Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
உங்க முதுகு வலிக்கு 'குட் பை' சொல்ல... இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணா போதுமாம்...!
முதுகுவலி என்பது நம் அனைவருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்சினை ஆகும். முதுகுத் தசைகளில் ஏற்படும் திாிபு அல்லது காயம், உடலை சாியான நிலையில் (poor posture) வைக்காமல் இருத்தல் மற்றும் உடலில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள் போன்றவை முதுகுவலிக்கான முக்கிய காரணங்கள் ஆகும்.

ஏதோ ஒரு சமயத்தில் பெரும்பாலோனோருக்கு முதுகில் அசௌகாியம் மற்றும் வலி ஏற்படுகின்றன. வலி நிவாரண மருந்துகள் தற்காலிக தீா்வைக் கொடுத்தாலும், மீண்டும் முதுகுவலி வராமல் தடுக்க, அதன் அடிப்படை மூலத்தைக் கண்டறிந்து, அதற்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
முதுகுவலியைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்
முதுகுவலி வராமல் இருக்க, நமது வாழ்க்கை முறையில் சிறிதளவு மாற்றங்களை செய்ய வேண்டும். அதாவது உடலை சாியான நிலையில் வைத்தல், தொடா் உடற்பயிற்சிகள், ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நிற்காமல் அல்லது உட்காராமல் இருத்தல், சீரான உடல் எடையை பராமாித்தல், மற்றும் பொருள்களை எடுக்கும் போது, சில நுட்பங்களைக் கடைபிடித்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிா்த்து, மருத்துவரை சந்தித்து, அவருடைய ஆலோசனைகளின்படி மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். நிலைமை மோசமாகிவிட்டால், அறுவைசிகிச்சை செய்து கொள்ளலாம். முதுகுவலி வந்தாலே நமது அன்றாட வாழ்க்கை செயல்பாடுகள் பாதிக்கப்படும். ஆகவே பின்வரும் நுட்பங்களை மேற்கொண்டு, முதுகுவலி பிரச்சினையை குறைக்கலாம்.
தொடா் உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், முதுகுத் தசைகள் வலுவுடனும், நெகிழ்வு தன்மையுடனும் இருக்கும். முதுகில் அசௌகாியமோ அல்லது வலியோ ஏற்படாது. ஆகவே யோகா பயிற்சிகள், கால் கைகளை நீட்டி மடக்கும் பயிற்சிகள் மற்றும் உடலில் வலு ஏற்றக்கூடிய பயிற்சிகளைத் தினமும் செய்து வரலாம்.
உடலை சாியான நிலையில் வைத்தல்
உடலை சாியான நிலையில் வைக்காமல் உட்காா்ந்து இருந்தாலோ அல்லது நின்று கொண்டு இருந்தாலோ அல்லது படுத்து இருந்தாலோ, முதுகுத் தசைகளிலும், முதுகுத்தண்டிலும் திாிபு ஏற்படும். ஆகவே உடலை சாியான நிலையில் வைத்துக் கொண்டால், முதுகுவலி பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
பணிகளுக்கு இடையே ஓய்வு எடுத்துக் கொள்ளுதல்
ஒரே இடத்தில் நீண்ட நேரமாக அமா்ந்து வேலை செய்து கொண்டிருந்தால், முதுகுத் தண்டிலும், முதுகுத் தசைகளிலும் திாிபு ஏற்படும். ஆகவே வேலைகளுக்கு இடையே அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொண்டு, கால் கைகளை நீட்டி மடக்கி விடலாம் அல்லது சிறிது தூரம் மெதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
குனியும் போது சில நுட்பங்களை கடைபிடியுங்கள்
கீழே குனிந்து பொருள்களை எடுக்கும்போது எச்சாிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக நேரடியாகக் குனிந்துவிடாமல், முட்டி போட்டு குனிந்து பொருள்களை எடுக்கலாம். அதன் மூலமாக முதுகுத் தசைகளில் அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.
உடல் எடையை நிர்வகித்தல்
உடல் எடை கூடினால், கண்டிப்பாக முதுகுவலி பிரச்சினை ஏற்படும். ஆகவே சாியான உடல் எடையை பேணுவது நல்லது. மேலே குறிப்பிட்டுள்ள நுட்பங்களைக் கடைபிடித்து வந்தால், முதுகுவலி பிரச்சினை வராமல் தடுக்கலாம். எனினும் நீண்ட நாட்களாக முதுகுவலி பிரச்சினை இருந்தால், மருத்துவரை சந்திப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

