Latest Updates
-
ஒரு விஷப்பாம்பு இன்னொரு விஷப்பாம்பை கடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
சுக்கிரன் அஸ்தமனமாவதால் இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சியும், கறிவேப்பிலை துவையலும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்கப்போகுதாம் -
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க.. -
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்! -
காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா?
Vijayadashami 2026: விஜய தசமியில் இந்த பொருட்களை வாங்குங்க.. ஆண்டு முழுவதும் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்!
Vijayadashami 2026: இந்தியாவில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று விஜய தசமி. இதை தசரா என்றும் அழைப்பர். இந்த பண்டிகையானது தீமையின் மீது நன்மையின் வெற்றியையும், அநீதியின் மீது நீதியின் வெற்றியையும் குறிக்கிறது. நவராத்திரியில் 9 நாள் போருக்கு பின் பத்தாம் நாளில் கொடிய மகிஷாசுரனை கொன்றதால், விஜய தசமி கொண்டாடப்படுகிறது. மேலும் இதே நாளில் தான் இலங்கையின் மன்னான இராவணனை இராமர் கொன்றார். இதனால் விஜயதசமி வெற்றி, தைரியம் மற்றும் புதிய தொடக்கங்களின் சின்னமாக கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட நன்னாளில் எந்த ஒரு புதிய விஷயங்களை தொடங்கினாலும் அது வெற்றிகரமாக நடக்கும் மற்றும் குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கும் போது, அது ஆண்டு முழுவதும் செல்வம், நேர்மறை ஆற்றல் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது..
இந்தியாவில் உள்ள நிறைய வீடுகளில் விஜய தசமி நாளன்று புதிதாக ஏதாவது ஒன்றை வாங்கும் பழக்கம் பாரம்பரியமாக இருந்து வருகிறது. உங்களுக்கு அப்படிப்பட்ட பழக்கம் எதுவும் இல்லாவிட்டால், இந்த ஆண்டு முதல் தொடங்குங்கள். அதுவும் எந்த மாதிரியான பொருட்களை வாங்கலாம் என்ற கேள்வி எழுந்தால், கீழே விஜய தசமி நாளில் வாங்க வேண்டிய சில மங்களகரமான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களால் எது முடியுமோ அதை வாங்கி நன்மை பெறுங்கள்.
1. சமையலறை பாத்திரங்கள்
விஜய தசமி நாளில் புதிய, பளபளப்பான துருப்பிடிக்காத எஃகு அல்லது செப்புப் பாத்திரங்களை வாங்கும் போது, அது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவந்து, வீட்டில் செழிப்பையும் நல்வாழ்வையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
2. பூஜை பொருட்கள்
விஜய தசமி நாளில் புதிய சாமி சிலைகள், பூக்கள், ஊதுபத்திகள், அகள்விளக்குகள் போன்றவற்றை வாங்குவது நல்லது. இது வீட்டில் ஆன்மீக ஆற்றலை மேம்படுத்தும்.
3. புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள்
விஜய தசமி அறிவுக்கும் கற்றலுக்கும் உகந்த ஒரு மங்களகரமான நாள் என்பதால், படிக்கும் பிள்ளைகளுக்கு நோட் புத்தகங்கள், பேனா, பென்சில் போன்ற பொருட்களை வாங்கலாம்.
4. புதிய ஆடைகள்
விஜய தசமி நாளன்று புதிய ஆடைகளை வாங்குவதும் நல்லது. அதுவும் நேர்மறைத் தன்மையைக் குறிக்கும் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற மங்களகரமான வண்ணங்களில் ஆடைகளை வாங்கும் போது, அது குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
5. தங்கம் மற்றும் வெள்ளி
தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் செல்வம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளங்களாக கருதப்படுகின்றன. எனவே முடிந்தால் விஜய தசமி நாளில் ஒரு சிறிய வெள்ளி அல்லது தங்க நாணத்தை வாங்குங்கள். இது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
6. செடிகள்
தசரா நாளன்று வீட்டிற்கு புதிய செடிகளை வாங்கி வந்து வளர்ப்பதும் நல்லது. ஏனெனில் செடிகள் வளர்ச்சி, செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றல்களின் சின்னமாக விளங்குகின்றன. அதுவும் துளசி, மணி பிளாண்ட், மூங்கில் போன்றவற்றை வாங்கி வளர்ப்பது இன்னும் நல்லது.
7. புதிய முதலீடுகள்
விஜய தசமி நாளன்று புதிதாக எந்த ஒரு செயலை செய்தாலும், அது வெற்றிகரமாக இருக்கும் என்பதால், இந்நாளில் மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள் அல்லது காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது நிதி வளர்ச்சிக்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
