For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்மையை அதிகரிக்க நீங்கள் சாப்பிடும் அத்திப்பழத்தால் உடலின் எந்தெந்த உறுப்புகள் சிதைகிறது தெரியுமா?

அத்திப்பழம் என்பது பழங்காலம் முதலே ஆரோக்கியத்திற்காக சாப்பிடப்பட்டு வரும் ஒரு அற்புத பழமாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.மற்றொரு புறம் அத்திப்பழம் சாப்பிடுவது சில பக்கவிளைவுகளையும் ஏற்பட

|

அத்திப்பழம் என்பது பழங்காலம் முதலே ஆரோக்கியத்திற்காக சாப்பிடப்பட்டு வரும் ஒரு அற்புத பழமாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. குறிப்பாக இது ஆண்களின் ஆரோக்கியத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடும். ஆண்மைக்குறைவு பிரச்சினை உள்ளவர்களும், விந்தணு உற்பத்தியில் பிரச்சினை உள்ளவர்களும் அத்திப்பழம் சாப்பிடுவது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும்.

how fig affects our liver and intenstines

மற்றொரு புறம் அத்திப்பழம் சாப்பிடுவது சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக இது பெண்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். சரும பிரச்சினை மட்டுமின்றி இது சில உடலுறுப்புகளின் மீதும் பிரச்சினையை உண்டாக்கும். இந்த பதிவில் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிற்று பிரச்சினைகள்

வயிற்று பிரச்சினைகள்

அத்திப்பழத்தில் உடலுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருளான நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது வயிறு தொடர்பான பல பிரச்சினைகளை குணப்படுத்தக்கூடும். ஆனால் அதிக அளவு அத்திப்பழம் சாப்பிடுவது உங்களுக்கு வயிற்று உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். அதிகளவு நார்ச்சத்துக்கள் சாப்பிடும்போது அது நாம் சாப்பிடும் மற்ற ஊட்டச்சத்துக்களின் மீது பாதிப்பை ஏற்படுத்தும்.

வாயுப்பிரச்சினை மற்றும் வீக்கம்

வாயுப்பிரச்சினை மற்றும் வீக்கம்

அதிகளவு அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படுவது வயிற்றுவலி மட்டுமல்ல. இதனால் வீக்கம், வாயுக்கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க ஒரே வழி அத்திப்பழத்தின் அளவை குறைப்பதுதான். இந்த பிரச்சினையை சரிபண்ண வெதுவெதுப்பான நீரை குடிக்கவும்.

சூரிய ஒளி பிரச்சினை

சூரிய ஒளி பிரச்சினை

நாள்பட்ட புற்றுநோய்களை குணப்படுத்தவும், தோல் புற்றுநோய்களை குணப்படுத்திலும் அத்திப்பழங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கிறது. ஆனால் இது உங்கள் சருமத்திற்கு சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளை அதிகரிக்கும். அதிகளவு சூரிய ஒளிக்கதிர்கள் முன்கூட்டியே வயதுக்கு வருதல், மேலோனாமா மற்றும் சரும புற்றுநோய் போன்ற குறைபாடுகளை ஏற்படுத்தும். மேலும் இது சரும தடிப்புகளையும் ஏற்படுத்தும். சருமம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க அத்திப்பழம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.

MOST READ:மகாபாரதத்தின்படி இந்த குணம் உள்ளவர்கள் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியையும்,அமைதியையும் அழிப்பார்கள்

கல்லீரல் மற்றும் குடல் பாதிப்புகள்

கல்லீரல் மற்றும் குடல் பாதிப்புகள்

அத்திப்பழம் கல்லீரலில் பிரச்சினைகளை உண்டாக்கலாம். அவற்றின் விதைகள் குடலில் அழற்சியை உண்டாக்கலாம். இதனை சாப்பிடும்போது நம்மால் அதனை உணர இயலாது, ஆனால் இதன் விதைகள் செரிமானம் அடைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அத்திப்பழத்தால் ஏற்படும் முக்கியமான பக்கவிளைவுகளில் இதுவும் ஒன்று.

