ஆண்களின் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

வயது அதிகரிக்க அதிகரிக்க எலும்புகளின் அடர்த்தி குறைய ஆரம்பித்து, ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்பட்டு, அதன் காரணமாக பல்வேறு சிக்களுக்கு உள்ளாகக்கூடும். எலும்புகளின் அடர்த்தி பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் குறையும். எனவே வயது ஏற ஏற சரியான உணவுப் பொருட்களை உட்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியது அவசியம்.

எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் பழக்கவழக்கங்கள்!!!

சொல்லப்போனால் உலகம் முழுவதும் பெண்களை அதிகம் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு முறிவு நோய் ஆண்களையும் தாக்குகிறது. இந்நோயானது கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும். இந்நோய் தாக்கினால் அதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. எனவே இந்நோய் வராமல் தடுப்பது தான் சிறந்த வழி. அதற்கு போதிய உணவுகளை உட்கொண்டு வரை வேண்டும்.

எலும்புகள் வலிமையோடு இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க...

சரி, இப்போது ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு முறிவு நோய் தாக்காமல், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து அவற்றை உணவில் சேர்த்து எலும்புகளின் வலிமையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

எலும்பின் வலிமையை அதிகரிக்க எளிய ஆரோக்கிய டிப்ஸ்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

எலும்புகளை வலிமையோடு வைத்துக் கொள்ள கால்சியம், வைட்டமின் சி சத்துக்கள் மட்டும் போதாது. வைட்டமின் கே நிறைந்த காய்கறிகளையும் உட்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு 30 வயதிற்கு மேல் தினமும் கீரைகளை உணவில் சேர்ப்பதோடு, முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் போன்றவற்றையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வால்நட்ஸில் ஜிங்க் அதிகம் உள்ளது. இது ஆண்களுக்கு மிகவும் இன்றியமையாத சத்தும் கூட. இதனால் எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பதோடு, விந்தணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

பீர்

பீர்

எலும்புகளின் வலிமைக்கு சிலிகானும் அவசியம். இத்தகைய கனிமமானது பீரில் உள்ளது. எனவே பீர் விரும்பும் ஆண்கள், இதனை அளவாக எடுத்துக் கொள்வது எலும்புகளுக்கு நல்லது. இது கட்டாயம் அல்ல, விருப்பமில்லாவிட்டால் தவிர்த்திடுங்கள்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் உதவி புரியும். எனவே அவ்வப்போது சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை உட்கொண்டு வாருங்கள்.

நட்ஸ்

நட்ஸ்

நட்ஸில் மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் வளமாக உள்ளது. இவை எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்த உதவுவது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

மீன்

மீன்

மீனில் கால்சியத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. எனவே வாரம் ஒருமுறை மீனை உணவில் சேர்த்து வாருங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

தினம் ஒரு வாழைப்பழத்தை உட்கொண்டு வருவது, உடலுக்கு வேண்டிய பொட்டாசியத்தைப் பெற உதவும். அதிலும் தினமும் உடற்பயிற்சி செய்த பின்னர் வாழைப்பழத்தை எடுத்து வருவது நல்லது.

உலர் திராட்சை

உலர் திராட்சை

உலர் திராட்சையில் மக்னீசியம் வளமாக நிறைந்துள்ளது. எனவே இதனை ஸ்நாக்ஸ் நேரத்தில் ஆண்கள் உட்கொண்டு வருவது, எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவும்.

நண்பர்களே! உங்களுக்கு வேறு ஏதேனும் உணவுப் பொருட்கள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Increase Bone Density In Men

How to increase bone density? Well the rights foods can do it. Here are the foods to increase bone density.
Story first published: Monday, August 31, 2015, 14:39 [IST]