For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  காதுக்குள்ள அப்பப்போ கொய்ங்ங்.... ன்னு சத்தம் கேட்குதா?... இத செஞ்சா சரியாகிடும்...

  |

  உலகில் ஏழு பேரில் ஒருவருக்கு காது தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது, குறிப்பாக காது கேளாமை பாதிப்பு இருப்பதாக அறியப்படுகிறது. இதனை வைத்து கணக்கிடும்போது, காது கேளாதவர்களின் எண்ணிக்கை மில்லியனை தாண்டி செல்லும்.

  resons of ear problems in tamil

  உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகையில் சுமார் 275 மில்லியன் மக்களுக்கு மிதமானது முதன் அதிகமான அளவு வரை காது கேளாமை தொடர்பான பாதிப்புகள் இருப்பதாக தெரிகிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  காது

  காது

  ஐம்புலன்களில் கேட்கும் உணர்வைக் கொண்டது காது. மனித உடலை நோக்கி வரும் ஒலி அலைகளை சீராக ஆய்வு செய்வதற்கு, காதுகள் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். மொழி அல்லது சத்தம் வாயிலாக தொடர்பை ஏற்படுத்துவதற்கு துணை புரிவது ஒலிகள். ஆபத்தில் இருந்து ஒருவரைப் பாதுகாக்க ஒலி ஒரு முக்கிய பங்காற்றுகிறது. அதே நேரத்தில், அளவுக்கு அதிகமான சத்தம் முக்கிய உறுப்புகளுக்கு தற்காலிக அல்லது நிரந்தர சேதத்தை உண்டாக்கலாம்.

  மனித ஆயுளில் 50 வயதிற்கு பின், காது தொடர்பான பிரச்சனைகள் பொதுவாக உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. 70 வயதைக் கடந்தவர்களில் 70% மற்றும் 50 வயதைக் கடந்தவர்களில் 40% மக்கள் காது தொடர்பான பிரச்சனைகளில் அவதிப்பட நேரலாம்.

  வகைகள்

  வகைகள்

  பெரியவர்களுக்கு ஏற்படும் காது கேளாமை தொடர்பான பொதுவான வகைகளை இப்போது பார்க்கலாம்.

  1. வயதானதால் காது சரியாகக் கேளாமை - காதுகளில் உள்ள முடி அணுக்கள் உடைந்து, மீளுருவாக்கம் வயது மூப்பின் காரணமாக மிக தாமதமாக நடைபெறும்.

  2. சத்தத்தின் வெளிப்பாடு - நீண்ட நேரம் அதிக ஒலியை கேட்பதால், காதில் உள்ள முடி அணுக்கள் சேதமடையலாம். இந்த அணுக்கள் ஒலியில் உள்ள அதிர்வுகளை தேர்ந்தெடுத்து சிக்னல் மூலமாக மூளைக்கு அனுப்பும் பணியை செய்கிறது.

  காது கேளாமையைத் தடுக்க உதவும் 5 சூப் உணவுகளைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

  உணவு

  உணவு

  நமது உடலின் அன்றாட செயல்பாடுகளுக்கு உணவு மிகவும் முக்கியம். நாம் உண்ணும் உணவே நாம் வாழ்வதின் அடையாளம். இது எளிதாக இருந்தாலும் மிகவும் உண்மையான ஒரு விஷயம் ஆகும். ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான கேட்கும் ஆற்றலைத் தரும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. ஆரோக்கியமான முறையில் காது கேட்பதற்கு உணவு மிகவும் அவசியம் என்பது பலரும் விவாதிக்கும் ஒரு தலைப்பாகவே இருந்து வருகிறது. உங்கள் காதுகளின் கேட்கும் சக்தியை அதிகரிக்கும் சில உணவுகளைப் பற்றி இப்போது நாம் காணலாம்.

  நாம் எடுத்துக் கொள்ளும் உணவை இரண்டு விதமாக பிரித்துக் கொள்ளலாம். முதல் வகை, நாம் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி . இரண்டாவது, வைட்டமின் மற்றும் மினரல்கள் என்னும் ஊட்டச்சத்துகள் . முதல் வகையிலிருந்து தொடங்கலாம்.