கால்சியம் பிரச்சினை

கால்சியம் பிரச்சினை

அத்திப்பழம் அதிகம் சாப்பிடுவது நமது எலும்புகளுக்கு ஏற்றதல்ல அதற்கு காரணம் அதிலுள்ள ஆக்சலேட்டுகள். இந்த ஆக்சலேட்டுகள் நமது உடல் கால்சியம் உறிஞ்சுவதை தடுத்து நமது உடலில் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடும். இதனால் பலவீனமான எலும்புகள், எலும்பு முறிவு, ஆஸ்டோபோரோசிஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இரத்தப்போக்கு

இரத்தப்போக்கு

அத்திப்பழம் அதிகமாக சாப்பிடாமல் இருக்க மற்றொரு காரணம் அதன் சூடான தன்மை ஆகும். அதிகளவு அத்திப்பழம் சாப்பிடுவது மலக்குடலில் இரத்தப்போக்கை ஏற்ப்படுத்தும், பெண்களுக்கு பிறப்புறுப்பில் இரத்தப்போக்கை ஏற்படுத்தும். சில சமயம் இதனால் ஹீமோலிடிக் அனீமியா கூட ஏற்படலாம். எனவே அத்திப்பழம் சாப்பிடும்போது அதன் அளவில் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.

சர்க்கரை அளவை குறைக்கிறது

சர்க்கரை அளவை குறைக்கிறது

அத்திப்பழம் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒருவகையில் நல்லதுதான். ஆனால் மற்றவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது அது பல பிரச்சினைகளை உண்டாக்கும். உங்களுக்கு குறைவான சர்க்கரை பிரச்சினை இருந்தால் அத்திப்பழம் சாப்பிடுவதை அறவே தவிர்க்கவும்.

MOST READ:மாதவிடாய் நாட்களில் சில பெண்கள் அதிகம் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புவது ஏன்? - காரணங்கள்!

அலர்ஜி

அலர்ஜி

அத்திப்பழம் நமக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அது அனைவருக்கும் அல்ல. ஏனெனில் இது பலருக்கு அலர்ஜிகளை ஏற்படுத்தும். குறிப்பாக கான்ஜுக்டிவிடிஸ், ரினிடிஸ் மற்றும் அனாஃபிளாக்டிக் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

சிறுநீரகம் மற்றும் பித்தப்பை பிரச்சினைகள்

சிறுநீரகம் மற்றும் பித்தப்பை பிரச்சினைகள்

சிறுநீரகம் மற்றும் பித்தப்பை பிரச்சினைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக அத்திப்பழத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள ஆக்சலேட்டுகள் இந்த பிரச்சினைகளின் தீவிரத்தை அதிகமாக்கும். மேலும் இது நம் உடலில் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நமது நோயெதிர்ப்பு மண்டலம் பலமாக இருக்க வெள்ளை அணுக்கள் மிகவும் முக்கியமானவை.

கர்ப்பகால பிரச்சினைகள்

கர்ப்பகால பிரச்சினைகள்

கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பாலூட்டும் காலத்தில் சிறிய அளவில் உலர்ந்த அத்திப்பழங்கள் சாப்பிடுவது பாதுகாப்பானது மற்றும் நன்மையை விளைவிக்கக்கூடியது. ஆனால் அதன் அளவு அதிகரிக்கும்போது அதில் உள்ள ஆக்சலேட்டுகள் தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

MOST READ:இதுல எத்தன குதிரை உங்க கண்ணுக்கு தெரியுதுன்னு சொல்லுங்க... நீங்க எப்படிவர்னு சொல்றோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how fig affects our liver and intenstines

Figs are amongst the oldest fruits consumed by humans. It has numerous health benefits. But it may affect some organs badly.
Desktop Bottom Promotion