இந்த உணவுகள் வெயில் காலத்தில் வேகமா தொப்பையைக் குறைக்க உதவும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உடலிலேயே வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் குறைப்பது என்பது தான் மிகவும் கடினமான ஒன்று. வயிற்றில் தேங்கும் கொழுப்புக்கள் ஒருவருக்கு அசிங்கமான தோற்றத்தைக் கொடுப்பதோடு, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். பலரும் வயிற்றில் தேங்கிய கொழுப்புக்களைக் கரைப்பதற்கு பல டயட்டுகளை மேற்கொள்வார்கள். ஆனால் இந்த டயட்டினால் மட்டும் தொப்பையைக் குறைக்க முடியாது.

தொப்பையைக் குறைக்க வேண்டுமானால் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வதோடு, அன்றாடம் தவறாமல் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில உணவுகள் வயிற்றில் தேங்கிய கொழுப்புக்களைக் குறைக்க உதவியாக இருக்கும். மேலும் ஒருவரது உடல் எடையைக் குறைப்பதற்கு கோடைக்காலம் சிறந்த காலமாகும். இந்த காலத்தில் கொழுப்பைக் குறைக்க உதவும் உணவுகளை உட்கொண்டால், விரைவில் தொப்பையைக் குறைக்கலாம்.

சரி, இப்போது ஒருவரது வயிற்றில் தேங்கிய கொழுப்புக்களைக் குறைக்க உதவும் உணவுகள் எவையென்று காண்போம். அதைப் படித்து அவற்றை வெயில் காலத்தில் சாப்பிட்டு, ஸ்லிம் ஆகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதாம்

பாதாம்

பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் வளமான அளவில் நிரம்பியுள்ளது. இந்த கொழுப்புக்கள் ஒருவரை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க உதவும். இத்தகைய பாதாமை ஒருவர் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், பசியுணர்வு கட்டுப்படுத்தப்பட்டு, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து, தொப்பையின் அளவும் குறையும். மேலும் பாதாம் இதய நோயை எதிர்த்துப் போராட உதவும். எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாமை சாப்பிடுங்கள். ஆனால் உப்பு சேர்த்து வறுக்கப்பட்ட பாதாமை சாப்பிடாதீர்கள்.

தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணிப் பழத்தில் 91 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. மேலும் இது கோடையில் அதிகம் விற்கப்படும் ஓர் பழமும் கூட. இந்த தர்பூசணியை உணவு உண்பதற்கு முன் உட்கொண்டு வந்தால், அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தவிர்க்கலாம். அதோடு தர்பூசணியை சாதாரணமாக சாப்பிட்டாலே, அது வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் இப்பழத்தில் வைட்டமின்களான பி1, பி6 மற்றும் சி-யுடன், பொட்டாசியம், மக்னீசியம் போன்றவையும் அடங்கியுள்ளது.

ஆகவே கோடையில் தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், தினமும் 2 டம்ளர் தர்பூசணி ஜூஸைக் குடியுங்கள். இப்படி 8 வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், தொப்பையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸ் வகைகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், அது உடல் கொழுப்பைக் குறைக்க உதவுவதோடு, தசைகளின் வளர்ச்சி மற்றும் செரிமான செயல்பாட்டை மேம்படுத்தும். பீன்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, அளவுக்கு அதிகமாக சாப்பிட முடியாமலும் தடுக்கும்.

இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றில் உள்ள கொழுப்புக்களை குறி வைத்து உடைத்தெறிவதால், இதை தொப்பை உள்ளோர் சாப்பிட்டால், விரைவில் தொப்பையைக் குறைக்கலாம்.

