For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்பையைக் குறைக்க ட்ரை பண்றீங்களா? அப்ப இந்த உணவுகளை காலையில சாப்பிடுங்க..

தொப்பையைக் குறைக்க முயற்சிப்போருக்கு சிறந்த காலை உணவு எது என்று நீங்கள் கேட்கலாம். உடல் எடை இழப்புக்கு ஏற்ற ஆரோக்கியமான இந்திய உணவுகள் பல உள்ளன.

|

ஒரு நாளில் காலை உணவு மிகவும் முக்கியமானது. காலை வேளையில் நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்து தான் அந்நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக ஆற்றலுடன் செயல்படுவோமா என்பது உள்ளது. எனவே காலையில் நாம் உண்ணும் உணவில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக இன்று பலர் தொப்பையைக் கொண்டுள்ளனர். இந்த தொப்பையைக் குறைக்கும் முயற்சியில் ஏராளமான மக்கள் தினந்தோறும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Healthy Indian Breakfast Options To Cut Belly Fat In Tamil

சரி, தொப்பையைக் குறைக்க முயற்சிப்போருக்கு சிறந்த காலை உணவு எது என்று நீங்கள் கேட்கலாம். உடல் எடை இழப்புக்கு ஏற்ற ஆரோக்கியமான இந்திய உணவுகள் பல உள்ளன. அதில் புளித்த பொருட்களை உள்ளடக்கிய பல உணவுகள் உள்ளன. இம்மாதிரியான உணவுகள் குடல் மற்றும் செரிமானத்திற்கு நல்லதாக கூறப்படுகிறது. எடை இழப்பிற்கு ஆரோக்கியமான செரிமானம் மிகவும் முக்கியமானது. இந்த செரிமானத்தை ஊக்குவிக்கும் மற்றும் தொப்பையைக் குறைக்க வழிவகுக்கும் சில காலை உணவுகளைப் பற்றி இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இட்லி

இட்லி

இட்லிக்கள் ஆவியில் வேக வைக்கும் ஒரு சுவையான கலோரி குறைவான உணவு. இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை அரைத்து புளிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. புளித்த உணவுகள் நம் உடலில் உள்ள தாதுக்கள் மற்றம் வைட்டமின்களை எளிதில் உடைத்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது. மோசமான செரிமானம் தான் உடல் பருமனுக்கு வழிவகுக்குகிறது. ஏனெனில் உடலால் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சி ஒருங்கிணைக்க முடியாது. இட்லியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் காஞ்சிபுரம் இட்லி அற்புதமாக இருக்கும்.

உப்புமா

உப்புமா

உப்புமா நார்ச்சத்து நிறைந்தது மற்றும் எடை இழப்பிற்கு உதவும் ஆரோக்கியமான காலை உணவு. இதில் ரவை உள்ளது. இது இயற்கையாகவே கொழுப்பு குறைவானது என்பதால், கொலஸ்டரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்ற உணவும் கூட. ஆனால் உப்புமாவை செய்யும் போது அதில் குறைவான அளவில் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இதனால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகப்படியான கொழுப்பால் அழியாமல் இருக்கும். ஓட்ஸ் கொண்டும் உப்புமா செய்து சாப்பிடலாம்.

போஹா

போஹா

போஹா என்பதும் மற்றொரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு. இது அவலக்கி கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த போஹா தயாரிக்கும் போது, அதில் அதிக எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அதுவும் கொழுப்பு நிறைய உணவாகிவிடும். அதுவும் லெமன் போஹா மிகவும் சுவையாக இருக்கும்.

டோக்ளா

டோக்ளா

டோக்ளா என்பது வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருள். இதுவும் இட்லியைப் போன்றே ஆவியில் வேக வைத்து தயாரிக்கக்கூடியது. ஆனால் இந்த உணவில் எண்ணெயை அளவாக பயன்படுத்த வேண்டும். வேண்டுமானால் ரவா டோக்ளாவை முயற்சித்துப் பாருங்கள்.

முட்டை புர்ஜி

முட்டை புர்ஜி

முட்டைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைவான கார்போஹைட்ரேட்டுகள் அல்லது கொழுப்புக்கள் இருப்பதால், இது ஒரு சிறந்த காலை உணவாக விளங்கும். அதற்கு முட்டையை வேக வைத்தோ அல்லது புர்ஜியாகவோ அல்லது ஆம்லெட் போன்றோ தயாரித்து சாப்பிடலாம். என்ன தான் காலை உணவை ஆரோக்கியமானதாக தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தாலும், கலோரிகள் முறையாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்களுக்கா முட்டை புர்ஜி ரெசிபி இதோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Indian Breakfast Options To Cut Belly Fat In Tamil

Here are some healthy indian breakfast options to cut belly fat. Read on...
Desktop Bottom Promotion