய நோய் ஏற்பட எவ்வளவு % வாய்ப்பு இருக்கிறது என தெரிந்துக் கொள்ள வேண்டுமா?

Posted By:
Subscribe to Boldsky

இதயம் தான் நமது உடலின் எஞ்சின். இது சீராக இயங்க நல்ல கொழுப்பு எனும் எச்.எடி.எல் தான் எஞ்சின் ஆயில் போல உதவுகிறது.

நமது அன்றாட பழக்க வழக்கங்கள், உணவு பழக்கம் போன்றவற்றில் ஏற்படும் தீய மாற்றங்கள், சோம்பேறித்தனம், உடல் பருமன், நீரிழிவு, இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவை இதய ஆரோக்கியம் குறைய மிகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே, இதயத்தின் ஆரோக்கியத்தின் மீது நீங்கள் அதிக அக்கறையும், கவனமும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
67%

67%

ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் நபர்களோடு ஒப்பிடுகையில், ஒரு நாளுக்கு 11 அல்லது அதற்கும் மேலான மணிநேரம் வேலை செய்யும் நபர்களுக்கு 67% மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

சைவ உணவு

சைவ உணவு

இறைச்சி சாப்பிடுபவர்களோடுஒப்பிடுகையில், சைவ உணவு உண்ணும் நபர்களுக்கு 19% இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்பது ஆய்வறிக்கை மூலம் அறியப்பட்டுள்ளது.

புகை

புகை

புகை காரணத்தால், புகை பிடிக்கும் நபர்களுக்கு 200% மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும், அந்த இடத்தில் இருக்கும் புகைப்பிடிக்காத நபர்களுக்கு 400% மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது என கூறப்படுகிறது.

ஆர்கஸம்

ஆர்கஸம்

வாரத்திற்கு மூன்று முறையாவது ஆர்கஸம் (உச்சகட்ட இன்பம்) அடைவது இரத்த குழாய் சார்ந்த இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

தனிமை

தனிமை

நண்பர்கள் இல்லாமல் வாழ்வது, புகைக்கு சமமான தாக்கத்தை தரவல்லது என ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வில் அறியப்பட்டுள்ளது. தனிமையில் இருப்பதால், இரத்தத்தில் கட்டிகள் உண்டாகி, அதன் மூலம் மாரடைப்பு அல்லது ஸ்ட்ரோக் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

கள்ள உறவு

கள்ள உறவு

தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது மாரடைப்பு ஏற்படுவது மிகவும் அரிதான நிகழ்வு. இது போன்ற மாரடைப்புகளில் 75%, மனைவியை ஏமாற்றி வேறு பெண்ணுடன் உறவில் ஈடுபடும் போது தான் நடக்கிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

நம்பர் ஒன்

நம்பர் ஒன்

பெண்களின் உயிரைக் கொல்லும் உலகின் நபர் ஒன் நோயாக இருப்பது இதய நோய்கள். 2012ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருவர் இறக்க காரணமாக இருந்தது இருதய பிரச்சனைகள்.

மல்டி-வைட்டமின்கள்

மல்டி-வைட்டமின்கள்

சமீபத்திய ஆய்வு ஒன்றில், மல்டி-வைட்டமின்கள் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை!

அறுவை சிகிச்சை!

முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை ஆஸ்திரேலிய சர்ஜன் ஒருவரால், இறந்த இதயத்தை வைத்து தான் செய்யப்பட்டது.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

தினமும் டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால், இதய நோய் அபாயத்தின் விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறையும் என அறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Heart Disease Facts

Heart Disease Facts
Subscribe Newsletter