  மீன்

  மீன்

  சர்டெயின்ஸ், டூனா மற்றும் ட்ரௌட் போன்ற குளிர் நீர் மீன் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி போன்றவற்றின் மிகச்சிறந்த ஆதாரமாக விளங்குகின்றன. உடலில் அழுத்தத்தை அதிகரிக்கும் தீங்கு விளைவிக்கும் கூறுகளான ப்ரீ ரேடிகல்களை எதிர்க்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் துணை புரிகின்றன. மின்னணு கட்டமைப்பை நிறைவு செய்ய ஒரு எலெக்ட்ரான் தேவைப்படும் நிலையில் உள்ள கூறுகள் தான் ப்ரீ ரேடிகல் என்று அழைக்கப்படுபவையாகும்.

  இவை உடலின் எல்லா பகுதிகளிலும் இருப்பவை. இவற்றின் இருப்பு தவிர்க்கமுடியாததாகும். மீன், காது கூர்மைக்கு ஒரு சிறந்த தோழனாக விளங்குகிறது. காதுகளில் உள்ள இரத்த குழாய்கள் வலிமையடைவதற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உதவுகிறது. ஆகவே சர்டைன், டூனா, திரௌட் போன்ற மீன் வகைகளை உங்கள் உணவில் இணைப்பதால் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உங்கள் உடலில் அதிகரிக்கிறது. காது கேளாமையைத் தடுக்க உதவும் மற்றொரு கூறு மீனில் உள்ளது. அது ஜின்க்.

  ப்ரோகோலி

  ப்ரோகோலி

  பிறந்த குழந்தைக்கு திட உணவை தொடங்கும், காலம் முதல் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு உணவுப் பொருள், ப்ரோகோலி. ப்ரோகோலியில் போலிக் அமிலம் அதிகமாக உள்ளது. போலிக் அமிலத்தில் அன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. இவை அழுத்தத்தை ஏற்படுத்தும் ப்ரீ ரேடிகல்களை அழிக்க உதவுகிறது. தொடர்ந்து அன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் காடு கேளாமை 20% வரை தடுக்கப்படுகிறது.

  ஆரஞ்சு

  ஆரஞ்சு

  இந்த மந்திரப் பழம் வைட்டமின் சி சத்தை முழுமையாகக் கொண்ட ஒரு பழம். இதில் சக்தி மிக்க அன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளது. ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. இரத்த குழாய்களில் உள்ள அசுத்தங்களை போக்கி சுத்தம் செய்ய வைட்டமின் ஈ உதவுகிறது. மற்றும் இரத்த குழாய்களை மறுபடியும் உயிர்ப்பிக்கிறது. உடலில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வைட்டமின் சி உதவுகிறது.

  வாழைப்பழம்

  வாழைப்பழம்

  குடல் இயக்கத்திற்கு வாழைப்பழம் பெருமளவில் உதவுகிறது. அது மட்டுமில்லாமல் கேட்கும் திறனை அதிகரிக்கவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அளவு அதிகமாக இருக்கும். இரைச்சல் காரணமாக காது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உதவுகிறது.

  கிங்கோ பிலோபா

  கிங்கோ பிலோபா

  காதில் ஒரு வித இரைச்சல் கேட்டுக் கொண்டே இருப்பதாக சிலர் கூறுவதை நாம் கேட்டிருக்கலாம். இதனை காது இரைச்சல் நிலை என்று மருத்துவ மொழியில் கூறுவார்கள். காதுகளில் உள்ள வால் நரம்பை சேதப்படுத்தும் கூறு ஜென்டாமிசின். இந்த கூறுகளிலிருந்து காதுகளைப் பாதுக்காக்கும் தன்மை கிங்கோ பிலோபாவிற்கு உள்ளதாக தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கிங்கோ , நரம்பியல் செயல்பாடுகளை மேம்படுத்தி சீர் செய்வதாகவும் அறியப்படுகிறது. காது மற்றும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது இந்த அற்புத மூலிகை. இதனால் ஆக்சிஜென் பயன்பாடு சீராகி, சேதம் உண்டாக்கும் ப்ரீ ரேடிகல்களை எதிர்த்து உடல் பாதுகாக்கப்படுகிறது.

