For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

World Tuberculosis Day 2023: காசநோய் உள்ளவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

|

World Tuberculosis Day 2023: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதி உலக காசநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. காசநோய் ஒரு அபாயகரமான நோயாகும். இதற்கு சரியான சிகிச்சையை சரியான நேரத்தில் கொடுக்காமல் இருந்தால், அது ஒரு தீவிரமான பிரச்சனையாக மாறும்.

காசநோய் மைக்ரோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்னும் பாக்டீரியாவால் ஏற்படக்கூடியது. பெரும்பாலும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் இந்நோயால் எளிதில் பாதிக்கப்படுவார்கள். சொல்லப்போனால் உலகிலேயே இரண்டாவது அபாயகரமான நோய் என்றால் அது காசநோய் தான்.

World Tuberculosis Day 2023: Foods To Boost Immunity Of Tuberculosis Patients In Tamil

போதுமான ஓய்வு மற்றும் மருந்துகளை எடுத்து வந்தால், காசநோயை கையாளலாம். காசநோய்க்கு முறையான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால், நிச்சயம் முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் இந்நோய் உள்ளவர்கள் எப்போது வெளியே செல்வதாக இருந்தாலும், மாஸ்க் அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டும். இது தேவையற்ற தொற்றுக்களில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காசநோய்க்கான அறிகுறிகள்

காசநோய்க்கான அறிகுறிகள்

காசநோய் இருந்தால் ஒருசில அறிகுறிகள் தென்படும். அவையாவன:

* நாள்பட்ட தொடர்ச்சியான இருமல்

* எடை குறைவு

* பலவீனம்

* மூச்சு விடுவதில் சிரமம்

இருப்பினும் காசநோயாளிகள் ஒருசில குறிப்பிட்ட உணவுகளை உண்பது மிகவும் நல்லது. இக்கட்டுரையில் காசநோய் உள்ளவர்கள், தங்களது டயட்டில் அவசியம் சேர்க்க வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை டயட்டில் சேர்த்துக் கொண்டால், நிச்சயம் காசநோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

பழங்கள்

பழங்கள்

காசநோய் உள்ளவர்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழங்களான ஆரஞ்சு, மாம்பழம், பப்பாளி, கொய்யா, நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இந்த பழங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது மற்றும் இந்த பழங்கள் காசநோயாளிகளின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்க உதவியாக இருக்கும்.

பூண்டு

பூண்டு

பூண்டு காசநோயாளிகளின் உடலில் மாயங்களை ஏற்படுத்தும். அதுவும் தினமும் காலையில் 2-3 பற்கள் பூண்டு சாப்பிட்டால், பல நோய்கள் உடலில் இருந்து நீங்கும். அதோடு காசநோய்க்கு பூண்டு நல்ல சிகிச்சை அளிக்கும். ஏனெனில் பூண்டில் உள்ள அல்லிசின், காசநோய் உண்டாக்கும் கிருமிகளை நேரடியாக தாக்கும் திறன் கொண்டது. ஆகவே காசநோயை கட்டுப்படுத்த வேண்டுமானால், தினமும் பூண்டு பற்களை வாயில் போட்டு 2-3 நிமிடங்கள் மென்று விழுங்குங்கள்.

பால்

பால்

பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. இது காசநோயாளிக்கு நன்மையளிக்கும் ஒன்றாக கருதப்படுகிறது. பாலில் புரோட்டீன் அதிகம் உள்ளது. காசநோயாளிகள் பாலை தினமும் குடிப்பதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், உடலின் வலிமையும் மேம்படும். காசநோயில் இருந்து விரைவில் விடுபட வேண்டுமானால், பாதாம் பாலை குடிக்க வேண்டும். இது எளிதில் செரிமானமாவதோடு, ஏராளமான வைட்டமின்களையும் கொண்டது.

காய்கறிகள்

காய்கறிகள்

காசநோயாளிகள் காய்கறிகளான கேரட், தக்காளி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். இவை உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள மிகவும் முக்கியமானது.

தானியங்கள்

தானியங்கள்

காசநோயாளிகள் தானியங்களையும் தங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பசி கட்டுப்படுத்தப்படுவதோடு, வேகமாக காசநோயில் இருந்து விடுபடவும் உதவும். இதற்கு இவற்றில் உள்ள நார்ச்சத்து தான் முக்கிய காரணம்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

கடுமையான நோய்களுள் ஒன்றான காசநோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால், காபி மற்றும் டீ குடிப்பதைக் குறைத்து, க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். காசநோய் சிகிச்சையில் கிரீன் டீ நன்மை பயக்கும். ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

வைட்டமின் டி உணவுகள்

வைட்டமின் டி உணவுகள்

காசநோயாளிகளுக்கு வைட்டமின் டி மிகவும் முக்கியமான சத்து. சொல்லப்போனால் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களது உடலில் வைட்டமின் டி மிகவும் குறைவாக இருக்கும். எனவே தினமும் அதிகாலையில் சிறிது நேரம் சூரியக்கதிர்கள் உடலின் மீது படும்படி சிறிதுநேரம் உட்காருங்கள். அதுமட்டுமின்றி வைட்டமின் டி நிறைந்த உணவுகளான கொழுப்பு நிறைந்த மீன்களான டுனா, கானாங்கெளுத்தி, சால்மன், சீஸ், முட்டையின் மஞ்சள் கரு, பால் பொருட்கள், காளான், ஆரஞ்சு ஜூஸ், சோயா பால் மற்றும் செரில்கள் போன்றவற்றை அடிக்கடி உட்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Tuberculosis Day 2023: Foods To Boost Immunity Of Tuberculosis Patients In Tamil

World Tuberculosis Day 2023: Here is a list of foods to boost immunity of tuberculosis patients. Take a look...
Desktop Bottom Promotion