Latest Updates
-
'இனிப்புகளின் ராஜா' என்று அழைக்கப்படும் ஸ்வீட் எது தெரியுமா? எதுனா சொன்ன நம்பவே மாட்டிங்க -
பச்சை மிளகாயை வைச்சு இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா நச்சுனு இருக்கும் -
Vijayadashami 2026: விஜய தசமியில் இந்த பொருட்களை வாங்குங்க.. ஆண்டு முழுவதும் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்! -
ஒரு விஷப்பாம்பு இன்னொரு விஷப்பாம்பை கடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
சுக்கிரன் அஸ்தமனமாவதால் இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சியும், கறிவேப்பிலை துவையலும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்கப்போகுதாம் -
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க.. -
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்!
ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிந்தால் உண்மையில் விந்தணு பாதிக்கப்படுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க..
Tight Underwear Affect Fertility: சமீப காலமாக ஆண் மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. இப்படி ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கிய காரணங்களில் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. அத்துடன் ஆண்கள் அணியும் உள்ளாடைகளும் விந்தணுக்களின் உற்பத்தியையும், தரத்தையும் பாதிக்குமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளன.

இப்படி ஆண்களின் மனதில் இருக்கும் இந்த இந்த கேள்விக்கு தெளிவாக விளக்கமளிக்கும் வகையில் சிறுநீரக நிபுணரான டாக்டர் வெங்கட் சுப்ரமணியம் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, "ஆண் மலட்டுத்தன்மை இன்று அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு விந்தணுக்களின் தரம் மோசமாக இருப்பது தான் முக்கிய காரணமாக உள்ளது. விதைப்பையின் வெப்பநிலை உடலின் வெப்பநிலையை விட குறைவாக இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருந்தால் தான் விந்தகங்கள் (Testicles) சரியாக செயல்பட்டு விந்தணுக்களின் தரம் நன்றாக இருக்கும்.
எப்போதெல்லம் விந்தகங்களின் வெப்பநிலை அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் விந்தணுக்களின் தரம் மோசமாக இருக்கும். அதனால் தான் விந்தக நரம்பு வீக்கம் (varicocele) மற்றும் கீழிறங்காத விதை (undescended testis) போன்ற நிலைகளில் விந்தணுக்களின் தரம் மோசமாக உள்ளது.
கோட்பாட்டு ரீதியாக, உள்ளாடைகள் அணிவதால் விதைப்பையின் வெப்பநிலை அதிகரித்து, அதனால் விந்தணுக்களின் உற்பத்தி சற்று பாதிக்கப்படலாம். எனவே பாக்ஸர்ஸ் அணிபவர்களுக்கு விதைப்பை சூடாகாது, இதனால் அவர்களின் விந்தணு உற்பத்தியிலும் எவ்வித பிரச்சனை இருக்காது.
நடைமுறை ரீதியாக, யாரும் நீண்ட நேரம் இறுக்கமான உள்ளாடையை அணிந்திருக்கப் போவதில்லை. மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் விதைப்பையின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து சிறிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், பொதுவாக இதுவே முதன்மையான கவலைக்குரிய விஷயமாக இருப்பதில்லை. கருவுறுதலைப் பாதிக்கும் இன்னும் முக்கியமான காரணிகள் உள்ளன. அவை:
* புகைப்பிடிப்பது
* மது அருந்துவது
* உடல் பருமன்
* மோசமான வாழ்க்கை முறை பழக்கங்கள் போன்றவை விந்தணுக்களின் உற்பத்தியை நேரடியாகவே பாதிக்கக்கூடியவை." என்று கூறினார்.
உள்ளாடையை எப்படி தேர்வு செய்யணும்?
"ஆண்கள் உள்ளாடைகளை தேர்ந்தெடுக்கும் போது, மிகவும் இறுக்கமாக இல்லாமல், சௌகரியமாக, காற்றோட்டமாக, விதைப்பை அதிகமாக தொய்வடையாதவாறு பார்த்து எடுங்கள். மொத்தத்தில் உள்ளாடை மிகவும் இறுக்கமாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இல்லாமல் சரியாக இருக்குமாறான உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணியுங்கள். உங்கள் அன்றாடப் பழக்கவழக்கங்கள், நீங்கள் அணியும் ஆடைகளை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை மறவாதீர்கள்" என்று டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
