For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு டெங்கு வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க...

மனித உடலுக்குள் செல்லும் வைரஸ் உடன் கடுமையாக எதிர்த்துப் போராடும் அளவில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியலைக் காண்போம்.

|

கொரோனாவில் இருந்து ஏதோ மீட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் உத்தர பிரதேசம், ஹரியானா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகாண்ட், டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் போன்ற பகுதிகளில் டெங்கு வழக்குகளின் அதிகரிப்பு மிகவும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் நமது ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

Eat These Foods To Prevent Dengue This Season

டெங்கு கொசுக்களால் பரவுகிறது. ஆகவே டெங்கு வராமல் இருக்க வேண்டுமானால், முதலில் வீட்டில் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது, கொசு உற்பத்தியைத் தவிர்ப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றுடன், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். இப்போது மனித உடலுக்குள் செல்லும் வைரஸ் உடன் கடுமையாக எதிர்த்துப் போராடும் அளவில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியலைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி ஏராளமாக நிரம்பியுள்ளது. இது வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதன் மூலம் வைரஸுக்கு எதிராக போராட உதவுகிறது. இந்த சி வைட்டமின் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவி புரிந்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. இந்த சிட்ரஸ் பழங்களாவன ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி மற்றும் பல அடங்கும். அதோடு இவற்றில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகளும் அதிகம் நிரம்பியுள்ளன.

தயிர்

தயிர்

இது நிச்சயம் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஆனால், தயிரில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் அதிகம் உள்ளன. இது தவிர, இது நல்ல தூக்கத்தை பெறவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நீங்கள் ஒரு தயிர் பிரியர் என்றால், தினமும் ஒரு கப் தயிர் சாப்பிடுங்கள்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும் இது இந்திய சமையலறையில் பொதுவாக காணப்படும் பொருட்களில் ஒன்றாகும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளைத் தவிர, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.

பூண்டு

பூண்டு

மஞ்சளைப் போன்றே பூண்டும் இந்திய சமையலறையில் ஒரு முக்கிய உணவுப் பொருளாகும். பெரும்பாலான இந்திய உணவுப் பொருட்கள் பூண்டு இல்லாமல் முழுமையடையாது. ஏனெனில் இது தான் இந்த உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்கிறது. பூண்டு உணவிற்கு சுவையை மட்டுமல்ல, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

இஞ்சி

இஞ்சி

குளிர்காலத்தில் இந்தியர்கள் பெரும்பாலும் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள இஞ்சியைக் கொண்டு டீ போட்டு அதிகம் குடிப்பார்கள். இப்படிப்பட்ட இஞ்சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஓர் முக்கியமான உணவுப் பொருள். இது தொண்டைப்புண், உடல் வீக்கம், குமட்டல் மற்றும் டெங்கு காய்ச்சலின் பிற அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக உள்ளது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், டெங்குவை எதிர்த்துப் போராடும் அளவில் நோயெதிர்ப்பு சக்தியைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eat These Foods To Prevent Dengue This Season

In this article, we listed some immunity boosting foods that can help you prevent dengue this season. Read on...
Story first published: Thursday, November 18, 2021, 10:34 [IST]
Desktop Bottom Promotion