செலரி

செலரி

தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? அப்படியானால் பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான செலரியை சாப்பிடுங்கள். செலரியில் கலோரிகள் மிகவும் குறைவு, நார்ச்சத்து அதிகம் மற்றும் கால்சியம், வைட்டமின் சி போன்றவையும் அடங்கியுள்ளன. அதற்கு செலரி கீரையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, மதிய உணவிற்கு முன் அல்லது இரவு உணவிற்கு முன் 1/2 டம்ளர் குடிக்க வேண்டும். முக்கியமாக செலரி கீரையில் உள்ள அபிஜெனின் என்னும் உட்பொருள் பெண்களைத் தாக்கும் கருப்பைப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயும் கோடையில் விற்கப்படும் காய்கறிகளுள் ஒன்றாகும். 100 கிராம் வெள்ளரிக்காயில் சுமார் 96 சதவீதம் நீர்ச்சத்தும், 45 சதவீதம் கலோரிகளும் உள்ளன. இதில் கனிமச்சத்துக்கள், டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவையும் அடங்கியுள்ளன. இந்த வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், அது தொப்பையைக் குறைப்பதோடு, சரும பொலிவையும் அதிகரிக்கும்.

தக்காளி

தக்காளி

ஒரு பெரிய தக்காளியில் 33 கலோரிகள் உள்ளன. இதில் உள்ள 9 ஆக்ஸோ ஓடிஏ, இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களைக் குறைக்க உதவி, தொப்பையைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் இந்த உட்பொருள், உடல் பருமனால் ஏற்படும் நாள்பட்ட நோய்களை எதிர்க்கும். அதோடு தக்காளியில் உள்ள லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும். ஆகவே அன்றாட சமையலில் தக்காளியை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ பழத்தில் லிசித்தின் என்னும் முக்கியமான அமினோ அமிலம் உள்ளது. இது உடல் எடையைப் பராமரிக்க உதவி புரியும் அமினோ அமிலமாகும். மேலும் இதில் நல்ல கொழுப்புக்களான மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. இவை உடலில் உள்ள கொழுப்புக்களை எளிதில் கரைக்க உதவும். அதோடு அவகேடோ பழத்தில் நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். எனவே தினமும் அவகேடோ பழத்தை மில்க் ஷேக் வடிவில் உட்கொள்ளுங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள டயட்டரி நார்ச்சத்துக்கள், ப்ளேவோனாய்டுகள், பைட்டோ ஸ்டெரால் மற்றும் பீட்டா-கரோட்டீன், பசி உணர்வைக் குறைத்து, நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கச் செய்து, அதிகமாக உணவை உட்கொள்வதைத் தவிர்க்கும். பிரேசிலியன் ஆய்வு ஒன்றில், ஒரு நாளைக்கு 3-க்கும் அதிகமான ஆப்பிளை சாப்பிடுவோர், ஆப்பிள் சாப்பிடாதவர்களை விட அதிகளவு உடல் எடையைக் குறைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு ஆப்பிளில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து தான் காரணம். அதோடு ஆப்பிள் குடல் புற்றுநோய் வரும் அபாயத்தையும் தடுக்கும்.

டார்ட் செர்ரி

டார்ட் செர்ரி

டார்ட் செர்ரிப் பழத்தை ஒருவர் சாப்பிட்டு வந்தால், அது இதய நோய்க்கான அறிகுறி மற்றும் வளர்சிதை மாற்ற நோய்குறிகளைக் குறைக்க உதவும் என் மெக்சிகன் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. வளர்சிதை மாற்ற நோய்க்குறி தொப்பையின் அபாயத்தை அதிகரிப்பதோடு, இயத நோய் மற்றும் சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும். இந்த செர்ரி இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மற்றும் உடலில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைக்கும்.

அன்னாசி

அன்னாசி

அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமிலைன் என்னும் நொதிப் பொருள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்று செயல்பட்டு, தொப்பைக்கு காரணமான அழற்சியைக் குறைத்து, தட்டையான வயிற்றைப் பெறச் செய்யும். அன்னாசியில் வைட்டமின் பி6 மற்றும் சி-யுடன், மாங்கனீசு, காப்பர், தையமின் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளது. இந்த பழத்தை உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சாப்பிட்டு வந்தால், விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 10 Superfoods to Reduce Belly Fat During Summer

Here are top 10 superfoods to reduce belly fat during summer. Read on to know more...