இரத்தக்குழாய்களை சுத்தம் செய்ய சாப்பிட வேண்டிய உணவுகள்!

Written By:
Subscribe to Boldsky

கார்டிவாஸ்குலர் இருதய நோய் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு தான். அதிகப்படியான மக்கள் இதனால் இறந்து கொண்டு இருக்கிறார்கள். இரத்தக்குழாய்கள் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை இருதயத்திற்கு எடுத்து செல்கின்றன. ஆரோக்கியமான இரத்தக்குழாயானது வலிமையானதாகவும், அசைவு தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

ஆனால், உடலில் கொழுப்பு அதிகமாக சேரும் போது, இரத்தக்குழாயின் ஆரோக்கியம் குறைகிறது. இது இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இது ஒரே இரவில் நடக்க கூடியது அல்ல. இந்த அடைப்பு ஏற்பட பல நாட்கள் ஆகும். இந்த அடைப்புகள் ஏற்படாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பூண்டு

1. பூண்டு

பூண்டில் நிறைய ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளன. இது இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. தினசரி பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள எல்டிஎல் கொழுப்பு குறைகிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

தினமும் ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டினை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அல்லது பூண்டினை, சூப், சாலட் போன்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.

2. மாதுளை

2. மாதுளை

மாதுளையில் அதிகளவு ஆன்டி ஆகிஸிடண்டுகள் உள்ளது. இது இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்க உதவுகிறது. தினமும் ஒன்று முதல் இரண்டு மாதுளைகளை தினமும் சாப்பிடலாம். அல்லது புதிதாக தயாரிக்கப்பட்ட மாதுளை ஜீஸை தினமும் பருகலாம்.

3. க்ரீன் டீ

3. க்ரீன் டீ

க்ரீன் டீயில் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளது. இது இரத்த குழாயை சுத்தம் செய்துவது மட்டுமில்லாமல் அவற்றை ஆரோக்கியமாக பாதுகாக்கவும் உதவுகின்றன. இது இருதய நோய் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கவும் உதவுகின்றன. தினமும் இரண்டு முதல் மூன்று கப் க்ரீன் டீ பருகுவது ஆரோக்கியமாக இருக்க உதவும்.

4. கீரைகள்

4. கீரைகள்

கீரைகள் மிகவும் சுவையான மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தவைகளாகும். இவற்றில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. கீரைகளில் நைட்ரிக் ஆக்சைடு உள்ளது. இதில் விட்டமின் ஏ மற்றும் சி அதிகளவில் உள்ளது. இது கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதில் பொட்டாசியம், போலிக் அசிட் ஆகியவை உள்ளன. தினமும் அரைகப் அளவாவது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

6. அவோகேடா

6. அவோகேடா

அவோகேடாவில் தேவையான அளவு நல்ல கொழுப்பு உள்ளது. இது அதிக ஊட்டச்சத்துள்ள உணவாகும். இது இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் அளவை குறைத்து, எச்.டி.எல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதில் விட்டமின் இ அதிகளவில் உள்ளது. இரத்த அழுத்தத்தை குறைக்கவும் இது உதவுகிறது. தினமும் அரை அவோகேடாவை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

five foods You Should Eat Daily for Clean Arteries

five foods You Should Eat Daily for Clean Arteries
Story first published: Monday, September 18, 2017, 12:30 [IST]