அடிக்கடி பசி ஏற்பட்டு தொப்பை வருவதைத் தடுக்கும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

நம்மில் சிலருக்கு அடிக்கடி பசி எடுக்க ஆரம்பிக்கும். இப்படி அடிக்கடி பசி எடுப்பதால் கண்ட உணவுகளை உட்கொள்ள நேர்ந்து, உடல் பருமனால் மிகுந்த அவஸ்தைப்பட நேரிடுகிறது. அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கவே முடியாதா என்று நீங்கள் கேட்கலாம்.

Healthy Foods That Naturally Suppress Your Appetite

நிச்சயம் முடியும். பசியைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட உணவுகள் உதவும். இந்த உணவுகள் வயிற்றில் ஹார்மோன்களை வெளியிடச் செய்து, வயிற்றை நிரப்பி, அடிக்கடி ஏற்படும் பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். சரி, இப்போது பசியைக் கட்டுப்படுத்தும் அந்த உணவுகள் எவையென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. அதிலும் ஒரு நாளைக்கு 3 ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், பசி கட்டுப்பட்டு, உடல் எடை நாம் நினைப்பதை விட அதிகமாக குறையும்.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் மிகவும் குறைவு என்பதால், இரத்த சர்க்கரை சீரான அளவில் பராமரிக்கப்படும்.

முட்டைகள்

முட்டைகள்

முட்டைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த புரோட்டீன் பசியைத் தூண்டும் ஹார்மோனைக் கட்டுப்படுத்தும். ஆகவே தான் காலை உணவின் போது முட்டையை சேர்த்துக் கொண்டால், நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட முடிகிறது.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட் கலோரி குறைவான ஆரோக்கியமான உணவுப் பொருள். இதில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளதால், பசி கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடும் சீராக இருக்கும்.

காளான்

காளான்

காளான்களில் கலோரிகள் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களான செலினியம் மற்றும் நியாசின் அதிகம் உள்ளதால், இது உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, நீண்ட நேரம் பசியெடுக்காமல் செய்யும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

எடையைக் குறைக்க மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைப்பதுடன், தொப்பை வருவதையும் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Healthy Foods That Naturally Suppress Your Appetite

Here are some healthy foods that naturally suppress your appetite. Read on to know more...
Story first published: Friday, December 30, 2016, 16:51 [IST]
Subscribe Newsletter