தாகம் அளவுக்கு அதிகமா இருக்கா? அப்ப இத அதிகம் சாப்பிடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

கோடை வெயில் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலருக்கும் தாகம் அதிகமாக இருக்கும். என்ன தான் தண்ணீரை குடித்தாலும், தாகம் அடங்காமலேயே இருக்கும். கோடையில் வெயில் அதிகம் இருப்பதால், உடலில் நீர்ச்சத்து அதிகம் குறையும்.

It’s Hot Out There! Try These 9 Thirst-Quenching Foods

எனவே உடலில் நீர்ச்சத்தை சீரான அளவில் பராமரிக்க, நீரை அதிகம் குடிப்பதோடு, ஒருசில உணவுப் பொருட்களையும் அதிகம் சாப்பிட வேண்டும்.

இதனால் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதோடு, தாகம் அதிகம் எடுக்காமலும் இருக்கும். சரி, இப்போது தாகத்தைத் தணிக்க உதவும் அந்த உணவுப் பொருட்கள் எவையென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள்

ஆப்பிள்

வருடம் முழுவதும் கிடைக்கும் ஓர் பழம் தான் ஆப்பிள். இந்த ஆப்பிளை கோடைக்காலத்தில் அதிகம் சாப்பிடுவதன் மூலம், அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் வருடம் முழுவதும் விலை மலிவில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று. இந்த வாழைப்பழத்தை கோடையில் அடிக்கடி சாப்பிடுவதால், உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, தாகம் எடுப்பதும் குறையும்.

இளநீர்

இளநீர்

நீருக்கு அடுத்தப்படியாக தாகத்தைத் தணிக்க உதவும் பானங்களுள் ஒன்று தான் இளநீர். இது உடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடலுக்கு ஆற்றலையும் வழங்கி, உடல் வெப்பமடைவதைத் தடுக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

கோடையில் அதிகம் கிடைக்கும் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து 90% உள்ளது. இதனை வெயில் காலத்தில் ஒருவர் அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை குறைந்து, உடல் குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

திராட்சை

திராட்சை

கோடையில் கருப்பு திராட்சையை சாப்பிடுவதால், வாய் வறட்சி அடைந்து, தாகம் அதிகம் எடுப்பது தடுக்கப்படும். மேலும் திராட்சை மாதவிடாய் காலத்தில் உடல் வெப்பமடைவதைக் குறைத்து, வறட்டு இருமல் வருவதையும் தடுக்கும்.

கிவி

கிவி

கிவி பழம் புளிப்பாக இருந்தாலும், தாகத்தை எளிதில் தணிக்கும் என்பதால், உடல் வறட்சியடையாமல் இருக்க வெயில் காலத்தில் கிவி பழத்தை சாப்பிடுங்கள்.

மாம்பழம்

மாம்பழம்

மாம்பழம் குளிர்ச்சி தன்மை கொண்டதோடு, தாகத்தையும் தணிக்கும். எனவே கோடையில் விலைக் குறைவில் கிடைக்கும் மாம்பழத்தை முடிந்த அளவில் பலவாறு சாப்பிட்டு மகிழுங்கள்.

ப்ளம்ஸ்

ப்ளம்ஸ்

ப்ளம்ஸ் கூட கோடை வெயிலில் ஏற்படும் கடுமையான தாகத்தைப் போக்கும். முக்கியமாக கோடையில் ஒருவர் ப்ளம்ஸை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சி அடைவது தடுக்கப்படும்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

ஆம், பசலைக்கீரையும் அடிக்கடி தாகம் எடுக்காமல் பார்த்துக் கொள்ளும். முக்கியமாக இந்த கீரையை பைல்ஸ் இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

It’s Hot Out There! Try These 9 Thirst-Quenching Foods

Here are nine foods you can integrate into your beat-the-heat summer menus:
Please Wait while comments are loading...
Subscribe Newsletter