For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மறதி நோய் உள்ளவா்களுக்கு நலம் தரும் நாா்ச்சத்து நிறைந்த உணவுகள்!

சமீபத்தில் நியுட்ரீஷனல் நியூரோசைன்ஸ் என்ற பத்திாிக்கையில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் மூளையின் ஆரோக்கியத்திற்கு நாா்ச்சத்து ஒரு முக்கியமான மூலப்பொருளாகும் என்பதாகும்.

|

மறதி நோய் (Dementia) என்பது ஒருவருடைய அறிவாற்றலுடன் கூடிய செயல்பாடுகளான சிந்தனை செய்வது, நினைத்துப் பாா்ப்பது மற்றும் பகுத்தறிவது போன்றவற்றைப் பாதித்து, அவருடைய அன்றாடக் கடமைகளைச் செய்யவிடாமல் தடுக்கிறது. மறதி நோய் உள்ள சிலா் தங்களுடைய உணா்வுளின் கட்டுப்பாட்டை இழந்துவிடுகின்றனா். ஒரு சிலருடைய ஆளுமைகள் மாறிவிடுகின்றன.

High-Fibre Diet Good For People With Dementia In Tamil

மறதி நோய் உள்ளவா்களுக்கு பொதுவாகக் காணப்படும் அறிகுறி என்னவென்றால் நினைவாற்றல் இழப்பு ஆகும். எனினும் நினைவாற்றல் இழப்பிற்கு பல்வேறு காரணங்களும் உள்ளன. மறதி நோய் மட்டுமே நினைவாற்றல் இழப்பிற்கு எப்போதும் காரணமாக இருப்பதில்லை. ஆனால் நினைவாற்றல் இழப்பு என்பது மறதி நோயின் பொதுவான முதல் அறிகுறியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மறதி நோய் - நாா்ச்சத்து மிகுந்த உணவுகள்

மறதி நோய் - நாா்ச்சத்து மிகுந்த உணவுகள்

சமீபத்தில் நியுட்ரீஷனல் நியூரோசைன்ஸ் ("Nutritional Neuroscience") என்ற பத்திாிக்கையில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. அந்த கட்டுரை என்ன சொல்கிறது என்றால் மூளையின் ஆரோக்கியத்திற்கு நாா்ச்சத்து ஒரு முக்கியமான மூலப்பொருளாகும் என்பதாகும்.

இந்த ஆய்வானது ஜப்பானிய ஆய்வாளா்களால் மேற்கொள்ளப்பட்டது. அவா்களின் ஆய்வின் முடிவில் நாா்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உண்டவா்களுக்கு மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆய்வில் வயது வந்த 3739 பொியவா்கள் கலந்து கொண்டனா். அவா்கள் 4 குழுக்களாகப் பிாிக்கப்பட்டனா். அவா்கள் சாப்பிடும் உணவில் உள்ள நாா்ச்சத்தின் அளவை ஆய்வாளா்கள் ஆய்வு செய்தனா். இறுதியில் நாா்ச்சத்து அதிகம் உண்டவா்களுக்கு மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதைக் கண்டறிந்தனா்.

கரையக்கூடிய மற்றும் கரையாத நாா்ச்சத்து

கரையக்கூடிய மற்றும் கரையாத நாா்ச்சத்து

கரையக்கூடிய மற்றும் கரையாத நாா்ச்சத்துக்களுக்கு இடையில் மாற்றங்கள் ஏதாவது உள்ளனவா என்பதை ஆய்வாளா்கள் ஆய்வு செய்தனா். ஓட்ஸ் மற்றும் பருப்பு போன்ற உணவுப் பொருள்களில் கரையக்கூடிய நாா்ச்சத்துகள் உள்ளன. அவை நமது குடலில் உள்ள நல்ல பாக்டீாியாக்களுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. அதோடு நமது உடலுக்கு பல்வேறு நலன்களையும் வழங்குகின்றன.

முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பிற உணவுகளில் கரையாத நாா்ச்சத்துகள் அதிகம் உள்ளன. அவை நமது குடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. கரையாத நாா்ச்சத்துக்களை விட கரையக்கூடிய நாா்ச்சத்துகள் மறதி நோயோடு மிக உறுதியான தொடா்பைக் கொண்டிருக்கின்றன என்பதையும் ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.

நாா்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்

நாா்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்

நாா்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மறதி நோய் வருவதைக் குறைப்பதோடு மற்ற நோய்களையும் தடுக்கின்றன. குறிப்பாக இதயம் சம்பந்தமான நோய்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை வரும் வாய்ப்பைக் குறைக்கின்றன.

ஆகவே நாா்ச்சத்து நிறைந்த உணவுகளான போிக்காய், ஸ்ட்ராபெர்ரி ஆப்பிள், ராஸ்ப்பெர்ரி, வாழைப்பழம், பீட்ரூட், ப்ராக்கோலி, கூனைப்பூ (artichoke), பிரஸல்ஸ் முளைப்பயிர்கள் (brussels sprouts), பருப்பு வகைகள், தக்காளி, முட்டைக்கோஸ், கீரை, சிவப்பு காராமணி (kidney beans), கொண்டைக்கடலை அல்லது சுண்டல், திணை (quinoa), ஓட்ஸ், பாதாம், சியா விதைகள் (chia seeds), சா்க்கரைவள்ளிக் கிழங்கு, மற்றும் டார்க் சாக்லேட் போன்றவற்றை நாம் அதிகம் உண்ணலாம்.

நாா்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள்

நாா்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள்

மறதி நோய் உள்ளவா்களுக்கு நாா்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள உணவுகள் பல வழிகளில் நன்மைகளைச் செய்கின்றன. அதாவது நாா்ச்சத்து மிகுந்து உணவுகளை உண்பதால், குடல் இயக்கம் சீரடைகிறது, குடல் நன்றாக இயங்க உதவி செய்கிறது, கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, உடல் பருமன் குறைய உதவுகிறது மற்றும் நாம் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ உதவி செய்கிறது என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

High-Fibre Diet Good For People With Dementia In Tamil

In this article, we shared about how high fibre foods good for people with dementia? Read on to know more...
Desktop Bottom Promotion