For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடற்பயிற்சிக்குப் பின் கட்டாயம் உட்கொள்ள வேண்டிய சில புரத உணவுகள்!

கட்டுக்கோப்பான உடல் அமைப்பு பெறுவதற்கு ஜிம் செல்வதாக இருந்தாலும், விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தாலும், எந்தவிதமான உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும், உங்கள் உணவில் புரதச் சத்தை இணைத்துக் கொள்ள வேண்டும்.

|

கட்டுக்கோப்பான உடல் அமைப்பு பெறுவதற்கு ஜிம் செல்வதாக இருந்தாலும், விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதாக இருந்தாலும், எந்தவிதமான உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும், உங்கள் உணவில் புரதச் சத்தை இணைத்துக் கொள்வது மிகவும் அத்தியாவசியமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு உடல் அமைப்பும் அதன் வெளிப்புற மற்றும் உட்புற சேதங்களை தன்னைத் தானே சரிசெய்து கொள்ள புரதச் சத்து மிக அவசியம்.

Plant-Based Protein Sources For Post Workout Recovery

மேலும் புரதச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆதரவாக உள்ளது. புரதச்சத்து அதிகமாக இருப்பதால் தசை வலிமை அதிகரிக்கிறது, எடை இழப்பும் சாத்தியமாகிறது. கூடுதலாக, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு புரதச்சத்து இன்னும் அவசியமாகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் தசைநார் கிழியவும் வாய்ப்பு உள்ளது. புரத உணவு அதனை சரிசெய்ய உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசைவ உணவுகள்

அசைவ உணவுகள்

விலங்கு புரத ஆதாரங்களான இறைச்சி, மீன், கோழி, முட்டை மற்றும் பால் பொருட்கள் புரதச்சத்தின் முழு ஆதாரமாக விளங்குகின்றன. உடல் சீராக செயல்படுவதற்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அவற்றில் உள்ளன.

அதே நேரத்தில் சில தாவர உணவுகளிலும் சிறந்த புரதம் உள்ளது. எனவே நீங்கள் சைவ பிரியர்களாக இருந்தால் இந்த தாவர அடிப்படையிலான புரத உணவுகளை உங்கள் உடற்பயிற்சிக்கு பிறகு எடுத்துக் கொள்வதால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பயறு வகைகள்

பயறு வகைகள்

புரதச்சத்தை தவிர்த்து நார்ச்சத்து, போலேட், மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக விளங்குவது பயறு வகைகள். வேக வைத்த பயறு வகையில் (240 ml) 18 கிராம் அளவு புரதம் உள்ளது. நார்ச்சத்துக்கான தினசரி உட்கொள்ளும் அளவில் 50 சதவீதத்தை இது பூர்த்தி செய்வதாக பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் பயறு வகைகளில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் இதர தாவர கூறுகள் உள்ளன.

சோயா பால்

சோயா பால்

பொதுவாக சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் சோயா பால், சுவையான பாலுக்கு மாற்றாக கருதப்படும் ஒரு உணவுப் பொருளாகும். இனிப்பு சேர்க்கப்படாத ஒரு கப் சோயா பாலில் ஏழு கிராம் அளவு புரதச்சத்து உள்ளது. இறைச்சி, மீன் மற்றும் இதர பால் பொருட்களில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள் சோயா பாலிலும் உள்ளது. மேலும் தாவரத்திலிருந்து எடுக்கப்படுவதால் சோயா பால் இயற்கையாகவே கொலஸ்ட்ரால் இல்லாத ஒரு உணவுப்பொருளாகவும் உள்ளது. மேலும் சோயா பால் பொட்டாசியத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. வைட்டமின் மற்றும் கனிமச்சத்து செறிவூட்டப்படுவதால் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்தும் இதன்மூலம் கிடைப்பதாக அறியப்படுகிறது.

திணை

திணை

திணை ஒரு முழு தானியமாக வரையறுக்கப்பட்டாலும் உண்மையில் அது ஒரு விதையாகும். தாவர புரதம் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது திணை. 8 கிராம் புரதம் மற்றும் 5 கிராம் நார்சத்து கொண்ட திணை மற்ற தாவர அடிப்படையிலான புரதங்களைப் போலில்லாமல் ஒன்பது வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இதனால் இது ஒரு முழுமையான புரதச்சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. திணையில் க்ளூட்டன் இல்லாததால் க்ளூட்டன் சகிப்புத்தன்மையை அற்றவர்கள் என்ற நிலையில் உள்ள சிலியாக் நோயாளிகள் போன்றவர்கள் உட்கொள்வதற்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

காராமணி

காராமணி

புரதச்சத்தின் அற்புதமான ஆதாரமாக விளங்குவது காராமணி. 100 கிராம் காராமணி 24 கிராம் புரதச்சத்தை கொண்டுள்ளது. மேலும் காராமணி நார்ச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், வைட்டமின் பி1, இரும்பு, பொட்டாசியம் போன்றவற்றை சிறந்த அளவில் கொண்டுள்ளது. பீன்ஸ் வகைகள் மற்றும் இதர பருப்பு வகைகள் போன்றவை கொலஸ்ட்ராலை குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்த அளவை குறைக்கவும், வயிற்றில் அதிக அளவு கொழுப்பு படிவதைத் தடுக்கவும் உதவுகின்றன என்று பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Plant-Based Protein Sources For Post Workout Recovery

Here we listed some plant based protein sources for post workout recovery. Read on...
Desktop Bottom Promotion