For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவில் இருந்து சீக்கிரம் குணமாகவும், வைரஸின் தாக்கத்தைக் குறைக்கவும் இந்த உணவுகளை சாப்பிடுங்க...

நீங்கள் சமீபத்தில் தான் கொரோனாவில் இருந்து மீண்டவராக இருந்தால், கட்டாயம் சில காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

|

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உங்களுக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்தால், நீங்கள் கட்டாயம் கண்டிப்பான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். இச்செயலை தவறாமல் மேற்கொண்டு வந்தால், விரைவில் இந்த தொற்றில் இருந்து குணமடைந்து, தொற்றுநோயால் இழந்த ஆற்றலை மீண்டும் பெறவீர்கள்.

Healthy Foods For A Speedy Recovery From COVID

அதிலும் நீங்கள் சமீபத்தில் தான் கொரோனாவில் இருந்து மீண்டவராக இருந்தால், கட்டாயம் சில காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீட்டெடுக்கும் செயல்முறையை வேகப்படுத்தும் உணவுகள் சில உள்ளன. இவற்றை உட்கொண்டு வந்தால், பழையபடி நீங்கள் மாறலாம்.

MOST READ:நம் முன்னோர்கள் தொப்பை வராமலிருக்க இத தான் குடிச்சாங்களாம்.. தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

பொதுவாக கொரோனா நோயெதிர்ப்பு மண்டலத்தை தான் பெரிதும் பாதிக்கிறது. எனவே கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் முதலில் நோயெதிர்ப்பு சக்தியைத் திரும்ப பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முடிந்தவரை ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். இழந்த நோயெதிர்ப்பு சக்தியை மீண்டும் பெற்றுவிட்டால், பழையபடி ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனால் கொரோனா தொற்றிற்கு பின் பல விளைவுகள் உள்ளன. இது தொற்று ஏற்பட்டவரை பலவீனமாக்குகிறது மற்றும் உடல் மற்றும் மன ஆற்றலை வடிகட்டுகிறது. ஆகவே பழைய படி உங்கள் வாழ்க்கையைத் திரும்பப் பெற சரியான வழியைப் பின்பற்ற வேண்டும். அது எப்படி என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கொரோனாவில் இருந்து வேகமாக மீட்டெடுக்க உதவும் உணவுகள்!

கொரோனாவில் இருந்து வேகமாக மீட்டெடுக்க உதவும் உணவுகள்!

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. வைட்டமின் சி ஆன்டி-பாடிகளின் உருவாக்கம் மற்றும் விரைவில் குணமாகும் செயல்முறையை வேகப்படுத்த உதவுகின்றன. மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மிகவும் பயனுள்ளது மற்றும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கக்கூடியது. எனவே வைட்டமின் சி சத்தைப் பெற ஆரஞ்சு பழத்தை மட்டுமின்றி, கிவி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பிற சிட்ரஸ் உணவுகளையும் சாப்பிடலாம்.

பாதாம்

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளத. வைட்டமின் ஈ ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்படுகிறது. இது நோய்த்தொற்றால் இழந்த ஆற்றலை மீண்டும் பெற உதவுகிறது. அதற்கு பாதாமை மட்டுமல்லாமல், பிற உலர் பழங்கள் மற்றும் பிற வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளையும் சாப்பிடலாம்.

முட்டைகள்

முட்டைகள்

முட்டைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. கொரோனாவில் இருந்து முழுமையாக குணமாவதற்கு புரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்பது உடலுக்கு மிகவும் முக்கியம். மேலும் இதில் உள்ள அமினோ அமிலங்கள், உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி உடலுக்கு பாதுகாப்பளிக்கும்.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸில் ஜிங்க் அதிகளவில் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதோடு, நச்சக்களை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுகிறது. ஜிங்க் குறைபாடு மோசமான நோயெதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும். ஆகவே வைரஸ்களை எதிர்த்துப் பேராடுவதற்கு நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டும். அதற்கு இறைச்சி மற்றும் சிக்கனை போன்ற உணவுகளை உட்கொண்டு, ஜிங்க் அளவை உடலில் அதிகரிக்கலாம்.

திரவங்கள்

திரவங்கள்

பொதுவாக தொற்று ஏற்பட்டவர்கள் அதிக நீரேற்றத்துடன் இருக்க வேண்டியது முக்கியம். எனவே எவ்வளவு நீரைக் குடிக்க முடியுமோ, அவ்வளவு நீரைக் குடியுங்கள். இதனால் வைரஸை எதிர்த்துப் போராடும் போது, உடல் போதுமான நீரேற்றத்துடன் இருக்கும். ஆகவே வெறும் நீரை மட்டும் குடிக்காமல், பழச்சாறுகள், காய்கறி ஜூஸ்கள் போன்றவற்றையும் குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Foods For A Speedy Recovery From COVID

Many people have been attacked by COVID-19 in our country. The infection drains out your physical energy. It is important for you to follow a healthy diet to recover quickly.
Desktop Bottom Promotion