இறைச்சிக்கு இணையான புரத சத்துக்கள் இருக்கும் சைவ காய்கறி உணவுகள்!!

Posted By:
Subscribe to Boldsky

குளிர் காலத்தில் அடிக்கடி உடலுக்கு ஏதேனும் குறைபாடுகள் வந்துக் கொண்டே இருக்கும். பெரும்பாலும், காய்ச்சல், சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவை ஏற்படும். குளிர் காலம் என்றாலே இவ்வாறு ஏற்படும் எனிலும் கூட அடிக்கடி இப்படி குறைபாடுகள் வர காரணமாக இருப்பது நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தான்.

நமது உடலுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேவை. அதில் முக்கியமானது புரதச்சத்து. இதுதான் நமது உடலில் வலு அதிகரிக்க உதவுகிறது. இறைச்சி உணவில் புரதம் இருப்பது உண்மை தான், ஆனால் தினமும் இறைச்சி உண்டால் உடலில் செரிமானத்தில் இருந்து சிறுநீரக கோளாறு வரை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

எனவே, இறைச்சிக்கு இணையான புரத சத்துக்கள் இருக்கும் சைவ காய்கறி உணவுகளை உண்பது இதற்கான சரியான தீர்வாக இருக்கும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸை வேக வைத்து உப்பு, மிளகு சேர்த்து சூப் போன்று சமைத்து சாப்பிடலாம். இந்த குளிர் காலத்திற்கு இது ஒரு சிறந்த உணவாக இருக்கும். இதன் மூலம் அதிக புரதச்சத்து கிடைக்கும்.

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணி மிகவும் விலைமலிவான காய்கறி ஆகும். தினமும் அங்காடி தெருவில் புதிய சுத்தமான பச்சை பட்டாணியை கிடைக்கும். இதை சாம்பார், குழம்பு, பொரியல் என எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம்.

பன்னீர்

பன்னீர்

பன்னீரை நீங்கள் விரும்பும் உணவில் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது உணவில் ருசியை சேர்ப்பது மட்டுமின்றி, உடலில் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

பயறு உணவுகள்

பயறு உணவுகள்

வருடம் முழுக்க கடைகளில் கிடைக்கும் உணவுப் பொருள் பயிறு வகைகள். இதை நீரில் ஊறவைத்து பிறகு சமைத்து சாப்பிடுவதால் உடல் வலிமை ஆகும். இதை சமைத்த நீரை பருகுவது கூட உடலுக்கு நல்லது தான்.

கெட்டி தயிர்

கெட்டி தயிர்

இரட்டிப்பு மடங்கு புரதச்சத்து உள்ள உணவுப் பொருள் கெட்டி தயிர். காய்கறிகளுடன் கெட்டி தயிரை சேர்த்து சாப்பிடுவதும் கூட உடலுக்கு நல்லது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Meat Free Protein Sources

Five Meat Free Protein Sources
Story first published: Saturday, January 9, 2016, 15:39 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter