For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கிடைக்கக்கூடிய சில கவர்ச்சிகரமான அரிய பழங்கள்!

உலகெங்கிலும் காணப்படும் கவர்ச்சிகரமான பழங்களைப் பற்றி பலருக்கும் தெரியும். இருப்பினும், இந்தியாவில் பல வகையான பழங்கள் காணப்படுகின்றன.

|

உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் மிகவும் இன்றியமையாதவை. பழங்கள் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவின் இன்றியமையாத பகுதியாகும். இவற்றில் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் மற்றும் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பழங்கள் ப்ளேவோனாய்டுகள் உட்பட ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளையும் உடலுக்கு வழங்குகின்றன.

Rare Indian Fruits That You Need To Know About

ஒருவரது உணவில் பழங்கள் அதிகம் இருந்தால், அது புற்றுநோய், இதய நோய், அழற்சி மற்றும் சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும். குறிப்பாக பெர்ரி மற்றும் சிட்ரஸ் பழங்கள், உடலைத் தாக்கும் நோய்களைத் தடுக்கும் சக்தி வாய்ந்த பழங்களாக நம்பப்படுகிறது. உலகெங்கிலும் காணப்படும் கவர்ச்சிகரமான பழங்களைப் பற்றி பலருக்கும் தெரியும்.

இருப்பினும், இந்தியாவில் பல வகையான பழங்கள் காணப்படுகின்றன மற்றும் அவை அரிதானவையும் கூட. இதற்கு அந்த பழங்கள் வளர்ந்த குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன அல்லது அதிக அளவில் உற்பத்தி செய்யப்படாதது தான் காரணமாகும். இந்த இரண்டு சந்தர்ப்பங்களினால், அவை மக்களின் கவனத்தை இழந்து அரிதானவையாகவும் அபூர்வமானதாகவும் மாறுகின்றன.

இப்போது இந்தியாவில் கிடைக்கக்கூடிய சில அரிய பழங்களைக் காண்போம். இவற்றில் பல பழங்களை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நட்சத்திரப் பழம்/விளிம்பிப் பழம் (Star Fruit)

நட்சத்திரப் பழம்/விளிம்பிப் பழம் (Star Fruit)

பலருக்கும் நட்சத்திரப் பழம்/விளிம்பிப் பழம் புதுமையானதாக காணப்படலாம். ஆனால் இந்த பழம் இந்தியா முழுவதும் குறிப்பாக தெற்கு பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. அதோடு இந்த பழத்தை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நட்சத்திர பழம் என்று அழைக்கப்படும் விளிம்பிப்பழம், மெழுகு போன்ற தோலைக் கொண்டுள்ளது. இந்த பழத்தில் பழுக்காதவை பச்சை நிறத்தில், புளிப்பு சுவையுடன் இருக்கும். அதேப் போல் பழுத்தவை மஞ்சள் நிறத்தில் சற்று பழுப்பு நிற நரம்புகளை கொண்டிருக்கும்.

லங்சாட் பழம் (Langsat)

லங்சாட் பழம் (Langsat)

இந்த பழம் உங்களுக்கு பார்ப்பதற்கு புதிதாக காணப்படலாம். ஆனால் இந்த பழம் கிழக்கு மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில், குறிப்பாக நீலகிரி மலைகளில் பயிரிடப்படுகிறது. லங்சாட் என்னும் பெயரைக் கொண்ட இந்த பழம் ஒரு சிறிய, ஒளி ஊடுருவக்கூடிய உருண்டை வடிவ பழம். இது பழுக்காத போது புளிப்புச் சுவையுடன் இருக்கும். ஆனால் பழுத்த பின் இனிப்பு சுவையுடன் இருக்கும்.

மங்குஸ்தான் (Mangosteen)

மங்குஸ்தான் (Mangosteen)

இந்த பழத்தை பலரும் சூப்பர் மார்கெட்டுகளில் கண்டிருப்பீர்கள். இது முக்கியமாக நீலகிரி மலைப்பகுதி, கன்னியாகுமரி மற்றும் கேரளா போன்ற இந்தியாவின் தெற்கு பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. மங்குஸ்தான் ஒரு நல்ல மணம் கொண்ட வெப்பமண்டல பழம் மற்றும் இது ஒரு சிறிய ஆரஞ்சு அளவில் இருக்கும். இதன் தோல் ஊதா-மெரூன் நிறத்திலும், வெள்ளை நிற சதைப்பற்றுள்ள உட்புறத்தையும் கொண்டது. இதன் சுவை மாம்பழம் போன்று இருக்கும். இது தாய்லாந்தின் தேசிய பழம் என்றாலும், இது 18 ஆம் நூற்றாண்டில் இருந்து தென்னிந்தியாவிலும் வளர்க்கப்படுகிறது.

விளாம்பழம் (Elephant Apple/Wood Apple)

விளாம்பழம் (Elephant Apple/Wood Apple)

அஸ்ஸாம், கொல்கத்தா, பீகார், ஒடிசா மற்றும் குமாவோன் முதல் கர்வால் வரையிலான துணை இமயமலைப் பாதையில் காணப்படும் விளாம்பழம் ஒரு கிரேப்ஃபுரூட் அளவிலான பழம் மற்றும் இது மஞ்சள்-பச்சை நிறத்தில் காணப்படும். இந்த பழத்தின் கூழ் பகுதி புளிப்பு சுவையுடன் இருக்கும் மற்றும் இது குழம்பு, ஜாம் மற்றும் ஜெல்லி போன்ற இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இந்த பழம் யானைகள், குரங்குகள் மற்றும் மான்களுக்கான முக்கிய உணவு ஆதாரமாக உள்ளது. எனவே இப்பழம் இருக்கும் வனத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து இந்த பழத்தை சேகரிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

நுங்கு (Ice Apple or Sugar Palm Fruit)

நுங்கு (Ice Apple or Sugar Palm Fruit)

கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய பழம். இது ஒரு வகையான பனை பழமாகும். இது பனைமரத்தில் கொத்தாக வளர்கிறது. இதன் வெளிப்புறத் தோற்றம் ப்ரௌன் நிறத்தில் இருக்கும். ஒவ்வொரு பழத்தையும் வெட்டித் திறக்கும் போது, ஒவ்வொரு பழத்திலும் மூன்று முதல் நான்கு நுங்குகள் இருக்கும். இது மென்மையான மஞ்சள் நிறத் தோலைக் கொண்டிருக்கும். நுங்கு லிச்சி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன மற்றும் இதன் சுவை இனிப்பாக இருப்பதுடன், புத்துணர்ச்சியான நீரையும் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் கேரளாவில் பயிரிடப்படுகிறது.

தடச்சி/ஃபால்சா (Phalsa)

தடச்சி/ஃபால்சா (Phalsa)

இந்த பழம் முதன்முதலில் வாரணாசியில் காணப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் இது புத்த அறிஞர்களால் மற்ற ஆசிய நாடுகளுக்கும், உலகின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது. ஃபால்சா பழம் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையைக் கொண்டிருக்கும் மற்றும் இது கோடையில் மார்கெட்டுகளில் விற்கப்படுகிறது. இந்த பழத்தின் கூழில் இருந்து சர்பத் அல்லது ஸ்குவாஷ் தயாரிக்கப்பட்டு, உடலைக் குளிரூட்டும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

களாக்காய் (Carandas Cherry)

களாக்காய் (Carandas Cherry)

பீகார், மேற்கு வங்காளம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயிரிடப்படும் களாக்காய் ஒரு இளஞ்சிவப்பு நிற சிறிய பழமாகும். இது புளிப்புச் சுவையைக் கொண்டிருக்கும். பச்சையாக சாப்பிடும் போது, உப்பு தொட்டு சாப்பிடலாம். அதுவே முழுமையாக பழுத்தவுடன் மென்மையான இனிப்புச் சுவையுடன் இருக்கும். களாக்காய் ப்ளூபெர்ரிகளுக்கு ஒரு சிறந்த மாற்றாகும். மேலும் இது சாஸ் மற்றும் ஊறுகாய்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

கொடுக்காப்புளி (Camachile)

கொடுக்காப்புளி (Camachile)

கொடுக்காப்புளி தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் ஒரு சுருளில் 6-10 இனிப்பான வெள்ளை நிற பகுதியினுள் கருப்பு விதைகள் இருக்கும். 90-களில் பிறந்தவர்கள் கொடுக்காப்புளியை சிறு வயதில் பள்ளிக்கூட வாசலில் விற்கும் போது வாங்கி சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு இது ஒரு அரிய பழமாக இருப்பது, வருத்தத்தை அளிக்கிறது என்று தான் கூற வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rare Indian Fruits That You Need To Know About

Here is a look at some rare Indian fruits that you need to know about.
Desktop Bottom Promotion