  ஊட்டச்சத்துக்கள்

  ஊட்டச்சத்துக்கள்

  உடலை உறுதியோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக் கொள்வதற்கு வைட்டமின் மற்றும் மினரல்கள் இன்றியமையாதவையாகும். ஆராய்ச்சி மற்றும் ஊட்டச்சத்து விஞ்ஞானத்தில் சமீப கால வளர்ச்சியில் , நாம் உண்ணும் உணவு நோய்ககள் வராமல் தடுக்க மட்டுமல்ல, நோய்களின் சிகிச்சைக்கும் பயன்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காதுகளின் கேட்கும் தினில் மாற்றத்தை உண்டாக்கும் ஊட்டச்சத்துகளைப் பற்றி இப்போது நாம் காணலாம்.

  பொட்டாசியம்

  பொட்டாசியம்

  உடல் மற்றும் உடல் திசுக்களில் உள்ள நீர் அளவைப் பராமரிப்பது பொட்டசியத்தின் செயல்பாடாகும். உங்கள் காதுகளில் உள்ள திரவ அளவில் மாறுபாடு ஏற்படுவதால் தலை சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த திரவ அளவு பொட்டாசியம் அளவை சார்ந்தே உள்ளது. உங்கள் காது நலனில் பொட்டாசியம் அதிகமாக தேவைப்படுகிறது, குறிப்பாக ஒலி சமிக்ஞைகள் மின் தூண்டுதலாக மாற்றம் செய்யப்படும் இடங்களில் இதன் தேவை அதிகரிக்கிறது.

  வாழைப்பழம், ஆரஞ்சு, மெலன், அப்ரிகாட் போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். உலர்ந்த திராட்சை, பீன்ஸ், பால், பசலைக் கீரை மற்றும் உருளைக்கிழங்கில் இந்த மினரல் அதிகம் உள்ளது. மனித உடலுக்கு தினசரி தேவையான பொட்டாசியம் அளவு 3500மிகி அளவாகும்.

  போலிக் அமிலம்

  போலிக் அமிலம்

  உடலில் போதுமான அளவு போலிக் அமிலம் இருந்தால் அணுக்கள் மறு வளர்ச்சி உச்ச கட்ட அளவில் இருக்கும். போலிக் அமிலத்தின் கரிம நிலை போலேட் ஆகும். போலேட் உடலில் அதிக அளவு இருப்பதால், புதிய DNA மற்றும் RNA உருவாக்கம் நன்றாக இருக்கும். வயது அதிகரிக்கும்போது உடலில் போலேட் வழங்குதலில் குறைப்பாடு தோன்றும். அதனால் தான் வயது முதிர்ந்தவர்களுக்கு காது கேளாமை உண்டாகிறது. இளம் வயதில் போலேட் உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளும் முதியவர்கள் இந்த பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். கீரை, ப்ரோகோலி, பீன்ஸ், முட்டை, முழு தானியங்கள், செறிவூட்டிய தானியங்கள், பருப்பு வகைகள், அஸ்பரகஸ் போன்ற உணவு வகைகள் போலிக் அமிலத்தை அதிகமாக கொடுக்கும் உணவுகளாகும். போலிக் அமிலத்துடன் இணைந்து வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் உணவில் சேர்ப்பதால் காது தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகின்றன.

  மெக்னீசியம்

  மெக்னீசியம்

  தேவையற்ற ஒலிகளில் இருந்து நம் காதுகளை பாதுகாக்கும் ஒரு கவசம் மெக்னீசியம். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால், இரைச்சல் உண்டாக்கும் காது கேளாமையில் இருந்து உங்கள் காதுகளை மெக்னீசியம் பாதுகாக்கிறது. இரைச்சல் அல்லது அதிக ஒலியால் உங்கள் காதுகள் பாதிக்கப்படும்போது, அந்த ஒலியிலிருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்து மெக்னீசியம் போராடுகிறது. காதுகளின் உட்பகுதியில் இருக்கும் முடி அணுக்களை மெக்னீசியம் ஒரு பாதுகாப்பு கவசம் போல் இருந்து பாதுகாக்கிறது. மெக்னீசியம் குறைபாட்டால் இரத்த குழாய் சுருங்கும் நிலை உண்டாகலாம். இதனால் ஆக்சிஜன் குறைபாடும் உண்டாகலாம் என்பது ஒரு முக்கிய தகவல் ஆகும். கூனைப்பூ, ப்ரோகோலி, மீன், முழு தானியம், பருப்பு, உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழத்தில் இந்த கனிமம் அதிகம் உள்ளது.

