Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
ரவா டோக்ளா
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காபி, டீ குடிக்கும் போது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், ரவா டோக்ளா செய்து கொடுங்கள். இது ஒரு சிறப்பான மற்றும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ்
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காபி, டீ குடிக்கும் போது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், ரவா டோக்ளா செய்து கொடுங்கள். இது ஒரு சிறப்பான மற்றும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். வட இந்தியாவில் இது மிகவும் பிரபலமானது. மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.

உங்களுக்கு ரவா டோக்ளா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா டோக்ளாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* கெட்டி தயிர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 2 டீஸ்பூன் (துருவியது)
* எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா/சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* துருவிய தேங்காய் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* எள்ளு விதைகள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் பிளெண்டரில் ரவையைப் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் பொடித்த ரவை, தயிர், உப்பு, சர்க்கரை, இஞ்சி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்து, நீர் சேர்த்து, பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு இதை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக வைத்து இறக்கி 5 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
* பின் கத்தியால் அதை துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வேக வைத்துள்ள டோக்ளாவின் மேல் ஊற்றி, அதன் மேல் கொத்தமல்லி மற்றும் தேங்காயைத் தூவினால், சுவையான ரவா டோக்ளா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
