For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுல உங்க ஷேப் என்னனு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்..!

|

இங்க இருக்குற ஒவ்வொருத்தவங்க உடம்பும் வெவ்வேறு மாறிதான் இருக்கும். ஒருவர் சாப்பிட கூடிய உணவுகளை வைத்தும், அவரின் அன்றாட பழக்க வழக்கங்களை வைத்தும் தான் இது நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாவே உடலின் ஷேப்பை 4 அல்லது 5 வகையா பிரிக்குறாங்க.

நீங்க என்ன ஷேப்புனு சொல்லுங்க...நீங்க என்ன செய்ய வேண்டும், வேண்டாம்னு நாங்க சொல்றோம்..!

இதில் நாம்ம எந்த வகைனு தெரிஞ்சா, ரொம்ப சுலபமா எப்படிப்பட்ட உணவை சாப்பிடணும், சாப்பிட கூடாது, எதை சாப்பிட்டால் உடல் எடை கூடும் போன்ற பலவற்றை நம்மால் தெரிஞ்சிக்க முடியும். நீங்க எந்த ஷேப்புனு சொல்லுங்க, நாங்க உங்களுக்கானத சொல்றோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் வாகு எப்படி..?

உடல் வாகு எப்படி..?

Body shape என்பதை உடல் வாகு என்போம். உங்களின் வயிற்றிற்கு மேல் பகுதியையும் கீழ் பகுதியையும் இரண்டாக பிரித்தே இது கணிக்கப்படுகிறது. பொதுவாக உடலின் ஷேப்பை 5 வகையாக பிரிக்கின்றனர். அவை,

- பேரிக்காய் ஷேப்

- ஐஸ் கிரீம் ஷேப்

- ஆப்பிள் ஷேப்

- மணல் கடிகாரம் ஷேப்

- தட்டையான ஷேப்

பேரிக்காய் எப்படி..?

பேரிக்காய் எப்படி..?

இந்த வகை உடம்பு உங்களுக்கு உள்ளது என எப்படி தெரிஞ்சிக்கறது..? இதோ அதற்கான வழிகள்... உங்களின் தோல்பட்டை குறுகியும், இடுப்புக்கு கீழ் பகுதி பேரிக்காயை போல பெரிதாகவும் இருந்தால் நீங்கள் இந்த வகையை சேர்ந்தவர்கள்.

தவிர்க்க வேண்டியவை..?

தவிர்க்க வேண்டியவை..?

நீங்கள் காய்கறி மற்றும் பழங்களை கொண்டு சாலட் தயாரித்து சாப்பிடலாம். அத்துடன் சற்று இறைச்சியையும் சேர்த்து கொள்ளலாம். நீங்கள் ஒரு சில உணவு பொருட்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக சாஸ், கெட்ச்சப், பிரட், ஓட்ஸ், வேர்க்கடலை, சர்க்கரை சேர்த்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

ஐஸ்கிரீம் ஷேப்

ஐஸ்கிரீம் ஷேப்

இவர்களுக்கு மார்பு, கழுத்து, தோல்பட்டை என இடுப்புக்கு மேல்பகுதி பெரிதாகவும், இதற்கு கீழ்பகுதி சிறியதாகவும் இருக்கும். முக்கியமாக இந்த வகை உடல் வாகு கொண்டவர்களுக்கு தசைகள் மேற்பகுதியில் அதிகமாகவும், கீழ் பகுதியில் கம்மியாகவும் இருக்கும்.

MOST READ: தூங்கும்போது வெங்காயத்த இப்படி பக்கத்துல வச்சிட்டு தூங்குங்க.. அப்பறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..!

தவிர்க்க வேண்டியவை..?

தவிர்க்க வேண்டியவை..?

இந்த வகை உடலை கொண்டவர்கள் முழு தானியங்கள், நார்சத்து கொண்ட உணவுகள், பார்லி, ப்ரவுன் அரிசி, பீன்ஸ், சர்க்கரை வள்ளிகிழங்கு ஆகியவற்றை சாப்பிடலாம். ஆனால், தேங்காய் எண்ணெய், சீஸ், வெண்ணெய் ஆகியவற்றை மிக குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.

ஆப்பிள் ஷேப்

ஆப்பிள் ஷேப்

இந்த் வகை உடல் கொண்டோருக்கு அடர்ந்த தோள்பட்டை, சிறிய இடுப்பு பகுதி, சிறிய கால்கள் மற்றும் கை பகுதிகள் இருக்கும். இவர்களுக்கு கொழுப்பு உடலில் அதிகம் சேர்ந்திருக்கும். அத்துடன் சர்க்கரை வியாதி, இதய நோய்கள், ஹார்மோன் கோளாறு போன்ற பல பிரச்சினைகளும் இவர்களுக்கு ஏற்படுமாம்.

என்னென்ன தவிர்க்கணும்..?

என்னென்ன தவிர்க்கணும்..?

இவர்கள் பாஸ்தா, ப்ரெட், ஜங்க் உணவுகள், இனிப்பு வகை உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதற்கு மாறாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளான அவகேடோ, சால்மன் மீன், வால்நட்ஸ், ஷியா விதைகள் போன்றவற்றை அதிகம் எடுத்து கொள்ளலாம்.

மணல் கடிகாரம் ஷேப்

மணல் கடிகாரம் ஷேப்

பொதுவாகவே இந்த வகை உடம்பு கொண்டோருக்கு இடுப்பு கச்சிதாமான அளவுடன் இருக்கும். இவர்கள் பெரும்பாலும் வளைவு நெளிவுடனான உடல் வாகு இருக்குமாம். அத்துடன் சமமான அளவில் கொழுப்புகளும் உடலில் இருக்கும்.

MOST READ: தினமும் 2 வாழைப்பழங்கள் சாப்பிடுவதால், உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நடக்கும்னு தெரியுமா...?

தவிர்க்க வேண்டியவை...?

தவிர்க்க வேண்டியவை...?

இந்த உடம்புகாரர்கள் கேரட், பாதாம், அவகேடோ, வெள்ளரிக்காய், செலெரி, போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம். ஆனால், அதிக சர்க்கரை சேர்ந்துள்ள உணவுகள், ஐஸ்கிரிம், மிட்டாய்கள், ஜங்க் உணவுகளை தவிர்க்க வேண்டும். மீறி சாப்பிட்டால் பலவித உடல்நல குறைபாடுகள் ஏற்படும்.

தட்டையான வடிவம்

தட்டையான வடிவம்

சிலர் பிறந்தது முதல்லே தட்டையாக தான் இருப்பார்கள். எந்த வகை வளைவு நெளிவும் இவர்கள் உடலில் இருக்காது. இவர்கள் எடை கூடுவதே மிக மிக கடினமான ஒன்றாகும். நீங்கள் என்னதான் சாப்பிட்டாலும் இப்படித்தான் இருக்கின்ரீர்களா..? கவலையை விடுங்கள். உங்களுக்கு ஏற்ற உணவுகள் இவைதான்.

உணவு வகை...

உணவு வகை...

இந்த வகை உடல் வாகு கொண்டோர் கார்ப்ஸ், கொழுப்புசத்து, புரதசத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது சிறந்தது. மேலும் உடல் எடை போட வேண்டும் என்பதற்காக கண்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால் இறுதியில் ஆபத்துக்களை உங்களுக்கு தந்து விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods Should Be Avoid Depends On Your Body Shape

Here are some foods should be avoid depends on your body shape.
Desktop Bottom Promotion