For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஒருவரது டயட் ஆரோக்கியமானதாக இருந்தால், உடலில் சேரும் கழிவுகளின் அளவு குறையும். மேலும் சில வகை உணவுகள் உடலை சமநிலையில் பராமரிக்க மற்றும் கழிவுகளை அகற்ற உதவி புரியும்.

|

ஒருவரது உடல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், உடலில் கழிவுகள் அதிகம் தேங்கக்கூடாது. கழிவுகள் அதிகம் தேங்கினால், உடலுறுப்புக்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். உள்ளுறுப்புக்கள் சரியாக செயல்படாமல் போனால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே உடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்றிவிட வேண்டும்.

Clean Your Body Daily With These 10 Foods

உடலில் நச்சுக்கள் மற்றும் கழிவுகள் பல வழிகளில் தேங்குகிறது. இப்படி தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற உதவுவது தான் உணவுகள். எப்படி உணவுகளின் மூலம் கழிவுகள் உடலில் சேர்கிறதோ, அதே உணவுகளைக் கொண்டே கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற முடியும். அதற்கு ஆரோக்கியமான டயட்டை முதலில் நாம் மேற்கொள்ள வேண்டும். ஒருவரது டயட் ஆரோக்கியமானதாக இருந்தால், உடலில் சேரும் கழிவுகளின் அளவு குறையும்.

MOST READ: உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...!

மேலும் சில வகை உணவுகள் உடலை சமநிலையில் பராமரிக்க மற்றும் கழிவுகளை அகற்ற உதவி புரியும். இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போவது, உடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து தான். அந்த உணவுகள் எவையென்று காண்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இவை உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும். மேலும் எலுமிச்சை பித்தப்பையின் செயல்பாட்டைமேம்படுத்தும் மற்றும் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும். ஆகவே உடலை அன்றாடம் சுத்தம் செய்ய நினைப்பவர்கள், தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

தக்காளி

தக்காளி

தக்காளியில் வைட்டமின் சி மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது இதயத்திற்கு பாதுகாப்பு அளிப்பதோடு, ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். தக்காளியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான லைகோபைன் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றும். அதற்கு தினமும் தக்காளியை புரோட்டீன் உணவுகளுடன் சேர்த்து சாலட் தயாரித்து ஒரு பௌல் சாப்பிட வேண்டும்.

திராட்சை

திராட்சை

திராட்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர உட்பொருட்கள், இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, கொலஸ்ட்ராலை சீராக்கும், திசுக்களை சுத்தம் செய்யும், செரிமானம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். ஆகவே தினமும் ஸ்நாக்ஸ் வேளையில் ஒரு பௌல் திராட்சையை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

செலரி

செலரி

செலரி ஆரோக்கியமான காய்கறிகளுள் ஒன்றாகும். இது உடலில் இருந்து நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறப்பாக செய்யும். மேலும் இதில் உள்ள நீர்ப்பெருக்கி பண்புகள், உடலில் நீர்த்தேக்கத்தைத் தடுக்கும். அதோடு இதில் உள்ள நார்ச்சத்து, செரிமானம் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதற்கு தினமும் செலரியை ஆப்பிள் மற்றும் சிறிது பீட்ரூட்டுடன் சேர்த்து ஸ்மூத்தி தயாரித்துக் குடிக்கலாம்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ் உடலில் இருக்கும் நச்சுக்களை சிறுநீரின் வழியே வெளியேற்றும் திறனுடையது. மேலும் இதில் பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள வளமான அளவிலான நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை நீக்கும், கொலஸ்ட்ரால் அளவை சீராக்கும் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் ஆப்பிள் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் பசியைப் போக்கி திருப்திப்படுத்தும். இதனால் அதிகமாக உணவு உண்ணப்படுவது தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும். அதற்கு ஆப்பிளை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஃபுரூட் சாலட் வடிவிலோ அல்லது ஸ்மூத்தியாகவோ எடுக்கலாம்.

மாதுளை

மாதுளை

மாதுளையில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஏராளமாக உள்ளது. பல ஆய்வுகளில் மாதுளை பல கொடிய நோய்களான புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இந்த பழத்திற்கு ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் திறன் இருப்பது தான் காரணம். ஆகவே அன்றாடம் மாதுளையை பிடித்த வடிவில் தவறாமல் உட்கொள்ளுங்கள்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன மற்றும் இது நச்சுக்களை வெளியேற்றுவதில் சிறப்பான பொருளும் கூட. பழங்காலம் முதலாக ஆஸ்துமா, இரத்த நச்சு, மூக்கடைப்பு மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்க வெங்காயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே இத்தகைய வெங்காயத்தை அன்றாட சமையலில் பயன்படுத்துவதுடன், காய்கறி சாலட்டுடன் சேர்த்தும் சாப்பிடுங்கள். முக்கியமாக வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், அதன் முழு நன்மைகளையும் பெறலாம் என்பதை மறவாதீர்கள்.

பார்ஸ்லி

பார்ஸ்லி

இந்த மூலிகையில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் குடலை சுத்தம் செய்யும். பார்ஸ்லி உடலில் சோடியத்தை வெளியேற்ற ஊக்குவிக்கும் மற்றும் நீர்த்தேக்கத்தைத் தடுக்கும். அதற்கு ஒரு கப் பார்ஸ்லி டீயை குடிக்கலாம் அல்லது சமையலில் சிறிது பார்ஸ்லியை சேர்த்துக் கொள்ளலாம்.

கூனைப்பூ (Artichoke)

கூனைப்பூ (Artichoke)

கூனைப்பூக்கள் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. இது நீர்த்தேக்கத்தைத் தடுக்கும் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும். இந்த காய்கறியில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அனைத்தும் செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் இது பித்த நீரோட்டத்தை மேம்படுத்தி, உடலை சுத்தம் செய்யும் பணி சிறப்பாக நடைபெற உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Clean Your Body Daily With These 10 Foods

Eating certain foods can restore balance in our body and detoxify it, effectively eliminating all the toxins. The following 10 foods can clean your body. Read on...
Story first published: Wednesday, October 16, 2019, 11:00 [IST]
Desktop Bottom Promotion