அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க..

Dark Armpits Home Remedies In Tamil: அக்குள் கருமை நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். அதுவும் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியும் போது, அக்குள் கருமையாக இருந்தால், கைகளை தூக்கவே மிகவும் தர்மசங்கடமாக இருக்கும். ஒருவரது அக்குள் கருமையாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் அடிக்கடி ஷேவிங் செய்வது, இறுக்கமான ஆடைகளால் ஏற்படும் உராய்வு, டியோடரண்டுகள் மற்றும் வாசனைப் பொருட்களில் உள்ள சில கெமிக்கல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சிலருக்கு ஹார்மோன் மாற்றங்கள், மரபணு காரணிகள் அல்லது இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய சரும மாற்றங்களாலும் அக்குள் கருமையாக காணப்படலாம்.

Top 5 Home Remedies To Get Rid Of Dark Armpits Naturally And Quickly

இப்படி கருமையாக இருக்கும் அக்குளை வெள்ளையாக்குவதற்கு பலரும் கடைகளில் விற்கப்படும் விலை அதிகமான ரோல்-ஆன்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இருப்பினும் எந்த ஒரு மாற்றமும் தெரிந்திருக்காது. ஆனால் இப்படிப்பட்ட அக்குள் கருமையை வீட்டிலேயே கிடைக்கும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி குறைக்கலாம்.

ஆனால் எலுமிச்சை, பேக்கிங் சோடா போன்ற குறிப்பிட்ட சில இயற்கை பொருட்கள் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தி கருமையை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் அவற்றைப் பயன்படுத்தும் முன் சருமத்தில் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இப்போது அக்குள் கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் காண்போம்.

1. உருளைக்கிழங்கு

சமையலறையில் எளிதில் கிடைக்கக்கூடிய உருளைக்கிழங்கு அக்குள் கருமையைப் போக்க உதவும். அதற்கு உருளைக்கிழங்கை வெட்டி துருவி, அதன் சாற்றினை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் அக்குளை கழுவ வேண்டும். இப்படி தினமும் குளிக்கும் முன் செய்து வர, அக்குள் கருமை மறைவதைக் காணலாம்.

2. எலுமிச்சை

எலுமிச்சை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீங்கி, சருமத்தை பிரகாசமாக்க உதவும். அதற்கு எலுமிச்சை சாற்றுடன் சிறிது நீர் சேர்த்து கலந்து, அதை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் அக்குளை கழுவ வேண்டும். முக்கியமாக அக்குள் வறண்டு போகாமல் இருக்க மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். ஒருவேளை பேக் போன்று போட நினைத்தால், ஒரு சிட்டிகை மஞ்சளை சிறிது தேன் அல்லது தயிருடன் சேர்த்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

3. முல்தானி மெட்டி

முல்தானி மெட்டியும் சரும கருமையை போக்க உதவி புரியும். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது நீரை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.

4. கற்றாழை

கற்றாழையும் சரும கருமையை அகற்றுவதில் சிறந்தது. அதற்கு நற்பதமான கற்றாழையை எடுத்து, ஜெல்லை தனியாக ஒரு கிண்ணத்தில் எுுத்து, ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து நன்கு குளிர வைக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து, அந்த ஜெல்லை அக்குளில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

5. பேக்கிங் சோடா

அக்குளில் இறந்த செல்கள் அதிகம் இருந்தாலும், அது அக்குளை கருமையாக காட்டும். இந்த இறந்த செல்களை திறம்பட நீக்க ஒரு பௌலில் பேக்கிங் சோடாவை எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் அக்குளை கழுவ வேண்டும். ஆனால் பேக்கிங் சோடாவை தினமும் அக்குளில் பயன்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால் அது சரும வறட்சியை அதிகரித்துவிடும். வேண்டுமானால் வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, October 20, 2026, 17:08 [IST]
Desktop Bottom Promotion