  ஜிங்க்

  ஜிங்க்

  உங்கள் உட்புற காதுகளை காக்கும் ஒரு கனிமம் ஜின்க். வயது முதிர்வு காரணமாக உண்டாகும் காது கேளாமை அல்லது வயது தொடர்பான மற்ற காது தொந்தரவுகள் போன்றவற்றால் காதுகளுக்கு ஏற்படும் சேதங்களை தடுக்க உதவுவது ஜின்க். ஜிங்கில் நோயெதிர்ப்பு தன்மை அதிகம் உள்ளது. ஆகவே முதன் முறையாக எந்த ஒரு தாக்குதல் உடலில் ஏற்பட்டாலும் அதனை எதிர்க்கும் தன்மை உடலுக்கு தானாக கிடைக்கிறது. உடலில் அதிக அளவு ஜின்க் இருப்பதால் உடல் தாமிரத்தை உறிஞ்சுதலில் இடையூறு ஏற்படலாம். புதிய அணுக்களின் வளர்ச்சிக்கு இந்த கனிமம் மிக முக்கிய கூறாக செயல்படுகிறது. கடற்சிப்பிகள், மாட்டிறைச்சி, கோதுமை போன்ற தானியம், ஷெல் மீன் மற்றும் டார்க் சாக்லேட் போன்றவற்றில் இந்த கனிமம் அதிகம் உள்ளது. சில விஷயங்களை முறையாக கடைபிடிப்பதனன் மூலம் இந்த பிரச்னையை தவிர்க்கலாம்.

  அதிக ஒலி

  அதிக ஒலி

  இசையும் இரைச்சலும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை. உங்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அதிக ஒலியுடன் கூடிய இரைச்சலை எழுப்புவதால் உங்கள் காதுகள் சேதமடையலாம்.

  இரைச்சலுக்கு ஆதரவு வேண்டாம்

  இரைச்சலுக்கு ஆதரவு வேண்டாம்

  இரைச்சல் மதிப்பீடு குறைந்த உபகரணங்களை பயன்படுத்தவும். உங்கள் வாழ்க்கையில் அதிக ஒலியுடன் கூடிய இரைச்சலுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.

  பாதுகாப்பு உபகரணங்கள்

  பாதுகாப்பு உபகரணங்கள்

  அதிக ஒலி அல்லது இரைச்சல் உள்ள இடங்களுக்கு செல்ல நேரும்போது உங்களுடன் அவசியம் காதுகளை பாதுகாக்கும் உபகரணங்களை எடுத்துச் செல்லவும்.

  உதாரணமாக,

  காது பிளக் (Earplug)

  காது பிளக் (Earplug)

  PC

  பொதுவாக இது ரப்பர் அல்லது போம் மூலம் தயாரிக்கப்படுவதாகும். இதனை காதுகளின் கால்வாயில் அணிய வேண்டும். இதனால் 15முதல் 30 டெசிபில் சத்தம் குறைவதாக நம்பப்படுகிறது.

  காது மஃப் (Earmuff)

  காது மஃப் (Earmuff)

  PC

  இவை ஹெட் போன் போல் இருக்கும். உங்கள் காதுகளை முழுவதும் அடைக்கும்படியான வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இவையும் 15 முதல் 30 டெசிபில் ஒலியைக் குறைக்கக்கூடியதாக இருக்கும்.

  காதுகளின் அழுக்குகலை சரியாக தூய்மைப் படுத்தவும்.

  காட்டன் பட்ஸ் மூலம் காதுகளில் உள்ள அழுக்கை சுத்தப் படுத்த வேண்டாம். அவை அழுக்கை வெளியேற்றாமல் இன்னும் உள்ளே செலுத்தும் வாய்ப்புகள் உண்டு. ஆகவே பேபி எண்ணெய் பயன்படுத்தி அழுக்கை அகற்றவும்.

  புகை பிடிப்பது

  புகை பிடிப்பது

  ஆம், சரியாகத் தான் படித்தீர்கள், புகை பழக்கம் காது கேளாமையை உண்டாக்கலாம். புகையிலை உங்கள் கேட்கும் திறனை குறைக்கும் வாய்ப்புகள் உண்டு.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Top 5 Super Foods To Prevent Hearing Loss

  The common types of hearing loss and remedies and food in adults are.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more