பச்சை மிளகாயை வைச்சு இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா நச்சுனு இருக்கும்

Posted By:

Pachai Milagai Kuzhambu Recipe in Tamil: செட்டிநாடு ரெசிபிக்கள் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை. இதற்கு அந்த ரெசிபிக்களில் சேர்க்கப்படும் தனித்துவமான மசாலாக்கள்தான் காரணம். நீங்களும் உங்கள் வீட்டில் வித்தியாசமான செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் இந்த பச்சை மிளகாய் குழம்பை முயற்சி செய்து பாருங்கள். இந்த பச்சை மிளகாய் குழம்பு சப்பாத்தி, தோசை என அனைத்திற்கும் பக்காவான சைடிஷாக இருக்கும்.

Pachai Milagai Kuzhambu Recipe How to Make at Home in Tamil

பொதுவாக பச்சை மிளகாய் என்றாலே மிகவும் காரமாக இருக்கும் பலரும் அதை பார்த்தாலே பயந்து ஓடுவார்கள். அதனால்தான் அதை பெரும்பாலும் மக்கள் சமையலில் பச்சை மிளகாயை மிகவும் குறைவாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த பச்சை மிளகாயை வைத்து செட்டிநாடு பகுதிகளில் அட்டகாசமான கிரேவி செய்வார்கள். வித்தியாசமாக சாப்பிட நினைப்பவர்கள் அவசியம் இந்த பச்சை மிளகாய் குழம்பை முயற்சிக்க வேண்டும்.

உங்களுக்கு செட்டிநாடு பச்சை மிளகாய் மண்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பச்சை மிளகாய் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- பச்சை மிளகாய் - 10-12
- புளி - எலுமிச்சை அளவு
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- வெல்லம் - ஒரு சிறிய கட்டி
- மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
- அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - தேவையான அளவு

செய்முறை:

- முதலில் புளியை சுத்தமாக தூசி இல்லாமல் கழுவி தண்ணீரில் ஊற வைத்து, புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும்.
- வெல்லத்தை துருவியோ அல்லது உடைத்தோ ஒரு டீ ஸ்பூன் அளவிற்கு எடுத்து வைத்து கொள்ளவும்.
- பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி காம்பு பகுதியை நீக்கி வைத்து கொள்ளவும்.
- உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாயை கூட்டியோ அல்லது குறைத்தோ கொள்ளலாம்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- அதில் பச்சை மிளகாயை சேர்த்து நிறம் மாறி மென்மையாகும் வரை வதக்கவும்.
- பச்சை மிளகாய் வெடிக்கலாம் என்பதால் சற்று கவனமாக இருப்பது அவசியம்.
- வதக்கிய பச்சை மிளகாயை ஆற விடவும்.
- பின் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, நைசான விழுதாக அரைக்கவும்.
- இந்த பச்சை மிளகாய் விழுதை தனியே எடுத்து வைக்கவும்.
- அதே வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் சேர்க்கவும். - பின் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பொரிந்ததும் அதனுடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
- அதனுடன் கரைத்து எடுத்து வைத்த புளிக்கரைசலை சேர்க்கவும்.
- அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- புளியின் பச்சை வாசனை போனதும், அரைத்து வைத்த பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும்.
- பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விடவும்.
- அரிசி மாவை ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
- கரைத்து வைத்த அரிசி மாவை குழம்புடன் சேர்த்து கட்டியாகாமல் கிளறவும்.
- மீண்டும் குழம்பு கொதிக்க துவங்கியதும் துருவி வைத்த வெல்லத்தை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால் காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு ரெடி!
- இந்த குழம்பு தோசை, சப்பாத்தி, அல்லது தயிர் சாதத்துக்கு ஏற்ற சைடு டிஷ்ஷாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 20, 2026, 11:38 [IST]
Desktop Bottom Promotion