திணையை எப்படி சமைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

திணை என்பது ஒரு வகையான தானியமாகும். உலகிலேயே அதிகமாக பயிரிடப்படும் தானிய வகைகளுள் இரண்டாவது இடத்தில் இருப்பது திணை தான். இது சீனா, இந்தியா போன்ற நாடுகளில் அதிகமாக விளையும் தானிய வகைகளுள் ஒன்று.

உங்களுக்கு உடல் நலத்தின் மீது அதிக அக்கறை இருந்தால், திணையை காலை உணவாக எடுத்து வாருங்கள். இதனால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். உங்களுக்கு திணையை எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரியாதென்றால் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு திணையை உட்கொள்வதால் பெறும் நன்மைகளும், அதனை எப்படி சமைத்து சாப்பிடலாம் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சக்தி வாய்ந்த ஃப்ளேவோனாய்டுகள்

சக்தி வாய்ந்த ஃப்ளேவோனாய்டுகள்

திணையில் ஏராளமான அளவில் சக்தி வாய்ந்த ஃப்ளேவோனாய்டுகளான க்யூயர்சிடின் மற்றும் கெம்ப்பெரால் போன்றவை உள்ளது.

நார்ச்சத்து

நார்ச்சத்து

திணையில் மற்ற தானியங்களை விட அதிக அளசில் நார்ச்சத்துக்கள் உள்ளது. அதில் ஒரு கப் சமைக்காத திணையில் 17-27 கிராம் நார்ச்சத்துள்ளது என்றால் பாருங்கள்.

புரோட்டீன் மற்றும் அமினோ அமிலங்கள்

புரோட்டீன் மற்றும் அமினோ அமிலங்கள்

திணையில் மற்ற தாவர உணவுகளை விட புரோட்டீன் அதிகமாகவும், அத்தியாவசிய அமினோ அமிலங்களும் ஏராளமாக உள்ளது.

க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு

க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு

திணையில் மற்ற உணவுகளை விட க்ளைசீமிக் இன்டெக்ஸ்
குறைவு. அதே சமயம் இதில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது.

கனிமச்சத்துக்கள் அதிகம்

கனிமச்சத்துக்கள் அதிகம்

திணையில் கனிமச்சத்துக்கள் அதிகம். அதே நேரத்தில் பைட்டிக் அமிலமும் அதிகம் என்பதால் இது கனிமச்சத்துக்களை முற்றிலும் உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும். ஆனால் இதனை ஊற வைத்து பயன்படுத்தினால் அதில் உள்ள பைட்டிக் அமிலத்தை வெளியேற்றலாம்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்

திணையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. அதிலும் இதனை நீரில் ஊற வைத்து முளைக்கட்டி சாப்பிட்டால், இதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவு இன்னும் அதிகமாக இருக்கும்.

எடை குறையும்

எடை குறையும்

திணையில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகமாகவும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் இருப்பதால், இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

திணை கார பொங்கல்

திணை கார பொங்கல்

தேவையான பொருட்கள்:

திணை - 100 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
நெய் - 100 கிராம்
மிளகு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
முந்திரி - 25 கிராம்

திணை கார பொங்கல்

திணை கார பொங்கல்

செய்முறை:

முதலில் திணையையும், பாசிப்பருப்பையும் 3 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சேர்த்து வேக வைக்கவும். பின் ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வறுத்து, திணையுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், திணை கார பொங்கல் ரெடி!

திணை கீரை ரொட்டி

திணை கீரை ரொட்டி

தேவையான பொருட்கள்:

திணை மாவு - 1/2 கிலோ
முருங்கைக்கீரை - 1 கட்டு
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

திணை கீரை ரொட்டி

திணை கீரை ரொட்டி

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில், திணை மாவு, உப்பு, மிளகுத்தூள், கீரை என அனைத்தையும் போட்டு, தேவையான அளவு நீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். பின் அதை உருண்டையாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ளவும். பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, நெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால் திணை கீரை ரொட்டி ரெடி!

திணை உப்புமா

திணை உப்புமா

தேவையான பொருட்கள்:

ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
சிவப்பு குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
மஞ்சள் குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
பூண்டு - 6 பற்கள்
திணை - 2 கப்
தண்ணீர் - 4 கப்
வெஜிடேபிள் ஸ்டாக் - 2 கப்

திணை உப்புமா

திணை உப்புமா

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கிளறவும்.

பின் அதில் சிவப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாயை சேர்த்து குறைவான தீயில் வேக வைக்கவும்.

பின்பு அதில் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தண்ணீர் மற்றும் வெஜிடேபிள் ஸ்டாக் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் திணையை போட்டு, மூடி வைத்து 30 நிமிடம் வேக வைக்கவும். தினை நீரை உறிஞ்சி நன்கு வெந்ததும், தீயை அணைத்து 5-10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Quinoa Recipes For A Healthy & Delicious Start Of Your Day

Here are some quinoa recipes for a healthy and delicious start of your day. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter