For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலுமிச்சை அவல் ரெசிபி

By Maha
|

அவல் கொண்டு நிறைய ரெசிபிக்கள் செய்யலாம். அதில் ஒன்று தான் எலுமிச்சை அவல் ரெசிபி. இது மிகவும் ஈஸியான, அதே சமயம் ஆரோக்கியமான காலை உணவும் கூட. மேலும் இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதுமட்டுமல்லாமல், பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த எலுமிச்சை அவல் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Lemon Poha Breakfast Recipe

தேவையான பொருட்கள்:

அவல் - 3 கப்
எலுமிச்சை - 2 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து நறுக்கியது)
வேர்க்கடலை - 1 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அவலை நீரில் 10 நிமிடம் அவல் மென்மையாகும் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின் உருளைக்கிழங்கை போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து, வேர்க்கடலை சேர்த்து நன்கு கிளறி விட்டு, இறுதியில் அவலை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு 10 நிமிடம் கிளறி இறக்கி, எலுமிச்சை சாற்றினை ஊற்றி பிரட்டி, மேலே கொத்தமல்லியை தூவினால், சுவையான எலுமிச்சை அவல் ரெசிபி ரெடி!!!

English summary

Lemon Poha Breakfast Recipe

Lemon poha is something you need to try out this morning for breakfast. Lemon added to this poha recipe makes it absolutely yummy.
Story first published: Friday, January 31, 2014, 19:12 [IST]
Desktop Bottom Promotion