For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட ஆயுள் பெற உதவும் 20 வகை அற்புத உணவு பொருட்கள்!

By Maha Lakshmi
|

மனித வாழ்வில் ஆரோக்கியமான நோயற்ற வாழ்விற்கு உதவக்கூடியது இயற்கை உணவு வகைகளாகும். அவை உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கும் சிறந்த உணவு பழக்கமாகும். ஒரு குறிப்பிட்ட காய் அல்லது உணவு சாப்பிடுவதால் உடலை பாதுகாத்திட முடியாது. எல்லா அற்புத உணவுகளின் சிறு துண்டுகளை கலவையாக எடுத்துக் கொள்ளும் போது, ஆரோக்கிய வாழ்விற்கு வித்திட முடியும்.

Top 20 Superfoods and Spices for a Super Long Life

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உட்கொள்ளும் போது, அது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தி நீண்ட வாழ்நாளைத் தரவல்லது. அப்படிப்பட்ட 20 அற்புத உணவு பொருட்களைப் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

அற்புத உணவு பொருட்கள் என்று கூறிவிட்டு, இலவங்கத்தை சொல்கீறார்களே என்று பார்க்காதீர்கள். உண்மையிலேயே இலங்கப்பட்டையில் நாம் எண்ணி பார்க்காத அளவிற்கு சத்துக்கள் மறைந்திருக்கின்றன. இதில் அதிகப்படியான நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம் ஆகியவை உள்ளன. அவை பல நூற்றாண்டுகளாக சிறந்த மருந்து பொருளாகவும், மசாலா பொருளாகவும் உபயோகிக்கப்பட்டு வருகிறது. இதனை உணவில் சேர்த்து கொள்வதால் வாதத்தை தடுக்கும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும், புற்றுநோயில் இருந்து காக்கும்.

காபி

காபி

காபியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால் இது நம் உடலை பல்வேறு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்து புத்துணர்ச்சியுடன் இருக்க செய்யும். குறிப்பாக, இதய நோய்கள், பக்கவாதம், நீரிழிவு நோய் மற்றும் அல்சைமர் ஏற்படாமல் தடுக்கக் கூடிய ஆற்றல் கொண்டவை. 2012 ஆம் ஆண்டு நியூ இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியின் முடிவில், மற்றவர்களை காட்டிலும் தினசரி காபி குடித்தவர்களின் இறப்பு சதவிகிதம் குறைவாக இருப்பது தெரிய வந்ததுள்ளது.

ஓட்ஸ்

ஓட்ஸ்

தினசரி ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது என பலர் கூறி கேட்டிருப்பீர்கள். அது உண்மை தான். ஏனெனில், ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்களுக்கு தேவைப்படும் சத்துக்களில் இது மிகவும் முக்கியமானது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் கொழுப்பு ஆகியவற்றை சீர்செய்ய கூடியது. அதன் மூலம், இதய நோய், நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுத்திட முடியும். ஓட்ஸ் சாப்பிடுவதால் வெகுநேரம் வயிற்றில் பசியை தூண்டாது. இதனால் தான் உடல் எடை குறைப்பில் ஓட்ஸ் இடம் பெற்றிருக்கிறது. எனவே, காலை வேளையில் ஓட்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.

தைம் இலைகள்

தைம் இலைகள்

தைம் இலைகளில் அதிகப்படியாக பாக்டீரியாக்களை எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. மேலும், முகப்பருக்களை போக்கும் மருந்து பொருட்களும் தைம் இலைகளில் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தக்காளி

தக்காளி

தக்காளி எவ்வளவு அதிகமாக சாப்பிட்டாலும் அது உடலுக்கு நன்மையை மட்டுமே தரக்கூடியவை. சில உணவு பொருட்களை அதிக நேரம் சமைக்கும் போது அவற்றில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும். ஆனால், தக்காளி அப்படியல்ல. நாம் எவ்வளவு சமைக்கிறோமோ, அதற்கேற்ற சத்துக்களை வாரி வழங்குமாம். தக்காளி சாஸ், கெட்சப் போன்றவை அனைத்திலும் அதிகமான அளவில் லைகோபைன் உள்ளது. அவை தனித்துவமான, சக்தி வாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட் கொண்டுள்ளதால் இதய நோய் பாதிப்பை குறைப்பதோடு, புற்றுநோய் வராமலும் தடுத்திடும். அந்த வகையில், இத்தாலி உணவுகள் வரவேற்கத்தக்கவை.

