Latest Updates
-
'இனிப்புகளின் ராஜா' என்று அழைக்கப்படும் ஸ்வீட் எது தெரியுமா? எதுனா சொன்ன நம்பவே மாட்டிங்க -
ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிந்தால் உண்மையில் விந்தணு பாதிக்கப்படுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க.. -
பச்சை மிளகாயை வைச்சு இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா நச்சுனு இருக்கும் -
Vijayadashami 2026: விஜய தசமியில் இந்த பொருட்களை வாங்குங்க.. ஆண்டு முழுவதும் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்! -
ஒரு விஷப்பாம்பு இன்னொரு விஷப்பாம்பை கடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
சுக்கிரன் அஸ்தமனமாவதால் இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சியும், கறிவேப்பிலை துவையலும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்கப்போகுதாம் -
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க..
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க..
Bhel Puri Recipe In Tamil: ஆயுத பூஜைக்கு வாங்கிய பொரி நிறைய உள்ளதா? அந்த பொரியை ஒரே மாதிரி மசாலா பொரியாக செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் ரோட்டுக்கடைகளில் விற்கப்படும் பேல் பூரி போன்று செய்து சாப்பிடுங்கள். அதுவும் இந்த மழைக்காலத்தில் இப்படி பேல் பூரி செய்யும் போது, சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இப்படி செய்து சாப்பிடும் போது ஒரே நாளில் பொரி அனைத்தும் காலியாகிவிடும்.

உங்களுக்கு இந்த பேல் பூரியை வீட்டிலேயே எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பேல் பூரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* காய்ந்த பட்டாணி - 1 கப் அல்லது 150 கிராம் (8 மணிநேரம் ஊற
வைத்தது)
* பெரிய உருளைக்கிழங்கு - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 2 சிறிய துண்டு
* கிராம்பு - 2
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* பெரிய வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* புதினா - 10-15 இலை
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* தண்ணீர் - சிறிது
பட்டாணி குழம்பு தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 ஸ்பூன்
* கறி மசாலா - 2 ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* அரைத்து வைத்துள்ள மசாலா
* வேக வைத்து மசித்து வைத்துள்ள பட்டாணி
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
பிற பொருட்கள்...
* பொரி
* துருவிய கேரட்
* பொடியாக நறுக்கிய வெங்காயம்
* ஓமப்பொடி
* பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
* முதலில் 8 மணிநேரம் ஊற வைத்த காய்ந்த பட்டாணியை குக்கரில்
போட்டு, அத்துடன் தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து, அவை
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, அத்துடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள்
தூள் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பட்டாணியையும்,
உருளைக்கிழங்கையும் நன்கு மசித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, பூண்டு, இஞ்சியை சேர்த்து நன்கு
வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து,
வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் புதினா, கொத்தமல்லியை சேர்த்து வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி,
மிளகாய் தூள், கறி மசாலா, மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி,
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பட்டாணியை சேர்த்து,
தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 3
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், பட்டாணி மசாலா
தயார்.
* அடுத்து பேல் பூரி செய்வதற்கு ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு,
அதில் தேவையான அளவு பொரியை எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது துருவிய
கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் 2-3 கரண்டி பட்டாணி மசாலாவை சேர்த்து நன்கு கிளறி
விட்டு, அதை தட்டில் போட்டு, மேலே சிறிது ஓமப்பொடி, நறுக்கிய
வெங்காயம், கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், சுவையான பேல் பூரி
தயார்.



Click it and Unblock the Notifications
