For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்கால அசதியை போக்கணுமா? அப்ப காலையில இஞ்சியை இப்படியெல்லாம் சேர்த்துக்கோங்க…

நம் உடலுக்கும் தேவையான சூட்டை தருவதற்கு தகுந்த உணவுகளை குளிர்காலத்தில் உண்பது அவசியம். உதாரணமாக இஞ்சி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொண்டால், குளிர் காலத்தில் உடல் சூட்டை தக்க வைத்துக் கொள்ளலாம்.

|

பொதுவாக ஒரு நாளை துவங்கும் போது சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருந்தால் மட்டுமே அன்றைய தினம் சிறந்த நாளாக அமையும். அப்படி சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்றால், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்திட வேண்டும். ஆற்றல் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்த்திடாமல் சரியாக சாப்பிட்டாக வேண்டும்.

Healthy Breakfast Options With Ginger To Fight Winter Cold and Keep The Body Warm

இரவு உணவிற்கு பின்பு காலை உணவிற்கு நீண்ட இடைவெளி இருக்கும். அதனால், எந்த பிரச்னையாக இருந்தாலும் சரி, காலை உணவை மட்டும் தவிர்க்கக்கூடாது என மருத்துவர்கள் முதல் வீட்டு பெரியவர்கள் வரை தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அதிலும் நாம் உட்கொள்ளும் காலை உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். பொதுவாக குளிர்காலத்தில் பசி அதிகமாக இருக்கும். அதனால் தான் மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் நாம் அதிகமான உணவை உட்கொள்கிறோம்.

MOST READ: உங்களுக்கு பிபி, கொலஸ்ட்ரால் வராம இருக்கணுமா? அப்ப மறக்காம தினமும் இத கொஞ்சம் சாப்பிடுங்க...

இதற்கு காரணம் என்னவென்றால், நாம் உட்கொள்ளும் உணவு உடலுக்கு ஆற்றலை தருவதோடு, குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. அதனால் தான், நமக்கு அதிகமாக பசிக்கிறது. எனவே, நம் உடலுக்கும் தேவையான சூட்டை தருவதற்கு தகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

MOST READ: 2020 கோல்டன் குளோப் விருது விழாவிற்கு உடல் முழுதும் தெரியுமாறு அப்பட்டமான உடையில் வந்த க்வினெத்!

உதாரணத்திற்கு இஞ்சி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொண்டால், குளிர் காலத்தில் உடல் சூட்டை தக்க வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில், குளிர் காலத்திற்கு ஏற்ற உணவான இஞ்சியை காலை உணவுகளில் எப்படியெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம் என்று தற்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி டீ

இஞ்சி டீ

காலை எழுந்தவுடன் காபி, டீ குடிக்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும். அப்படி குடிக்கும் டீயில் இஞ்சியை சேர்த்து குடிப்பதால் உடலின் சூட்டை தக்க வைக்க முடியும். அதுமட்டுமல்லாது, இஞ்சி டீ குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி, வயிற்று பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரியாகி விடும். மேலும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய குமட்டல், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கும் மருந்தாகிறது. பால் டீயை தவிர்த்து, இஞ்சி டீ குடிக்கலாம் அல்லது இஞ்சியை நீரில் கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்தாலும் நல்லது.

இஞ்சி சிரப்

இஞ்சி சிரப்

மேப்பிள் சிரப்பிற்கு பதிலாக குளிர்காலத்தில் இஞ்சி சிரப் பயன்படுத்தி பேன் கேக் சாப்பிடுவது சிறந்தது. இந்த இஞ்சி சிரப்பை நாம் குடிக்கும் பானங்கள், ஓட்ஸ், கேக் போன்ற உணவுகளுடனும் கூட சேர்த்துக் கொள்ளலாம். இந்த இஞ்சி சிரப்பை கடைகளில் தான் வாங்க வேண்டுமென்றில்லை. வீட்டிலேயே கூட இதனை செய்யலாம். இஞ்சியை நன்கு தட்டி நீர் சேர்த்து ஒரு 30 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு, பின்பு அதனை வடிகட்டி பயன்படுத்தலாம்.

இஞ்சி ஸ்மூத்தி

இஞ்சி ஸ்மூத்தி

காலை உணவில் இஞ்சி ஸ்மூத்தியை கூட சேர்த்துக் கொள்ளலாம். ஏதாவது ஒரு பழத்துடன் இஞ்சியை சேர்த்து அரைத்து குடிக்கலாம். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், வலி நிவாரணியாகவும், மாதவிடாய் கால தசைப்பிடிப்பு மற்றும் பல்வேறு உடல் நல பிரச்சனைகளை தீர்க்கவும் உதவும்.

இஞ்சி ஜாம் மற்றும் பிரட்

இஞ்சி ஜாம் மற்றும் பிரட்

இஞ்சி ஜாம் அல்லது இஞ்சி கலந்த ஜாம் எதுவாக இருந்தாலும், அதனை காலை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பிரட், ரொட்டி ஆகியவற்றை இஞ்சி ஜாம் தொட்டு சாப்பிடலாம். சுவையிலும் சரி, ஆரோக்கியத்திலும் சரி இது மிகச்சிறந்த ஒன்று.

இஞ்சி காபி

இஞ்சி காபி

இஞ்சி டீ சாதாரணமாக அனைக்கும் தெரிந்தது தான். அது என்ன இஞ்சி காபி? டீயை போலவே காபியிலும் இஞ்சி சேர்த்து குடிக்கலாம். நச்சுக்களை போக்க உதவுவதுடன் சுவையாகவும் இருக்கும். காபியில் இஞ்சி சேர்த்தால் சற்று காரத்தன்மையுடன், மிகுந்த சுவையாக இருக்கும். சாதாரண காபி குடித்து சலித்தவர்கள் இந்த இஞ்சி காபி குடித்து பாருங்கள் வித்தியாசமாக இருப்பதோடு, நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். அதுமட்டுமல்லாது, காபியில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் உங்களை நாள் முழுவதும் உற்சாகத்துடன் வைத்துக் கொள்ளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Breakfast Options With Ginger To Fight Winter Cold and Keep The Body Warm

Ginger is a winter staple where we relish ginger tea, ginger jam, ginger laddoos, etc. Here we bring to you some healthy breakfast options with ginger to keep you warm in the chilly days.
Desktop Bottom Promotion