For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் உணவுப் பொருட்கள்!!!

By Maha
|

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதில் நோயெதிர்ப்பு மண்டலம் தான் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஒருவரின் உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையோடு இருந்தால், நோயின்றி வாழலாம். ஏனெனில் அது தான் உடலைத் தாக்கும் கிருமிகளை அழிக்கும் ஆன்டி-பாடிகளுக்கு கட்டளையிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

ஆனால் நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை நாம் உண்ணும் ஒருசில உணவுகள் வலிமையிழக்கச் செய்து கொண்டிருக்கின்றன. அந்த உணவுகள் என்னவென்று படித்து அவற்றை உணவில் அதிகம் சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். சரி, இப்போது நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காபி

காபி

என்ன தான் காபி சுறுசுறுப்பை வழங்கினாலும், அளவுக்கு அதிகமான அளவில் காப்ஃபைன் நிறைந்த காபியைக் குடித்தால், தூக்கமின்மை ஏற்பட்டு, அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையிழக்கும்.

சோடா

சோடா

சோடா குடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் சோடாவில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருப்பதோடு, அதில் பாஸ்பாரிக் ஆசிட் உள்ளதால், அது உடலில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவைக் குறைக்கும்.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள்

எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், உடல் எடை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமையிழக்கும். எனவே எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

சமீபத்திய ஆய்வு ஒன்றில் மாட்டிறைச்சி உட்ல் ஆரோக்கியத்தைக் கெடுப்பதாக தெரிய வந்துள்ளது. அதிலும் மாட்டிறைச்சியில் எளிதில் செரிமானமாகாத சர்க்கரை உள்ளது. அந்த சர்க்கரை தான் பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஜங்க் உணவுகள்

ஜங்க் உணவுகள்

ஜங்க் உணவுகள் சுவையாக இருந்தாலும், ஆரோக்கியம் என்று வரும் போது அது மிகவும் தீமையை விளைவிக்கக்கூடியது. முக்கியமாக ஜங்க் உணவுகள் முதலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையிழக்கச் செய்வதால் தான், அவற்றை அதிகம் உண்பர்களுக்கு கண்ட நோய்கள் தாக்குகின்றன.

நட்ஸ்

நட்ஸ்

ஆம், நட்ஸ் கூட நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும். குறிப்பாக இதனை ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. எனவே அளவாக உட்கொண்டு பலனைப் பெறுங்கள்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. மேலும் ஆராய்ச்சி ஒன்றில், ஆல்கஹாலை அதிகமாக குடிக்கும் போது, அதனால் உடலில் வெள்ளையணுக்களின் அளவு குறைவதாக தெரிய வந்துள்ளது. எனவே ஆல்கஹால் குடிக்கும் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட ஆரம்பியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Foods That Destroy Immune System

It is essential to keep our immune system functioning well. Sleep and exercise are important while diet also plays a significant role here.
Desktop Bottom Promotion