For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேனை ஏன் சூடேற்றக்கூடாது என்பதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் தெரியுமா?

|

யாருக்கு தான் தேன் பிடிக்காது. சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தேன் மிகவும் நல்லது. தேன் என்பது தேனீக்கள் மற்றும் வேறு சில பூச்சிகளால் தயாரிக்கப்படும் இனிப்பு, ஜெலட்டின் உணவுப் பொருளாகும். தேனீக்களின் கடினமான உழைப்பால் உற்பத்தி செய்யப்படும் ஒரு தடிமனான, தங்க நிற திரவம் தான் தேன். இந்த தேனானது பூச்செடிகளில் இருக்கக்கூடிய அமிர்தத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. மேலும், உணவு பற்றாக்குறை ஏற்படக்கூடிய காலங்களில் சாப்பிடுவதற்காக தேனீக்கள் தங்களது கூட்டிற்குள் தேனை சேமித்து வைக்கின்றன.

தேன் ஒரு சத்தான இயற்கை இனிப்பு மட்டுமல்ல, செறிவூட்டப்பட்ட எரிசக்தி ஆதாரம் மற்றும் ஆரோக்கியமான பலன்களை கொண்டதோடு, விரைந்து குணப்படுத்தக்கூடிய ஆற்றலும் கொண்டது. இது பழமையான வீட்டு வைத்தியங்களில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. அழகு மற்றும் தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் தேன் ஒரு முக்கிய மூலப்பொருள். மேலும் பல மருத்துவ வகை ஆராய்ச்சிகளிலும் தேன் இடம் பெற்றுள்ளது. ஊட்டச்சத்து அடிப்படையில், பச்சை தேனில் சிறிய அளவிலான வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் மற்றும் நோய்களை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. அவை சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை விட மிகவும் ஆரோக்கியமானவை.

MOST READ: கொரோனா வந்து சரியாயிடுச்சா? அப்ப இனிமே தான் நீங்க கவனமா இருக்கணும்.. ஏன்னு இத படிச்சா புரியும்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேனின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள்

தேனின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள்

தேனின் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் நன்கு அறியப்பட்ட ஒன்று தான். தேன் கூட்டில் சேமிக்கப்படக்கூடிய அசல் தேன் நீரிழப்பு செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகிறது. இதனால், சிறிய அளவிலான ஆன்டிசெப்டிக் பண்புடைய ஹைட்ரஜன் பெராக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது. ஹைட்ரஜன் பெராக்சைடு, பொதுவாகவே பாக்டீரியா எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது. எனவே, தேன் பாரம்பரியமாக மேற்பூச்சு மருந்துகளாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, தோல் காயங்கள், தீக்காயங்கள் போன்றவற்றை விரைந்து குணப்படுத்தவும் மற்றும் அல்சரேஷன் ஆகியவற்றில் தொற்றுநோயைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

தேனை சூடேற்றுவது ஆபத்து

தேனை சூடேற்றுவது ஆபத்து

சுத்தமான தேன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் ஒரு சிறந்த மூலமாகும். செரிமான பிரச்சனைகளுக்கு உதவுவதோடு, தொண்டை புண்ணை குணப்படுத்தவும் உதவுகிறது. இருப்பினும், தேனை உட்கொள்ளும் போது மனதில் கொள்ள வேண்டிய ஒரு சில முக்கியமான முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் குறித்து தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். அவை என்னவென்றால், தேனை ஒருபோதும் சமைக்கவே கூடாது. ஆச்சரியமாக உள்ளதா? ஆம், தேனை சமைக்கலாமா என்றால், எப்போதுமே கூடாது என்பதொன்று தான் பதில். இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்னவென்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஆயுர்வேதம் சொல்வது என்ன?

ஆயுர்வேதம் சொல்வது என்ன?

ஆயுர்வேதத்தில், தேன் ஒரு முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. இது இதயத்திற்கும் கண்களுக்கும் மிகவும் நல்லது. தேனின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை ஆயுர்வேதம் அடையாளம் காட்டுகிறது. இருப்பினும், எந்தவொரு காரணத்திற்காகவும் அதை சூடுபடுத்தவே கூடாது என்று ஆயுர்வேதம் கடுமையாக அறிவுறுத்துகிறது. ஆயுர்வேதத்தின் படி, தேனை சூடாக்குவது என்பது எதிர்மறையான வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நிகரானது. இதனால் அதன் இயற்கை சுவையிலேயே பெரும் மாற்றம் ஏற்படும். தேனை சூடுபடுத்தினால், அதன் சுவை கசப்பாக மாறிவிடும்.

சூடேற்றப்பட்ட தேன் ஒரு நச்சு

சூடேற்றப்பட்ட தேன் ஒரு நச்சு

சமையல் கண்ணோட்டத்தில் இதனை பார்க்கும் போது, பயன்படுத்த தேவையற்றதாக தேன் கருதப்படுகிறது. கூடுதலாக, ஆயுர்வேத உணவுக் கொள்கைகள் கூறுவது என்னவென்றால், சமைத்த, சுடப்பட்ட அல்லது சூடான திரவங்களில் சேர்க்கப்பட்ட தேனை உட்கொள்வது காலப்போக்கில் உடல்நலக் குறைவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறது. காரணம், தேன் சமைக்கும் போது, அதன் திரவ நிலை பசை போன்றதாக மாறிவிடும். தேனை சூடேற்றினால் அதன் மூலக்கூறுகள் ‘அமா' எனப்படும் நச்சுக்களை உற்பத்தி செய்யும். அவை, செரிமான மண்டலத்தில் உள்ள சளி சவ்வுகளுடன் ஒட்டிக் கொண்டிருக்கும். இத்தகைய அமா செரிக்கப்படாத உணவாக அல்லது செரிமான மண்டலத்திற்குள் சிக்கியுள்ள நச்சுகளாக மாறிவிடும். இது ஆயுர்வேதத்தில் மிகவும் மோசமான ஆரோக்கிய விளைவுகளை உண்டாக்குவதற்கு மூல காரணியாக கருதப்படுகிறது.

அறிவியல் கோட்பாடு

அறிவியல் கோட்பாடு

தேனை சூடாக்குவது அல்லது சமைப்பது என்பது நிஜமாகவே அதனை சேதப்படுத்தும் செயல் என்பதை அறிவியல் உறுதிப்படுத்துகிறது. தேன் சூடேற்றப்படும் போது, அதிலிருக்கக்கூடிய ஆரோக்கிய பலன்கள் முற்றிலுமாக நீக்கப்படும். பயோடெக்னாலஜி தேசிய மையத்தின் படி, தேனை சூடாக்குவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தேன் சமைப்பது என்பது அதன் தரத்தை குறைக்கும் செயலாகும். மேலும், இது அத்தியாவசிய நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். உண்மையில், சூடான தேன் உடலை பாதிப்பதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. மேலும், அவை மிகவும் ஆபத்தானவையாக கூட இருக்கலாம் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

சூடேற்றப்பட்ட தேனால் என்ன ஆகும்?

சூடேற்றப்பட்ட தேனால் என்ன ஆகும்?

சமைக்கப்பட்ட அல்லது சூடேற்றப்பட்ட தேனை உட்கொள்வதால் உடல் எடை அதிகரிப்பு, சுவாச நோய்கள், சில தோல் வியாதிகள், செரிமான பிரச்சனைகள் மற்றும் இரத்த குளுக்கோஸின் அளவில் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிற்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது. மேலும், தேனை பேஸ்டுரைசிங் செய்வதால் கிளைசெமிக் குறியீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லதல்ல.

முடிவுரை

முடிவுரை

ஒருவர் ஒருபோதும் தேனை சமைக்கவோ அல்லது சமைத்தபின் அதை உட்கொள்ளவோ கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தேன் வாங்கும் போது மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஏனெனில். சில வகை தேன்கள், பதப்படுத்தப்படும் போது ஏற்கனவே சூடாக்கப்பட்டதாகவோ அல்லது சமைக்கப்பட்டதாகவே இருக்க வாய்ப்புள்ளது. எனவே, சந்தைகளில் விற்கப்படக்கூடிய இயற்கை அல்லது ஒரிஜினல் தேனை பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, எந்த விதமான சமையலிலும் அவற்றை பயன்படுத்தாமல், அதனை அப்படியே உட்கொண்டாலே போதும். அப்படி உட்கொள்வது தான் உடலுக்கு மிகவும் நல்லது. சமைத்த தேனை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, அவற்றை அப்படியே உட்கொள்வது மட்டும் தான் ஒரே வழி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Real Reason Behind Why You Should Never Cook Honey

Want to know the real reason behind why you should never cook honey? Read on...