என்ன விலை கொடுத்தாலும், சர்க்கரை நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்!

Written By:
Subscribe to Boldsky

சர்க்கரை நோயானது அவ்வளவு கொடியதல்ல, நீங்கள் உங்களது உடல் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் வரை.. சர்க்கரை நோயாளிகள் சில அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு அடங்கிய உணவுகளை தவிர்ப்பது மிகச்சிறந்தது.

சில உணவுகளில் சர்க்கரை மறைந்திருக்கும் இவற்றை நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டியது அவசியம். இந்த உணவுகளை தவிர்ப்பதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். இந்த பகுதியில் நீங்கள் தினசரி உணவில் தவிர்க்க வேண்டிய சில உணவு பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. டிரை ப்ரூட்ஸ் :

1. டிரை ப்ரூட்ஸ் :

நட்ஸ் மிகவும் சத்தானது தான் என்றாலும், நீங்கள் டைப் 2 சர்க்கரை நோயாளியாக இருந்தால் இதனை சாப்பிடும் முன்னர் சற்று யோசிக்க வேண்டியது அவசியமாகும். இந்த ட்ரை ப்ரூட்ஸ்களில் இயற்கை சர்க்கரை அடங்கியுள்ளது. ஆனால் பிஸ்கட் சாப்பிடுவதை விட இது சிறந்தது தான் என்றாலும் கூட இது இரத்த சர்க்கரை அளவை சற்றே அதிகரிக்கும். இவற்றிற்கு பதிலாக புத்தம் புதிய ஸ்ட்ராபேரி அல்லது திராட்சை சாப்பிடலாம்.

2. அரிசி, பிரட், மாவு பொருட்கள் :

2. அரிசி, பிரட், மாவு பொருட்கள் :

சர்க்கரை நோயாளிகள் முதலில் கார்போஹைட்ரைட் உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். அரிசி, மாவினால் செய்யப்பட்ட உணவு பொருட்கள், பிரட், பாஸ்தா போன்ற உணவு வகைகளை தவிர்த்துப்பது நல்லது. இது உங்களது உடலின் குளூக்கோஸ் அளவை பாதிக்கும். ஒட்ஸ், பார்லி, பிரவுன் அரிசி போன்றவை உங்களுக்கு மிகச்சிறந்தது.

3. முழு கொழுப்பு பால் பொருட்கள்

3. முழு கொழுப்பு பால் பொருட்கள்

முழுமையாக கொழுப்பு உள்ள பால் பொருட்கள், வெண்ணெய், ஐஸ் க்ரீம், முழுமையான கொழுப்பு கொண்ட யோகார்ட், கொழுப்பு கொண்ட தயிர் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. நீங்கள் பால் பொருட்களை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் கூட சிறந்தது தான்.

4. கொழுப்பு உள்ள மாமிசம்

4. கொழுப்பு உள்ள மாமிசம்

மாமிசத்தில் உள்ள கொழுப்புகள் உங்களது உடலின் கொழுப்பு அளவை அதிகரிக்கின்றன. இவை சர்க்கரை நோயாளிகளுக்கு எளிதில் இதய பாதிப்புகள் வரவும் காரணமாக இருக்கின்றன. நீங்கள் மீன் போன்ற கொழுப்பு இல்லாத மாமிசங்களை சாப்பிடலாம்.

5. பொரித்த உணவுகள்

5. பொரித்த உணவுகள்

பொரித்த உணவுகளை சாப்பிடுவது டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நிச்சயமாக சிறந்தது அல்ல. உருளைக்கிழங்கு சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், பொரித்த கோழிக்கறி, ஆகியவற்றை கட்டாயமாக தவிர்க்க வேண்டியது அவசியம். கடைகளில் வாங்கி உண்ணும் உணவுகளினால் உங்களது உடலின் கொழுப்பு அளவு அதிகரிக்கும்.

6. ஆல்கஹால்

6. ஆல்கஹால்

பொதுவாகவே ஆல்கஹால் உடலுக்கு தீங்கு விளைவிப்பது என்றாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் அதிகமாக தீங்கு விளைவிக்கக்கூடியது. நீங்கள் ஆல்கஹால் அருந்துபவராக இருந்தால், உங்களது மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலான ஆல்கஹாலை அருந்தலாம்.

7. ஜூஸ்கள்

7. ஜூஸ்கள்

சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிடுவது சிறந்தது தான். ஆனால் ஜூஸ் பருகுவதற்கு முன்னால் அதில் அடங்கியுள்ள சோடா, சர்க்கரை ஆகியவற்றின் அளவுகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

8. வாழைப்பழம் மற்றும் தர்பூசணி

8. வாழைப்பழம் மற்றும் தர்பூசணி

வாழைப்பழம் மற்றும் தர்பூசணி ஆகியவை சத்தானவை தான் என்றாலும், இதனை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

9. பிட்சா

9. பிட்சா

பிட்சா மிகவும் சுவையான உணவு, இது அனைவருக்கும் பிடித்த உணவு என்றாலும் கூட, கடைகளில் கிடைக்கும் பிட்சாகளில் அதிக கலோரிகள் உள்ளன. எனவே நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடுவது சிறந்தது.

10. வெளியில் கிடைக்கும் உணவுகள்

10. வெளியில் கிடைக்கும் உணவுகள்

நீங்கள் பெரும்பாலும், சைனீஸ் உணவுகள், ரேஸ்டாரண்டுகளில் கிடைக்கும் உணவுகள் போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகச்சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Diabetics Should Avoid these Foods

Diabetics Should Avoid these Foods
Story first published: Thursday, August 17, 2017, 12:41 [IST]
Subscribe Newsletter