பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஈஸ்ட்ரோஜென் பெண்களுக்கு ஏற்படுகிற எண்ண மாற்றத்திற்கு காரணமான ஒன்று. எண்ண ஓட்டம் மட்டுமின்றி, சுறுசுறுப்பாக செயல்படுவது, உடல் எடை, மாதவிடாய்,தலைவலி, உடலுறவில் நாட்டம் என ஹார்மோன் சமந்தப்பட்ட எல்லா விஷயங்களுக்கும் இதுவே காரணம்.

பொதுவாக ஈஸ்ட்ரோஜன் ஆண் பெண் இருவரிடத்திலும் இருக்கும். ஆண்களைக்காட்டிலும் பெண்களிடத்தில் அதிகமாக காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் பெண்மைக்கான ஹார்மோன் இது. பெண்களின் கர்பப்பையில் இந்த ஹார்மோன் உற்பத்தியாகும்.

Estrogen Rich Foods

இந்த ஹார்மோன் ஏராளமான உடலியல் மாற்றங்களை பெண்களுக்கு ஏற்படுத்தும், எலும்பு வளர்ச்சிக்கு, இதயத்தின் பாதுகாப்பிற்கு, தாம்பத்திய வாழ்க்கைக்கு என பல வகைகளில் இந்த ஹார்மோனின் தேவை இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆழி விதைகள் :

ஆழி விதைகள் :

ஆழி விதைகளில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் இருக்கிறது. இதில் இருப்பதை ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென் என்று சொல்வார்கள். இதிலிருக்கும் டயட்டரி ஃபைபர் மற்றும் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இவை நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவில் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

எள்ளு :

எள்ளு :

வெள்ளை மற்றும் கருப்பு எள்ளில் ஈஸ்ட்ரோஜன் நிறைய இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் ஈஸ்ட்ரோஜன் அளவை நம் உடலில் பராமரிக்கலாம்.

டோஃபு :

டோஃபு :

இதனை காட்டேஜ் சீஸ் என்கிறார்கள். சோயா பாலில் தயாரிக்கப்படுவது தான் இந்த டோஃபு.டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களில் இது கிடைக்கும். இதனை தனியாகச் சாப்பிடாமல் நீங்கள் சாப்பிடுகிற சூப்,சாலட் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

பிஸ்தா பருப்பு :

பிஸ்தா பருப்பு :

மற்ற நட்ஸ் வகைகளை விட இதில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் இருக்கிறது. பச்சையாகவோ அல்லது வறுக்கப்பட்ட பிஸ்தா பருப்பையோ சாப்பிடலாம்.

வால்நட் :

வால்நட் :

இதில் ஈஸ்ட்ரோஜன், ப்ரோட்டீன்,ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என உடலுக்கு தேவையான அடிப்படை தாதுக்கள் நிறையவே இருக்கின்றன. இவற்றை சிற்றுண்டி நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

கடலை :

கடலை :

நம் வீடுகளில் எளிதாக கிடைக்கக்கூடிய ஓர் பொருள் என்றால் கடலைச் சொல்லலாம். இதில் ஏரளமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது, அவற்றுடன் இதைச் சாப்பிடுவதால் ஈஸ்ட்ரோஜனும் நிறைந்திருக்கிறது. 100 கிராம் அளவுள்ள கடலையிலிருந்து 34.5 மைக்ரோ கிராம் ஈஸ்ட்ரோஜன் நமக்கு கிடைக்கும்.

ட்ரை ப்ரூட்ஸ் :

ட்ரை ப்ரூட்ஸ் :

உலர் திராட்சை மற்றும் பேரீட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவை மேம்படுத்தலாம். அதைத் தவிர இதில் விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸும் இருப்பதால் நீங்கள் தாரளமாக சாப்பிடலாம்.

காலை மற்றும் மதிய உணவுக்கு இடையில் இதனை எடுத்துக் கொள்ளுங்கள்.

முளைகட்டிய தானியங்கள் :

முளைகட்டிய தானியங்கள் :

இது போன்ற முளை கட்டிய பயிறுகளிலிருந்து வைட்டமின் ‘சி' என்ற உயிர் சத்து மிக அதிக அளவில் பெற முடியும்.இதில் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன், வைட்டமின் ஏ, பி1, பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கும்.

பீன்ஸ் :

பீன்ஸ் :

கலோரி குறைவான பீன்ஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதோடு பீன்ஸில் இரும்புச்சத்து அதிகம். பெண்களிடத்தில் ஏற்படுகிற மலட்டுத் தன்மையை போக்குவதில் பீன்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பீச் பழம் :

பீச் பழம் :

இந்தப் பழத்தில் ஏராளமான நியூட்ரிசியன்கள் இருக்கின்றன. மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்க இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம். இதனை பழமாக அப்படியே சாப்பிடுவது நல்லது.

ஸ்ட்ராபெர்ரீ :

ஸ்ட்ராபெர்ரீ :

பழங்களில் ஈஸ்ட்ரோஜன் அதிகமிருக்கும் பண்டம் என்று எடுத்துக் கொண்டால் ஸ்ட்ராபெர்ரீயை குறிப்பிடலாம். இதைத் தாண்டி ஸ்ட்ராபெர்ரீ சாப்பிடுவதால் நம்முடைய உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சருமமும் மேம்படுகிறது.

உடல் பருமனை குறைக்கவும் இது உதவிடும்.

ரெட் வைன் :

ரெட் வைன் :

ரெட்வைன் குடிப்பதால் நம் உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கும் . ஒரு நாளைக்கு முப்பது மிலி க்கு மேல் குடிக்க வேண்டும். அதிலேயே உங்களுக்கு 50 மைக்ரோகிராம் அளவு ஈஸ்ட்ரோஜன் கிடைத்திடும்.

பூண்டு :

பூண்டு :

பூண்டில் அதிகப்படியான இஸோஃபேலேவோன்ஸ் இருக்கிறது. இவை நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை செய்கிறது. கொலஸ்ட்ரால் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

நூறுகிராம் பூண்டு உணவில் சேர்க்கும் போது அதிலிருந்து 600 மைக்ரோகிராம் ஈஸ்ட்ரோஜன் நமக்கு கிடைக்கிறது.

சர்க்கரை :

சர்க்கரை :

சர்க்கரையை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதிகப்படியான சர்க்கரை டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் இருக்கும் அளவை குறைத்திடும். புகைப்பழக்கம் கூடாது. இரவு நிம்மதியான தூக்கம் குறைந்தது ஏழு மணி நேரம் வரையிலான தூக்கம் அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Estrogen Rich Foods

Estrogen Rich Foods
Story first published: Wednesday, January 3, 2018, 16:00 [IST]