Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
டெங்கு காய்ச்சலில் இருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்ற எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கணும் தெரியுமா?
Dengue In Tamil: இப்பொழுது மழைக்காலம் தொடங்கி விட்டது. எங்கு பார்த்தாலும் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கி விட்டது. குறிப்பாக டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் தான் அதிகளவில் பாதிப்படைகின்றனர். ஏன் சில சமயங்களில் இந்த டெங்கு காய்ச்சலால் நிறைய குழந்தைகள் இறக்கவும் செய்கின்றனர்.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி நிலவரப்படி தெற்காசியாவில் 209,000 க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன மற்றும் 564 இறப்புகளும் பதிவாகியுள்ளன. நம் அண்டை நாடான பங்களாதேஷில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 21,000 க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.

எனவே இந்த டெங்கு காய்ச்சலில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைப்பது மிகவும் அவசியம். அதற்கான சிறந்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம்.
டெங்கு என்றால் என்ன?
டெங்கு என்பது ஏடிஸ் கொசுக்களால் பரவும் நோயாகும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல பேருக்கு அறிகுறிகள் தெரிவதில்லை. அரிதான நிலையில் மட்டுமே அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த ஏடிஸ் கொசுக்கள் பொதுவாக பகலில் தான் கடிக்கும். சூரிய உதயமான 2 மணி நேரத்திற்கு அப்புறம், சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பு நேரங்களில் மட்டுமே இந்த கொசுக்கள் கடிக்கும். எனவே இந்த நேரங்களில் டெங்கு பரவ அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.
உங்கள் வீடு, சுற்றுப்புறம் மற்றும் வேலை செய்யும் இடத்தை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தாலோ, மழைநீர் தேங்கி இருந்தாலோ ஆபத்து நேரிட அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ஏடிஸ் கொசுக்கள் தண்ணீரில் இனப்பெருக்கம் செய்து தண்ணீரில் முட்டையிடக் கூடியது. இந்த கொசுக்கள் மிகக் குறைந்த தண்ணீரில் கூட தன் முட்டைகளை இடும். வீட்டில் பயன்படுத்தும் வாளிகள், பழைய டயர்கள், குட்டைகள் மற்றும் பாட்டில்களில் முட்டைகளை இடுகின்றன.
டெங்கு எப்படி பரவுகிறது?
டெங்கு ஒருவரிடம் இருந்து நேரடியாக மற்றவருக்கு பரவாது. ஆனால் ஒருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர் பாதிக்கப்பட்ட முதல் வாரத்திலேயே வைரஸ் ஆனது அவரது இரத்தத்தில் இருக்கும். இந்த நேரத்தில் கொசு கடித்தால் கொசுவானது டெங்குவால் பாதிப்படைகிறது. பாதிக்கப்பட்ட டெங்கு கொசு மற்றவரை கடிக்கும் போது டெங்கு காய்ச்சலை மற்றவருக்கு பரப்புகிறது. டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் அல்லது பிறக்கும் போது தங்கள் குழந்தைக்கும் டெங்குவை அனுப்புகின்றனர்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:
* திடீர் அதீத காய்ச்சல், 40 செல்சியஸ் வரை காய்ச்சல் இருக்கும்.
* கடுமையான தலைவலி
* கண்களுக்கு பின்னால் வலி உண்டாதல்
* தசை மற்றும் மூட்டு வலிகள்
* குமட்டல்
* வாந்தி
* வீங்கிய சுரப்பிகள்
* தோல் வெடிப்பு ஏற்படுதல்
கொசுக்கடியில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற வழிகள்:
* பிறந்த குழந்தைகள் தூங்கும் தொட்டில்கள் மற்றும் விளையாடும் இடங்களில் கொசு வலைகளை பயன்படுத்த வேண்டும்.
* குழந்தைகள் உள்ளே அல்லது வெளியே விளையாடும் போது நீண்ட கை மற்றும் நீண்ட பேண்ட்களை அணியச் சொல்லுங்கள்.
* மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கொசு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும். 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எலுமிச்சை யூகலிப்டஸ் (OLE) அல்லது பாரா-மெந்தேன்-டையால் (PMD) எண்ணெய் கொண்ட கொசு விரட்டி க்ரீம்களை தவிர்க்க வேண்டும்.
* கொசுக்கள் சுறுசுறுப்பாக இருக்கும் காலை வேளையில் மற்றும் மாலைப் பொழுதில் வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.
* உங்கள் வீட்டைச் சுற்றி கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதை குறைக்க வேண்டும்.
* வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* உங்கள் வீடு, பள்ளி மற்றும் பணியிடங்களைச் சுற்றியுள்ள தண்ணீர் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும். உதாரணமாக, பாட்டில்கள், பிளாஸ்டிக் பெட்டிகள், டயர்கள், தேங்காய் ஓடுகள் அல்லது தண்ணீரை சேகரிக்கக்கூடிய பொருட்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
* தண்ணீர் தேங்காமல் இருக்க அடைபட்ட வடிகால்கள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* பூந்தொட்டிகள் மற்றும் வாளிகள் போன்ற தண்ணீரைச் சேகரித்து வைத்திருக்கும் கொள்கலன்களை தவறாமல் காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் மூடி வைக்க வேண்டும்.
* கொசுக்கள் முட்டையிடுவதைத் தடுக்க சிறிய துளைகளைக் கொண்ட இறுக்கமான மூடிகள், திரைகள் அல்லது கம்பி வலையைப் பயன்படுத்த வேண்டும்.
* கொசு முட்டைகளை அகற்ற தண்ணீர் பாத்திரங்களை காலி செய்து ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* உங்கள் வீட்டில் உள்ள குடும்பத்தினரை கடிக்காமல் இருக்க கொசு வலைகள் மற்றும் கொசு விரட்டிகளை பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications