உங்க குடலியக்கம் மோசமாக உள்ளதா? இதோ அதை சரிசெய்ய உதவும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

குடலியக்கம் நன்கு சீராக இருந்தால் தான், நாள் முழுவதும் அசௌகரியமின்றி நன்கு சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். ஒருவருக்கு குடலியக்கம் மோசமாக இருந்தால், கழிவுகள் உடலில் இருந்து வெளியேறாமல், உடலிலேயே தங்கி உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

Top Super Foods That Can Help You Fix Your Bowel Movements

எனவே தினமும் தவறாமல் மலத்தை வெளியேற்ற வேண்டியது அவசியம். மேலும் மலச்சிக்கல் ஏற்பட்டால், சாதாரணமாக நினைக்காமல், அதை சரிசெய்யும் முயற்சியில் உடனே ஈடுபட வேண்டும். அதற்கு உண்ணும் உணவுகளின் மீது கவனத்தை செலுத்த வேண்டும்.

சரி, இப்போது குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவும் உணவுகள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழங்கள்

பழங்கள்

பழங்களான ஆரஞ்சு, வாழைப்பழம், பேரிக்காய், ஆப்பிள் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இஇது குடலியக்கத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. ஆகவே இப்பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்து, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள்.

சாதம்

சாதம்

சாதத்தை விரும்பி சாப்பிடுபவர்களா? அப்படியெனில் உங்களுக்கு ஒரு நற்செய்தி. அது என்னவெனில், சாதம் குடலியக்கத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுவும் சாதம் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் யூரிக் அமிலத்தை வெளியேற்றும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு பிரியரா நீங்கள்? அதற்காக பிரெஞ்சு ப்ரைஸ் சாப்பிடுவது நல்லதல்ல. உருளைக்கிழங்கை தோலுடன் வேக வைத்து சாப்பிட வேண்டும். ஏனெனில் அதன் தோலில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. இதனால் செரிமானம் சீராக நடைபெறுவதுடன், குடலின் ஆரோக்கியமும் மேம்படும்.

பூசணிக்காய்

பூசணிக்காய்

குடலியக்கத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் பூசணிக்காய். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, நீர்ச்சத்தும் ஏராளமாக உள்ளது. ஒருவேளை உங்களுக்கு பூசணிக்காயின் சதைப்பகுதி இல்லாவிட்டால், அதன் விதைகளை சாப்பிடுங்கள்.

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்

பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், குடலின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், உடலில் இருந்து கழிவுகள் சீராக வெளியேற்றப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Super Foods That Can Help You Fix Your Bowel Movements

Here are top super foods that can help you fix your bowel movements. Read on to know more...
Story first published: Monday, December 26, 2016, 12:00 [IST]