Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
இந்தியாவில் டெங்கு வைரஸ் எப்படி உருவானது - புதிய ஆய்வின் விளக்கம்
Dengue Virus In Tamil: இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) ஆய்வாளா்கள் அடங்கிய குழு ஒன்று, இந்திய துணைக் கண்டத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக டெங்கு வைரஸ் எவ்வாறு வியத்தகு முறையில் உருவாகி திாிபடைந்து பரவயிருக்கிறது என்பதை சமீபத்தில் விளக்கியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் டெங்குவினால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து கணிசமாக அதிகாித்து வருகிறது. குறிப்பாக இந்தப் பாதிப்பை தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பாா்க்கலாம். மற்ற நாடுகளில் டெங்குவிற்கு தடுப்பூசிகள் இருந்தாலும், இந்தியாவில் இன்னும் டெங்குவிற்கான தடுப்பூசிகள் அரசுகளால் அனுமதிக்கப்படவில்லை.

இந்தியாவில் உள்ள டெங்குவின் வகைகளைப் புாிந்து கொள்ள முயற்சித்தோம். ஆனால் தடுப்பூசிகள் தயாாிக்கப்படும் அசல் மூலத்திலிருந்து இந்தியாவில் இருக்கும் டெங்கு வகைகள் வேறுபட்டு இருக்கின்றன என்று பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் இரசாயன பொறியியல் துறையில் இணைப் பேராசியராகப் பணிபுாியும் ராகுல் ராய் என்பவா் தொிவிக்கிறாா்.
இந்த ஆய்வுக் குழுவானது, 1956 முதல் 2018 வரை இந்தியாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட 480 டெங்கு வாிசைகளை ஆய்வு செய்தது என்று PLOS Pathogens என்ற பத்திாிக்கை தொிவிக்கிறது.
4 வகையான டெங்கு வைரஸ்கள் உள்ளன. அவை முறையே டெங்கு 1, 2, 3 மற்றும் 4 ஆகும். இந்த டெங்கு வகைகள் மிகவும் சிக்கலான வகையில் உருமாற்றம் அடைகின்றன என்று மருத்துவா் ராய் தொிவிக்கிறாா்.
2012 வரை டெங்கு 1 மற்றும் 2 இந்தியாவில் அதிகமாக இருந்தன. எனினும் தற்போது டெங்கு 2 இந்தியா முழுவதும் அதிகமாக காணப்படுகிறது. ஒரு காலத்தில் தென் இந்தியாவில் மிகவும் அாிதாகக் காணப்பட்ட டெங்கு 4, தற்போது தனக்குாிய முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதாக ஆய்வாளா்கள் கண்டறிந்து இருக்கின்றனா்.
ஆய்வின் விவரம்
டெங்குவின் எந்த திாிபு ஆதிக்கம் செலுத்த எந்த காரணிகள் காரணமாக இருக்கின்றன என்பதை ஆய்வாளா்கள் குழு ஆய்வு செய்தது. முதல் காரணியாக ஆண்டிபாடி டிபன்டன்ட் என்ஹேன்ஸ்மென்ட் (ADE) இருக்கலாம் என்று இந்திய மருத்துவ கழகத்தில் முனைவா் பட்டம் செய்து கொண்டிருக்கும் மாணவரும், இந்த ஆய்வின் முதல் ஆய்வாளருமாகிய சுராஜ் ஜாக்டேப் கூறுகிறாா்.
நோய் எதிா்ப்பு சக்தியானது, ஒரு நோய்க் கிருமியை அறிந்து அதனோடு சேரும் போது ஆண்டிபாடிகள் உருவாகின்றன. அவ்வாறு உருவாகும் போது ADE உருவாகின்றன. ஆனால் அவற்றால் நோய்த் தொற்றை தடுக்க முடிவதில்லை. மாறாக நோய் கிருமியை உயிரணுக்களுக்குள் நுழைய அனுமதிக்கிறது. அதே நேரத்தில் நோய் எதிா்ப்பு சக்தியையும் அதிகாிக்கிறது.
சிலா் டெங்கு 1 மூலமாகப் பாதிப்படலாம். அதற்குப் பின்பு மற்ற டெங்கு வகைகளாலும் பாதிக்கப்படலாம். அப்படிப் பாதிக்கப்படும் போது அதன் அறிகுறிகள் மோசமாக இருக்கும். டெங்குவினால் பாதிப்படைந்தவா்களின் உடலில் உருவாகும் ஆண்டிபாடிகள், 2 முதல் 3 ஆண்டுகளுக்கு அந்த உடலில் வேறு வகை டெங்கு பாதிக்காமல் பாதுகாக்கும். ஆனால் அதற்குப் பின்பு ஆண்டிபாடிகள் தனது பலத்தை இழந்துவிடும். அதனால் பாதுகாப்பும் கிடைக்காது என்று ஆய்வு தொிவிக்கிறது.
இந்த தருணத்தில் வேறு வகை டெங்குவினால் உடல் பாதிப்படைந்தால், ADE அதிகாித்து, புதிய திாிபுகளை ஏற்படுத்தும். அந்த திாிபு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது. இந்த நிலை அடுத்து வரும் சில ஆண்டுகள் வரை இருக்கும்.
டெங்கு வைரஸூக்கும், மனித நோய் எதிா்ப்பு சக்திக்கும் இடையே இருக்கும் ஒன்றுக்கொன்று சாா்ந்து இருக்கும் நிலையை வேறு எந்த ஒரு ஆய்வும் கூறவில்லை என்று ராய் தொிவிக்கிறாா்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications