Latest Updates
-
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
'இனிப்புகளின் ராஜா' என்று அழைக்கப்படும் ஸ்வீட் எது தெரியுமா? எதுனா சொன்ன நம்பவே மாட்டிங்க -
ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிந்தால் உண்மையில் விந்தணு பாதிக்கப்படுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க.. -
பச்சை மிளகாயை வைச்சு இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா நச்சுனு இருக்கும் -
Vijayadashami 2026: விஜய தசமியில் இந்த பொருட்களை வாங்குங்க.. ஆண்டு முழுவதும் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்! -
ஒரு விஷப்பாம்பு இன்னொரு விஷப்பாம்பை கடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
Dengue Foods: உங்களுக்கு டெங்கு காய்ச்சல் வந்துடுச்சா? இந்த உணவுகளை சாப்பிடுங்க.. சீக்கிரம் சரியாயிடுவீங்க...
Dengue Fever In Tamil: தற்போது டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சலானது கொசுக்களின் மூலமாக பரவக்கூடியது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த டெங்குவால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு போதுமான சிகிச்சையைப் பெறாமல் விட்டுவிட்டால், அது தீவிரமாகி உயிரையே பறித்துவிடும். டெங்கு காய்ச்சலானது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைக் குறைப்பதோடு, இரத்த சிவப்பணுக்களை வேகமாக அழிக்கவும் செய்யும்.

இதன் விளைவாக உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் என்னும் புரோட்டீன் மிகவும் குறைந்து, ஹீமோகுளோபின் குறைபாட்டை ஏற்படுத்தி, இரத்த சோகையை உண்டுபண்ணும். டெங்கு நோயாளிகளுக்கு இரத்த சோகை வந்துவிட்டால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
எனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒருசில உணவுகளை உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொள்ளும் போது, இரத்த சிவப்பணுக்களின் அளவு குறையாமல் இருப்பதோடு, விரைவில் டெங்குவில் இருந்து குணமாகவும் உதவி புரியும். இப்போது அப்படிப்பட்ட உணவுகள் எவையென்பதைக் காண்போம்.
1. இரும்புச்சத்துள்ள உணவுகள்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். இரும்புச்சத்தானது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு தேவையான மிகவும் முக்கியமான சத்தாகும். இந்த இரும்புச்சத்து இறைச்சி, மீன், பீன்ஸ், கீரைகள், பருப்பு வகைகள், பேரிச்சம் பழம் போன்றவற்றில் அதிகமாக உள்ளன. எனவே இந்த வகை உணவுகளை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.
2. வைட்டமின் சி நிறைந்த உணவுகள்
வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகளானது டெங்குவில் இருந்து விரைவில் விடுபட உதவி புரியும். ஏனெனில் இரும்புச்சத்து உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி உதவுகிறது. மேலும் வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், தொற்றில் இருந்து விரைவில் விடுபடவும் உதவி புரிகிறது. ஆகவே வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், கிவி, பெர்ரி பழங்கள், ப்ராக்கோலி, தக்காளி போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
3. ஃபோலேட் நிறைந்த உணவுகள்
ஃபோலேட் டெங்குவில் இருந்து சீக்கிரம் குணமாக உதவி புரியும். அதுவும் பி வைட்டமின் ஃபோலேட்டுகள் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்திக்கு மிகவும் தேவையான சத்தாகும்.
கூடுதலாக ஃபோலேட் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, விரைவில் குணமாக உதவுகிறது. இந்த ஃபோலேட் சத்தானது கீரைகள், பீன்ஸ், பருப்பு வகைகளில் அதிகமாக காணப்படுகின்றன. எனவே இந்த வகை உணவுகளையும் டெங்கு நோயாளிகள் உட்கொள்ள வேண்டும்.
4. வைட்டமின் பி12 உணவுகள்
வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள் டெங்குவில் இருந்து விரைவில் குணமாக உதவி புரியும் முக்கியமான சத்தாகும். அதுவும் இது டிஎன்ஏ உருவாக்கத்திற்கும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் மற்றும் நரம்பியல் செயல்பாடுகளுக்கும் பெரிதும் உதவி புரிகின்றன.
இந்த வைட்டமின் பி12 சத்தானது இறைச்சிகள், கோழி, மீன் மற்றும் பால் பொருட்களில் அதிகமாக காணப்படுகின்றன. எனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், விரைவில் குணமாக இந்த வகை உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.
5. புரோட்டீன் உணவுகள்
தசைகளின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் புரோட்டீன் மிகவும் இன்றியமையாத சத்து என்பதை அனைவரும் அறிவோம். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் போது, தசை திசுக்கள் அதிகம் சேதமடைகிறது. ஆகவே தசை திசுக்களில் ஏற்படும் காயங்களை சரிசெய்யவும், அதன் வலிமையை பராமரிக்கவும் புரோட்டீன் மிகவும் தேவை.
கூடுதலாக, புரோட்டீன் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவி புரிகிறது. ஆகவே இறைச்சி, கோழி, மீன், முட்டை, பால் பொருட்கள், பீன்ஸ், பருப்பு வகைகள், நட்ஸ் போன்ற புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், விரைவில் டெங்குவில் இருந்து குணமாகலாம்.
6. முழு தானியங்கள்
டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் குணமாக சாப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான உணவு தான் முழு தானியங்கள். இந்த முழு தானியங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சிறப்பாக நடைபெறவும், சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நீண்ட நேரம் உடலில் ஆற்றல் நிலைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. எனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, கைக்குத்தல் அரிசி, திணை, ஓட்ஸ், முழு தானிய பிரட் போன்றவற்றையும் உணவில் சேர்த்து வாருங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் அனைத்துமே டெங்கு காய்ச்சலின் போது உடலினுள் ஏற்படும் சேதங்களை குறைத்து, விரைவில் டெங்குவில் இருந்து குணமாக உதவி புரியக்கூடிய உணவுகளாகும். எனவே நீங்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து குணமாக இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து, விரைவில் குணமாகுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