காட்டு சால்மன்

காட்டு சால்மன்

இந்த வகை சால்மன் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாகவே இருப்பதால், இளமை முதிர்ச்சி மற்றும் இதய நோய்களை தடுத்திடும். மேலும், நம் உடலில் உள்ள டெலோமியர்ஸ் எனும் செல்களால், குறுகிய காலத்தில் நமது உடல்கள் வயதான அறிகுறிகளை காண்பிக்க ஆரம்பிக்கின்றன, மேலும் இது முன்கூட்டியே இறப்பிற்கு வழிவகுக்கலாம். எனவே, இந்த செல்களின் இயக்கத்தை தடுக்கும் ஆற்றல் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தில் அதிகமாகவே உள்ளது.

கீரைகள்

கீரைகள்

கீரைகள் குறைந்த கலோரிகளை உடைய அற்புத உணவுகளில் ஒன்று. இதில் உடலுக்கு தேவையான எண்ணிலடங்கா வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. ஒரு கப் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் எலும்பு மற்றும் பற்களுக்கு வலு சேர்க்கும். மேலும், கீரையில் உள்ள மக்னீசியம், உடலின் தசை அமைப்புகளை சீராக வைக்க உதவும்.

கேல்

கேல்

பச்சை இலை காய்கறிகளில் அதிக சத்துக்களை கொண்டவற்றில் ஒன்று கேல். இதிலுள்ள அதிகப்படியான வைட்டமின் கே, இரத்த உறைதலை தடுப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. மேலும், லுடெய்ன் எனும் சத்து பார்வை கோளாறுகளை நீக்கிடும். ஒரு கப் சமைத்த கேல், 3 கப் பச்சை கீரை சாப்பிடுவதற்கு சமம். கீரை மற்றும் கேல் கலந்த சாலட்டை சாப்பிடும் போது நீண்ட நாள் வாழ்வது நிச்சயம்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

சிறந்த நோய் எதிர்ப்பு சத்துக்களைக் கொண்டது என்றால் அது ப்ளூபெர்ரி ஆகும். வாரத்திறகு 3 அல்லது அதற்கும் மேல் சாப்பிடும் போது மாரடைப்பால் பெண்கள் உயிரிழப்பது 33 சதவிகிதம் வரை குறையும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உணவில் பெர்ரி சேர்த்து கொள்வதால் ஞாபக மறதி பிரச்சனையை சரி செய்ய முடியும். அதுவும், உறைய வைத்த பெர்ரிக்களில் தான் அதிகமான ஆன்டி-ஆக்சிடன்ட் இருப்பதாக தெரிகிறது. எனவே, நீண்ட நாள் வாழ்விற்கு பெர்ரியை சாப்பிடுவது சிறந்தது.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ என்றாலே பலர் ஓடிவிடுவர். ஏனென்றால், அது கொண்டுள்ள அதிகப்படியான கொழுப்பு சத்து, உடல் பருமனை கூட்டு வடும் என்ற பயம் தான். ஆனால், அவகேடோவில் இருப்பது நல்ல கொழுப்பு சத்து. இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள், உடலின் ஹார்மோன் இயக்கத்திற்கு மிகவும் உதவக்கூடியது.

யோகர்ட் (தயிர்)

யோகர்ட் (தயிர்)

தயிரில் உள்ள சத்துக்கள் குடல் இயக்கத்தை சமநிலைப்படுத்தி, நோய்எதிர்ப்பு மண்டலத்தையும், இதயத்தையும் பலப்படுத்துகிறது. நாளொன்றிற்கு 2 கிராம் தயிர் உட்கொள்பவர்களுக்கு, அதிலுள்ள கலோரிகளால் 31 சதவிகிதம் வரை ரத்த கொதிப்பை குறைக்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

துளசி மற்றும் புதினா

துளசி மற்றும் புதினா

பழங்கால சீன வைத்தியத்தில் துளசி மற்றும் புதினா முக்கிய பங்காற்றியது. இதன்மூலம், வீக்கம் மற்றும் சீரண பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இரண்டிலும் உள்ள லுயுடோலின், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. எனவே, தயங்காமல் துளசியை உணவில் சேர்க்கவும், புதினா டீ குடிக்கவும் பழகி கொள்ளலாம்.

பூண்டு

பூண்டு

அனைத்து மருத்து குணங்களிலும் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. பூண்டில் உள்ள சல்பர், நல்ல நறுமணத்தை மட்டுமின்றி, ஆன்டிமைக்ரோபையல், ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்களையும் வழங்குகிறது. பூண்டை நசுக்கும் போது வெளிவரும் அசிலின், பக்கவாதம் மற்றும் மாரப்பை தடுக்க உதவிடும். ஒரு ஆராய்ச்சியின் முடிவில், வெங்காயம், பூண்டு உட்கொள்ளும் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கீழ்வாதம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆரோக்கியமான உணவு பழக்கத்தில் 2 முக்கிய உணவுப் பொருட்கள் ஆலிவ் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகும். இரண்டும் சுவையாக இருப்பதோடு, இரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொழுப்பு சத்தை சீராக்கவும் உதவுகின்றன. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆலிவ் ஆயிலை தினமும் பயன்படுத்தும் போது, 41 சதவிகிதம் மாரடைப்பு ஏறபடுவது தடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மாதுளை

மாதுளை

மிகவும் அதிகமான ஆன்டிஆக்சிடன்ட்கள் உள்ள மாதுளம்பழம், இதயத்தின் இயக்கம் மற்றும் சிறுநீரக இயக்கத்தை சீராக்கி, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை தருகிறது. தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஒட்டுமொத்த ரத்த அழுத்தத்தையும் குறைத்திடுகிறது.

வால்நட்

வால்நட்

மற்ற பருப்புகளுடன் பார்க்கும் போது, வால்நட்டில் 2 மடங்கு ஆன்டிஆக்சிடன்ட் அதிகமாக உள்ளது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வால்நட் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தையும், வைட்டமின் ஈ ஆகியவற்றை கொண்டுள்ளதால் இதயத்திற்கு மிகவும் நல்லது.

அஸ்பராகஸ்

அஸ்பராகஸ்

அஸ்பராகஸில் உள்ள அதிகமான பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை சைவ பிரியர்களுக்கு மிகவும் முக்கியமானது. அஸ்பராகஸ் உடலின் செல்களை சீரமைத்து, உடலின் திசுக்களை மேம்படுத்தக்கூடியவை. வைட்டமின் பி12 சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு 39 சதவிகிதம் செவி குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகமாம். எனவே, அஸ்பராகஸ் சாப்பிடுவதன் மூலம் அத்தகைய பிரச்சனை ஏறபடாமல் தவிர்த்திடலாம்.

சர்க்கரைவள்ளிக் கிழக்கு

சர்க்கரைவள்ளிக் கிழக்கு

சுவையான ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றான சர்க்கரைவள்ளிக் கிழக்கில், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை அதிகமாகவே உள்ளன. இந்த சுவையான கிழங்கை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தை குறைத்து கொள்ள முடியும். இந்த கிழங்கை தோலுடன் சாப்பிடும் போது, ஒரு முழு கப் ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமமான நார்ச்சத்து கிடைக்கும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட், உடலில் ஆக்சிஜனேற்றத்தை ஏற்படுத்தி, உடலை மேம்படுத்தக்கூடியது. மேலும், ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு 3 முறை க்ரீன் டீ குடிக்கும் பெண்கள், குறிப்பிட்ட வகை புற்றுநோய்கள் ஏற்படாமல் 17 சதவிகிதம் வரை தடுத்திடலாம் என கூறப்படுகிறது. எனவே, தினமும் குறிப்பிட்ட அளவு க்ரீன் டீ குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாமே.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

சாக்லேட் சாப்பிட்டு ஆயுளை நீடிக்க முடியும் என்றால் கசக்குமா என்ன? இந்த வகை சாக்லேட் சாப்பிடுவதன் மூலம், இரத்த அழுத்தத்தையும், கொழுப்பின் அளவையும் குறைக்க முடியுமாம். தினமும் டார்க் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 1 அவுன்ஸ் சாக்லேட் சாப்பிட்டால் மட்டுமே இத்தகைய பலன்களை பெற முடியும் என்பதையும் மறந்திடவேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 20 Superfoods and Spices for a Super Long Life

Ever wonder what foods you can eat more of to help boost both the life in your years as well as the years in your life? Keep reading for the top 20 superfoods and super spices that do exactly that!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more