For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திராட்சை Vs உலர் திராட்சை: இவற்றில் எது ஆரோக்கியமானது?

திராட்சை மற்றும் உலர் திராட்சையைப் பார்க்கும் போது, நம்மில் பலரது மனதிலும் ஒரு கேள்வி எழுவதுண்டு. அது இவற்றில் உண்மையில் மிகவும் ஆரோக்கியமானது எது? என்பது தான்.

|

பொதுவாக பழங்களில் சத்துக்கள் அதிகமாக இருக்கும். பழங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருளும் கூட. பழங்களில் திராட்சை இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையுடன் இருப்பதுடன், அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடியது. அத்தகைய திராட்சையின் உலர்ந்த வடிவம் தான் உலர் திராட்சை. இதுவும் சுவையாக இருப்பதோடு மிகவும் இனிப்பாக இருக்கும். மேலும் இது உலர் பழங்களில் மிகவும் பிரபலமானதும் கூட. அத்துடன் சமையலிலும் இது சேர்க்கப்படுகிறது.

Grapes or Raisins: Which is healthier?

திராட்சை மற்றும் உலர் திராட்சையைப் பார்க்கும் போது, நம்மில் பலரது மனதிலும் ஒரு கேள்வி எழுவதுண்டு. அது இவற்றில் உண்மையில் மிகவும் ஆரோக்கியமானது எது? என்பது தான். உங்கள் மனதிலும் இக்கேள்வி இருக்குமானால், இதற்கான விடையை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

MOST READ: வயித்துல இருக்குற கொழுப்பு குறையணுமா? இந்த காய்கறிகளை மட்டும் கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திராட்சை அல்லது உலர் திராட்சை

திராட்சை அல்லது உலர் திராட்சை

திராட்சை பழத்தில் 80% நீர்ச்சத்து உள்ளது. உலர் திராட்சையில் வெறும் 15% தான் நீர்ச்சத்துள்ளது. திராட்சையுடன் ஒப்பிடும் போது, உலர் திராட்சையின் 3 மடங்கு அதிகமாக ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. திராட்சையில் வைட்டமின்களானது உலர் திராட்சையை விட அதிகமாக உள்ளது. திராட்சையில் உள்ள வைட்டமின் கே, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி2 போன்றவை, உலர் திராட்சையில் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளது.

திராட்சையின் வகைகள்

திராட்சையின் வகைகள்

திராட்சை மற்றும் உலர் திராட்சையில் பல வெரைட்டிகள் உள்ளன. இந்தியாவில் கிடைப்பதோ, பச்சை, கருப்பு மற்றும் சிவப்பு நிற திராட்சைகள் தான். ரெஸ்வெராட்ரோல் ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இது சிவப்பு திராட்சைகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த கலவை இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

உலர் திராட்சையின் வகைகள்

உலர் திராட்சையின் வகைகள்

இந்தியாவில் கோல்டன், பச்சை மற்றும் கருப்பு நிற உலர் திராட்சைகள் எளிதில் கிடைக்கின்றன. இதில் கோல்டன் உலர் திராட்சை மிகவும் ஆரோக்கியமானதாக கூறப்படுகிறது. ஏனெனில் இதில் மற்றவற்றை விட அதிகளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன.

எதில் கலோரிகள் அதிகம்?

எதில் கலோரிகள் அதிகம்?

டயட்டில் இருப்போரது உணவில் பழங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. திராட்சையில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம். இது தான் பசியுணர்வைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கிறது.

இருப்பினும், உலர் திராட்சையில் கலோரிகளானது திராட்சையை விட மிகவும் அதிகமாக உள்ளது. ஏனெனில் திராட்சையை உலர்த்தும் செயல்முறையின் போது, அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் சர்க்கரை, கலோரிகளாக மாறுகின்றன. அரை கப் உலர் திராட்சையில் 250 கலோரிகள் உள்ளன. அதே சமயம் அரை கப் திராட்சையில் வெறும் 30 கலோரிகளே உள்ளன.

அதிக ஊட்டச்சத்து எதில் உள்ளது?

அதிக ஊட்டச்சத்து எதில் உள்ளது?

உலர் திராட்சையில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளன. உலர் திராட்சையில் டார்டாரிக் அமிலம் என்னும் பொருள் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆய்வுகளில் டார்டாரிக் அமிலம் குடல் செயல்பாட்டை மேம்படுத்தவும், குடலில் உள்ள பாக்டீரியாக்கள் சமநிலையில் பராமரிக்கவும் உதவுவதாக தெரிய வந்துள்ளது.

அழகான சருமத்தைப் பெற எதை சாப்பிடலாம்?

அழகான சருமத்தைப் பெற எதை சாப்பிடலாம்?

திராட்சைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி முழுமையாக நிறைந்துள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் சரும செல்களை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுவதோடு, புறஊதாக் கதிர்களால் சருமத்தில் ஏற்படும் புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் திராட்சை கருமையான திட்டுகள் மற்றும் சரும சுருக்கத்தைக் குறைக்கும் பல்வேறு வீட்டு வைத்தியங்களிலும், ஃபேஸ் பேக்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Grapes Or Raisins: Which Is Healthier?

While grapes are sweet seasonal fruits which are relished by people of all ages alike, raisins are the dried form of the fruit. When it comes to grapes vs raisins, let’s see which one bags the prize of being healthier.
Story first published: Friday, February 5, 2021, 12:50 [IST]
Desktop Bottom Promotion