பெண்களின் அந்தரங்கப் பகுதியில் நோய்கள் வருவதைத் தடுக்கும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் தங்களின் யோனிப் பகுதியை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். யோனியில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால், அது இனப்பெருக்க மண்டலத்தையே பாதித்து, பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

Foods That Can Keep Vaginal Diseases At Bay!

யோனிப் பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருப்பதால், அங்கு எளிதில் கிருமிகளால் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம். உடலின் மற்ற உறுப்புக்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, பெண்கள் தங்களது யோனிப் பகுதிக்கு கொடுப்பதில்லை. ஆனால் யோனி ஆரோக்கியமாக இல்லாவிட்டால், தொற்றுக்களால் மலட்டுத்தன்மை மட்டுமின்றி, புற்றுநோய் கூட வரும் வாய்ப்புள்ளது.

சரி, இப்போது யோனியில் நோய்கள் வராமல் தடுக்க உதவும் உணவுகள் குறித்து காண்போம். அதைப் படித்து தெரிந்து, அவற்றை அன்றாட உணவில் சிறிது சேர்த்து யோனியின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை டீ

எலுமிச்சை டீ

எலுமிச்சை டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி போன்ற யோனியின் ஆரோக்கியத்திற்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளது.

சால்மன் மீன்

சால்மன் மீன்

சால்மன் மீனில், உடலுறவின் போது யோனியின் சுவர்கள் வறட்சியடையாமல் ஈரப்பசையுடன் இருக்கத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது.

தயிர்

தயிர்

தயிரில் உள்ள புரோபயோடிக்குகள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ பழத்திலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதுவும் யோனியில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கும் மற்றும் வறட்சி அடையாமலும் தடுக்கும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் யோனியின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை மைக்ரோபியல் தொற்றுகள் மற்றும் யோனி வறட்சியடைவதைத் தடுக்கும்.

முட்டை

முட்டை

முட்டையில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் டி சத்து உள்ளது. இது யோனில் ஏற்படும் பல நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் சக்தியைக் கொண்டவையாகும்.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

முழு தானியங்களில் உள்ள சத்துக்கள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியைத் தூண்டி, தொற்றுகள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Can Keep Vaginal Diseases At Bay!

Here is a list of foods that can keep vaginal diseases at bay. Take a look and do include them more often.
Story first published: Monday, February 20, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter